siruppiddy

புதன், 29 ஜனவரி, 2014

இலங்கையை எதிர்க்க இந்தியாவுக்குக் கடும் அழுத்தம்;

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கையை, இந்திய அரசு எதிர்க்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழின உணர்வாளர்களை ஒன்று திரட்டிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் “உதயனுக்குத்’ தெரிவித்தார்.   எதிர்வரும் முதலாம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன்...

செவ்வாய், 21 ஜனவரி, 2014

தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. மகிந்த ராஜபக்ச பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கே பெறுமதியற்றவர்." முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா  கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடிய உன்னதமான போராளிகளை எதிரியே ஒரு கட்டத்தில் புகழ்வான். துரோகிகளுக்கும் நக்கிப்பிழைப்பவர்களுக்கும் என்றைக்கும்...

வியாழன், 16 ஜனவரி, 2014

சிறைச்சாலையில் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுகின்றனர்

வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை, சிறைச்சாலையின் பெண் அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெண் சிறைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி அடிக்கடி சோதனையிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைதிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். இவ்வாறு கடுமையாக சோதனை இடுவதன் மூலம்...

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

புலிகளோடுஈழத்தமிழர்கள் தொடர்புவைத்தாலும் பிரச்சனை -

 அரசோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனைதான்!  - பிரான்ஸ் தமிழரது குடியுரிமை ரத்து!  இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டதற்காக, ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பிரான்ஸ் மீளப்பெற்றுக்கொண்டுள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்...

www.nilavarai.com