siruppiddy

வெள்ளி, 28 நவம்பர், 2014

பாராளுமன்றில் மாவீரரை நினைவுகூர்ந்த எம்.பி.ராதிகா

 தமிழீழத்துக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபைஈசன் உரையாற்றியுள்ளார்.

கனடியத் தமிழர்களின் வரலாற்றில் அவர்கள் நவம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடுவார்கள்.

ரிமம்பரன்ஸ் டே எனப்படும் இறந்த கனடியப் படைவீரர்களை நினைவுகொள்ளும் நாளும் தமிழ் மாவீரர்களின் நாளுமே அதுவாகும் என கனடியப் பராளுமன்றத்தில் இராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்தார்.

கனடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் தொடர்ந்து பேசுகையில், தங்களது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்தவர்களைக் கொண்டாடுவதானால் நவம்பர் மாதம் வாழ்வியலின் அழகை வெளிக்கொணரும் ஒரு மாதமாக திகழ்கிறது.

யுத்தத்தில் இறந்தவர்களை மாத்திரமல்ல, யுத்தத்தில் அகப்பட்டு இறந்த சகல வயதுடைய பொதுமக்களையும் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் வாழ்வதற்காக தங்களை அர்ப்பணித்தவர்களையும் கொண்டாடுகிறோம்.

ஈழத்திருநாட்டிலே இடம்பெற்ற வன்முறைகளால் போரின் போதான ஒரு சிறுமியாகவே நான் பிறந்தேன். வன்முறைகளும் இனங்களுக்கிடையேயான பிரிவும், மத வேறுபாடுகளும் இன்னமும் அந்த நாட்டில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன என இராதிகா மேலும் தனதுரையில் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 26 நவம்பர், 2014

தலைவனே பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் !

   60 வது அகவை காணும் தலைவனே உலகம் உன் வரவுக்காய் காத்து நிற்கிறது தலைவா!
உணர்வுத் தமிழர் துயரம் துடைக்க வா தலைவா!
புலம்பெயர் தமிழர் கல்வியை வளமாக்கிய தலைவா!

புதியதோர் வழி காட்டு, எமது இன எழுச்சிக்காய்
சூரியப் புதல்வரே! தமிழருக்கு சுதந்திரம் பெறவந்த தேவனே!
சூரியக் காலத்தில் நாம் ஈழம் பெறுவது உறுதி.

உயிர் பிரியும் முன் உங்கள் விழிகளைக் காண்போம்!
உறுதி எடுத்துத் தான் நாம் தேசப்பற்றோடு வாழ்கிறோம்!
உங்கள் அகவை அறுபது தமிழருக்கு விடிவுக்காலம் ஆகட்டும்!
உணர்வுத் தமிழினம் ஓர் அணியாய் உங்கள் பாதம் தொடரட்டும்!
பாரெங்கும் வாழும் தமிழர் உங்கள் பெயர் சொல்லிப்பாட
பல்லாண்டு வாழ வேண்டுமென நாம் வாழ்த்தி நிற்கிறோம்!

உலகிலுள்ள மற்றய இனத்தவர்கள் போல ஈழத்தமிழினமும் சுதந்திரம் பெற்ற இனமாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தமிழினம் விடுதலை பெற எந்த ஒரு நாட்டின் உதவியுமின்றி சொந்த மக்களின் பங்களிப்புடன், ஒரு நாட்டிற்கு தேவையான சகல உட்கட்டுமானங்களுடனும், தரை,கடல்,ஆகாயப்படைகளை அமைத்து வீரமுடன் அடக்குமுறையாளர்களை எதிர்த்துப் போராடி, உலகின் ஒரு மூலையிலே முடக்கப்பட்டுக்கிடந்த தமிழர்களை ‘நாம் ஈழத்தமிழர்’ என்று நெஞ்சை நிமிர்த்தி தலை நிமிர்ந்து நடக்க வைத்த எமது தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கட்கு டென்மார்க் கலை பண்பாட்டுக் கழகம் 60ம் ஆண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது, 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 6 நவம்பர், 2014

பிரபாகரன் கடல் உயிரினங்களைப் பாதுகாக்க உதவினார்! –வன அதிகாரி

இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பெரும் உதவியாக இருந்தார்
என்று பிரதான வன தலைமைப் பாதுகாவலரும், தமிழ்நாட்டின் தலைமை வனவாழ் உயிரினங்களின் மேற்பார்வையாளருமான வி.கே.மெல்கானி தெரிவித்துள்ளார்.
கடலாமைகளைப் பிடித்தலைத் தடுத்தல் மற்றும் மீன்பிடி தொடர்பான நடைமுறைகள் குறித்து, இந்தியக் கடலோரக் காவல்படை, வன, மீன்பிடி, காவல்துறை இளம் அதிகாரிகளுக்கு அளித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், அளவுக்கதிகமான மீன்பிடி,  தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த வரை, இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா வரை, கடல்வாழ் பாலூட்டிகளுக்குப் பாதுகாப்பான இடமாக விளங்கியது.
அந்தப் பகுதியில், பாதுகாப்பும் ரோந்து நடவடிக்கைகளும், அதிகரித்திருந்தன.
இதனால், அந்தப் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களுக்கு வளமான கடல் வாழ்க்கை கிடைத்திருந்தது.
அதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் எமக்கு உதவியிருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

www.nilavarai.com