siruppiddy

ஞாயிறு, 16 மார்ச், 2014

தமிழ்மக்களின் பிரச்சினையை மனதில் கொண்டே

 அமெரிக்கா பிரேரணையை தமிழ் மக்களாகிய எமது பிரச்சினைகளை மனதில் கொண்டுதான் அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது. அந்த வகையிலேயே ஜெனிவாவில் கொண்டு வரப்படும் அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ள என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டமைக்கு காரணம் என்ன என கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை நிருபர் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்கா பிரேரணை ஒன்றை முன்னெடுக்கும் போது அதில் வெற்றியடையும் வகையிலான பிரேரணையொன்றையே முன்வைக்கும்.

ஆகவே ஏனைய நாடுகள் எதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் அதற்கமையத்தான் அமெரிக்கா தனது பிரேரணையை முன்வைத்துள்ளது.

இந்தப் பிரேரணையின் எட்டாவது பிரிவில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கூடாக ஒரு விசாரணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளது.

ஆகவே அதற்கூடாக இந்த விசாரணையை செயற்படுத்தலாம் என்ற எண்ணமும் நிலவுகின்றது.

அந்த அடிப்படையில் தான் நானும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.

அதாவது முழுமையாக அமெரிக்க பிரேரணையை நாங்கள் எதிர்க்கின்றோம் எனத் தெரிவித்தால் நீங்களும் இந்தப பிரேரணையை எதிர்க்கின்றீர்கள். இலங்கை அரசாங்கமும் எதிர்க்கின்றது.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் ஏன் இந்தப் பிரேரணையை முன்வைக்க வேண்டும் என்று அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் நினைக்கலாம்.

இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காக நீர்த்துப்போன ஒரு பிரேரணையாக இருந்தாலும் இந்த பிரேரணை சரியான நிலைக்கு செல்வதாகக் கருதி இந்த பிரேரணைக்கு அனுசரணை வழங்கியிருந்தோம்.

அதேநேரம் இந்தப் பிரேரணையை கூடிய வலுவுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்.

பிரித்தானியா, கனடா அல்லது அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தப் பிரேரணையை வலுவுள்ளதாக மாற்றும் வகையில் செயற்பட்டால் இதில் மாற்றத்தை ஏற்படுத்தி வலுவுள்ளதாக்க முடியும்.

எந்த அளவிற்கு இது நடைமுறைப்படுத்தப்படும் என்று என்னால் இப்போது கூற முடியாதுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com