siruppiddy

வியாழன், 4 செப்டம்பர், 2014

விசாரணைகளின் போது இனப்படுகொலை குறித்து விசாரணை செய்யப்படும்

சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் போது, சிறிலங்கா அரசாங்கம் புரிந்து இனப்படுகொலைகள் குறித்தும் விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ள சர்வதேச விசாரணைக்குழு இதனை உறுதி செய்திருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின் போது இனப்படுகொலைகள் குறித்த விசாரணை இடம்பெறாது என்று முன்னதாக கூறப்பட்டது.
எனினும் இந்த விடயத்தை உள்ளடக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் சில கோரிக்கை மனு ஒன்றை விசாரணைக்குழுவிற்கு அனுப்பி இருந்தனர். 
இதற்கு விசாரணைக்குழுவில் இருந்து மறுமொழி கிடைக்கப் பெற்றிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதன் படி சிறிலங்காவுக்கு எதிரான விசாரணையில் சர்வதேச குற்றங்கள்என்ற ஒரு விடயம் இருப்பதாகவும், அதன் கீழ், இனப்படுகொலைகள் மீதான விசாரணைகளும் உள்ளடங்கும் என்றும் விசாரணைக்குழு உறுதி செய்திருப்பதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com