siruppiddy

திங்கள், 14 ஏப்ரல், 2014

தமிழ் புதுவருடநல்வாழ்த்துக்கள் .2014ம்

அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இதயம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்கள்.
 2014ம் ஆண்டில் உதயமாகும் “ஜய” புதுவருடமானது அனைத்து தமிழ் மக்களின் வாழ்விலும் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இந்த இணையங்களின்
 இதயம் கனிந்த சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
“அத்தோடு துன்புறும் எமது தமிழ் உறவுகளை மனதில் கொண்டு அவர்களுக்கு  ஆனந்தமளிப்பதுடன், புதுவருட நாளில் பிற உயிர்களை வதைத்து அவற்றின் ஊணை உண்டு இன்பம் காணாது. சைவ உணவு உண்டு தேவையற்ற கேளிக்கை நிகழ்வுகளை இயன்ற வரை நீக்கி இறை வழிபாட்டு நாளாக கொள்ளுமாறும் வேண்டுகின்றேன்.”

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

2,000 படையினர் பங்கேற்பு கோபிக்கு எதிரான முன்னெடுப்பில்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டதாக வன்னி படைத் தலைமையகம் தெரிவித்தது.

நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற் இராணுவ முன்னெடுப்பில் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தென்னாபிரிக்கா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிகழ்ச்சி நிரல்கள்!

திர்வரும் 9ம் திகதியன்று தென்னாபிரிக்காவுக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு அங்கு 10ம் திகதி  முதல் 13ம் திகதி வரை நான்கு நாட்கள் தென்னாபிரிக்க அரசுத் தலைவர்களுடனும் ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுக்களில் ஈடுபடும்.

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில் செல்லும் இக்குழுவில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் செயலாளர் நாயகமான மாவை. சேனாதிராஜா எம்.பி. தற்போது நாட்டுக்கு வெளியே உள்ளார். அவர் சில சமயங்களில் இலங்கைக்கு வராமல் நேரடியாகத் தென்னாபிரிக்காவுக்குச் சென்று கூட்டமைப்புக் குழுவுடன் இணைந்துகொள்வார் என்று கூறப்பட்டாலும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தக் குழுவில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜாவும் இடம்பெறுவார் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டமைப்புக் குழுவினர் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களிலும் ஜொகன்னர்ஸ் பேர்க், பிரிட்டோரியா ஆகிய இடங்களில் பேச்சு நடத்துவர்.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை டேர்பனுக்குச் செல்லும் குழுவினர் அங்கு தென்னாபிரிக்கத் தமிழர்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசிவிட்டு அங்கிருந்து நேரடியாக இலங்கைக்குப் புறப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்குழுவினர் தென்னாபிரிக்காவில் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் மெயிட்டி நெக்கோனா அம்மையார், பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம், முன்னாள் அரசமைப்பு நீதிமன்ற நீதியரசர் அல்பி சக்ஸ், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்க ஜனாதிபதி சுமாவினால் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமபோசா ஆகியோரை சந்தித்துப் பேசுவர்.

தென்னாபிரிக்காவின் இந்திய பூர்வீகக் குடியைச் சேர்ந்தவரும் தென்னாபிரிக்காவில் சிவில் யுத்தத்தின் பின்னர் இணக்கத்தீர்வு ஏற்படுத்தப்பட்ட சமயத்தில் அரசியல் சாசன பிரதி அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்த மொகமட் வலி மூசாவையும் அவர்கள் சந்தித்துப் பேசுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டமைப்புக் குழுவினரின் தென்னாபிரிக்க நிகழ்ச்சி நிரலில் தென்னாபிரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி சுமாவை அவர்கள் சந்திப்பது பற்றிய குறிப்பு ஏதும் இல்லை.

எனினும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் இறுதி நேரத்தில் நிகழ்ச்சி நிரலில் அந்தச் சந்திப்பும் சேர்த்துக் கொள்ளப்படலாம் என ஒரு தகவல் தெரிவித்தது.

www.nilavarai.com