siruppiddy

புதன், 29 ஜனவரி, 2014

இலங்கையை எதிர்க்க இந்தியாவுக்குக் கடும் அழுத்தம்;

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கையை, இந்திய அரசு எதிர்க்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழின உணர்வாளர்களை ஒன்று திரட்டிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் “உதயனுக்குத்’ தெரிவித்தார்.   எதிர்வரும் முதலாம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர்.   ஐ.நா. மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை

நிறைவேற்றுவதற்காக இந்திய அரசு செயற்பட வேண்டும். அதற்கு இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.   எவ்வாறான வகையில் அந்த அழுத்தங்களைக் கொடுப்பது, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்பவை தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக நெடுமாறன் உதயனிடம் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com