siruppiddy

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நீதிகேட்டு ஐ.நாமுன்றலில் ஒளிப்பட போராட்டம்!

சிறீலங்கா அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன அழிப்பு புகைப்பட கண்காட்சியுடன் மனிதநேய செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள்.

ஐ.நாவின் 25வது மனித உரிமை கூட்டத்தொடர் மார்ச் 3ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள்வரை நடைபெறவுள்ளது. இனஅழிப்பிற்கு நீதி கேட்டு தமிழின அழிப்பு புகைப்பட கண்காட்சி தொடராக ஐ.நா முற்றத்தில் நடைபெறவுள்ளது.

மனிதநேய செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
இனஅழிப்பிற்கு நீதிகேட்டு சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் ஆதாரங்களான புகைப்படங்கள் பன்னாட்டு இராஜதந்திரிகளின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக அனைத்து புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்ட களத்தில் இறங்குமாறு மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீண்டும் தொடங்கியிருக்கிறது ஒரு மிடுக்கு. சர்வதேசம் ஈழத்தமிழரின் பிரச்சினையை பேசுபொருளாக்கி, ஜெனீவா களத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் கூட இருக்கின்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விடயம் மிகப் பிரதான இடத்தை பெறுவதற்கான முன்னாயத்தங்களும், ஆரூடங்களும் இப்போதே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதற்கு வலுவான காரணங்களை இலங்கை இன்னமும் வைத்திருப்பது, முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெறாத எமது விடுதலைப் போராட்டம் மேலும் வீரியம் பெறுவதற்கான வழியை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.

நம்மில் பலர் முள்ளிவாய்க்கால் போரனர்த்தத்தை எம் விடுதலைப் போராட்டத்துக்கு நிகழ்ந்த பெரும் பின்னடைவாகவும், விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கணம் அதுவெனவும் பிரச்சாரம் செய்கின்றனர். இதை முடிவாக வைத்தக் கொண்டு விவாதிக்கின்றனர். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.
முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, சர்வதேசம் நோக்கிய எமது பார்வையையும், சர்வதேசத்தின் எம்மீதான கரிசனையையும் விசாலப்படுத்தியிருக்கின்றது
$ஒரு தீவுக்குள், ஒரு மூலையில் சில வெடிச்சத்தங்களுக்குள் முழங்கிக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் சர்வதேச அரங்கை எட்டியிருக்கிறது. பல தேசங்களில் அறிமுகமும், அனுதாபமும், எம்மை நோக்கி விழுந்திருக்கிறது. இது எமக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி. பயங்கரவாதம், தீவிரவாதம் என எம் போராட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருந்த உலகம், நம் பக்கம் தாவியிருப்பது விடுதலையின் உச்சத்தில் நடந்திருக்கும் ஒருவிடயமாக பார்க்கப்பட வேண்டும். மாறாக இது பின்னடைவோ அல்லது தோல்வியோ அல்ல. அதற்காக அனைத்தையும் உலகம் பார்த்துக்கொள்ளும், நாம் எம் வேலையை பார்த்துக்கொண்டிருந்தால் போதும் என்று பின்வாங்கிக் கொள்வது சரியான செயலல்ல. முன்பை விட பெரும் உத்வேகத்துடனும், அறிவுசார் சாதூர்யத்துடனும் இந்தக் களத்தில் நாம் போராட

வேண்டியிருக்கிறது. முதலில் நாம் இலங்கை அரசு என்ற பயங்கரவாதத்துடன் மட்டுமே போரிட வேண்டியிருந்தது. இப்போது சர்வதேச அரங்கில் பல அணிகள். எமக்கு ஆதரவாகவும், எதிராகவும், இலங்கையை காப்பாற்றும் நோக்கிலும் அணிதிரண்டிருக்கின்றன. இந்தக் களம் அபாயகரமானதும், முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு அணுகப்படவேண்டியதும் ஆகும். ஆனால் நாம் இதில் அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இனப் படுகொலை, இன அழிப்பு, போர்க்குற்றம் என மனித குலத்துக்கு எதிரான அத்தனை குற்றங்களையும் புரிந்திருக்கும் இலங்கை அரசுக்கு தகுந்த பாடம் புகட்டவும், விடுதலையை வென்றெடுக்கவுமான செயற்பாடுகளை கையிலெடுக்க வேண்டும். இந்தக் குற்றங்கள் நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் எம்மிடமும், சர்வசேத சமூகத்திடமும் வலுவாக

இருக்கின்றன. குருதிக் கொப்பளிக்கும் அந்த ஆதாரங்கள் காய்ந்து கருகி, வீணாவதை தடுக்க நாம் ஓரணியில் திரள வேண்டும். எல்லா அணுகுமுறைகளும், தீர்மானங்களும் ஏதோ ஒரு நலனின் அடிப்படையில்தான் முன் மொழியப்படுகின்றன என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. எமக்காக கனிந்திருக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, இறுதி வெற்றியை நாமே பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு படியாக, ஒரு வழியாக நான் ஜெனீவா முன்றலில் நடத்திவரும், இனப் படுகொலை ஆதாரங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுக்கு அனைத்து புலம்பெயர் தமிழர்களும்

ஒத்துழைப்பு வழங்குங்கள். மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற ஐ.நாவின் 25 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடரையும், அதில் கலந்துகொள்ளும் சர்வதேசத்தினரையும் எம் பக்கம் ஈர்க்கும் வகையில் இந்தக் கண்காட்சியை ஏற்பாடுசெய்திருக்கின்றேன். சிறீலங்கா அரசின் சதித் திட்டங்களாலும், எம்மிடையே கலந்துவிட்ட ஒற்றுமையின்மை- துரோகத்தனத்தாலும் ஈழத்திலும், புலத்திலும் சிதைந்துகிடக்கும் நாம் இந்தத் தருணத்திலாவது ஒன்றிணைய வேண்டும். இன விடுதலைப் போராட்டத்தை சிதைத்ததும், மீண்டும் அதை சர்வதேச அரசியல் ஆயுதமாக கையிலெடுத்திருப்பதும் இரண்டே அவைகள்தான். ஒன்று ஐ.நா சபை, மற்றையது ஐரோப்பிய பாராளுமன்றம். இந்த இரு உலகச் சபைகளையும் நம் பக்கம் இழுத்து,

நமது நியாயாதை முரசறைந்து சொல்வதற்கு இனப்படுகொலைக் கண்காட்சி பெருந்துணைபுரியும். இது கடந்த வருட அனுபவமாகவும் இருக்கிறது. எந்தக் காரியங்களும் தனிமனிதர்களால் சாத்தியப்படுத்த முடியாது. ஒரு கருத்தில் திரட்சியான சமூகத்தவராலேயே மாற்றங்களை துரிதப்படுத்திக் கொள்ள முடிகிறது. விதி எம் பக்கம் வந்து நிற்கையில் நம் போராட்டங்களை துரிதப்படுத்தவும், நேர்த்திப்படுத்தவும் வேண்டும். அதற்கான ஒரு வாயிலை இந்த இனப்படுகொலை கண்காட்சி திறக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. அதில் உங்களுக்கும் நம்பிக்கையும், உறுதியும் உண்டு என்ற ஆன்ம உறுதியோடு ஆதரவை வேண்டிநிற்கிறார் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன்.

மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் போது ஜப்பான்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் ஜப்பான் வாக்களிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ஆதரவாகவோ செயற்படாது என தெரிவிக்கப்படுகிறது.

வாக்களிப்பு நடத்தப்பட்டால் வாக்களிப்பில் பங்கேற்காதிருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகத் தகவல்கள் தெரிவக்கின்றன. அமெரிக்கா குறிப்பிடுவதனைப் போன்று இலங்கையின் நிலைமைகள் பாரதூரமாக இல்லை என குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

தனிஈழ சர்வஜென வாக்கெடுப்புக்கு த.தே.கூட்­ட­மைப்பு வர­வேற்பு

இலங்கைத் தமிழ் மக்­களின் பி­ரச்­சி­னைக்கு இலங்கைத் தமி­ழர்கள் மத்­தியில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பினை நடத்­த­வேண்டும் என தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்­துள்­ள­மைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது வர­வேற்­பினைத் தெரி­வித்துள்ளது.

கட்­சியின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இதனைத் தெரி­வித்தார். இலங்கை ஜனா­தி­ப­தி­யி­னு­டை­யதும் அர­சாங்­கத்­தி­னதும் தோல்­வியும் பிழை­க­ளுமே ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­ற­மைக்­கான கார­ணங்­க­ளாக அமை­கின்­றன எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது.

தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரிவித்த கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் வர­வேற்­கின்­றது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் நில­வு­கின்­றன. ஆனால் இவ்­வி­ட­யத்தில் முக்­கி­ய­மாக இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்­களின் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பதில் தோல்வி கண்­டுள்­ளது. இதனால் ஏனைய பல்­வேறு தீர்­மா­னங்­களும் கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன எனவும் தெரவித்தார்.

இலங்கை அர­சாங்­கத்­தினைப் பொறுத்­த­வ­ரையில் யுத்­தத்­திற்குப் பின்னர் தமிழ் மக்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்குப் பதி­லாக அவர்கள் மேலும் மேலும் தமிழ்இ சிங்­கள உறவில் விரி­சல்­களை ஏற்­ப­டுத்­து­கின்ற செயற்­பா­டு­க­ளையே செய்­துள்­ளனர்.

இன்றும் இரா­ணுவ மயப்­ப­டுத்­து­கின்ற செயற்­பா­டுகள்இ சிங்­களக் குடி­யேற்­றங்கள்இ தமிழர் பிர­தே­சங்­களில் பௌத்­த­வி­கா­ரைகள் போன்­றன மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் தோல்­வி­களில் முடி­வ­டைந்­துள்­ளன எனவும் குறிப்பிட்டார்.
வட மாகாண சபை­யினைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்­கு­ரிய குறைந்­த­பட்ச அதி­கா­ரங்­களைக் கூட வழங்­காது சபையின் செயற்­பா­டு­களை முடக்­கி­வி­டப்­ப­டு­கின்­றனர். இதனால் முத­ல­மைச்­ச­ரினால் மாகாண சபையின் நிர்­வா­கத்தை பூர­ண­மாக நடத்த முடி­ய­வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஒட்­டு­மொத்த இலங்கை அர­சாங்­கமும் தமிழ் விரோதப் போக்­கையே கடைப்­பி­டிக்­கின்­றது. இததான் யதார்த்­த­மான உண்­மை­யாகும். இலங்கை அர­சாங்­கத்தின் இவ்­வா­றான தோல்­வி­களே ஏனைய நாடு­களில் எமது இனப்­பி­ரச்­சினை தொடர்பில் தீர்வு காண்­ப­தற்­கான பல்­வேறு முரண்­பா­டான கருத்­துக்கள் உரு­வா­வ­தற்கு அடித்­த­ள­மாக அமை­கின்­றன எனவும் சுட்டிக்காட்டினார்.

அது மட்­டு­மன்றி இத்­த­கைய செயற்­பா­டுகள் எதிர்­வரும் ஜெனிவா மனித உரிமை சபையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஒரு தீர்­மா­னத்­தையும் கொண்­டு­வ­ரு­வ­தற்கு வழி­கோ­லி­யுள்­ளது என்றார்.
இதனைக் கூட இலங்கை அர­சாங்­கமே உரு­வாக்­கி­யுள்­ளது. அர­சாங்கம் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தாமல் அதனை இழுத்­த­டிப்புச் செய்­துள்­ளமை மற்றும் அதில் தோல்வி கண்­டுள்­ளமை போன்ற கார­ணங்­களால் ஒரு சர்­வ­தேச விசா­ர­ணையை எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதற்­காக ஒரு பிரே­ர­ணையும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது எனக் குறிப்பிட்டார்.

ஆகவே இதற்­கான பொறுப்­புக்­களை இலங்கை அர­சாங்­கமே ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.இலங்கை அர­சாங்கம் தமிழ்த்­தே­சிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­பதில் தொடர்ச்­சி­யாக தோல்வி அடைந்திருக்கின்றமையும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தமக்கு எந்தவித தகுதியும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாலுமே இவ்வாறான தீர்மானங்கள் சர்வதேச அளவில் நிறைவேற்றப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இதனைப் பிறநாடுகளின் தவறுகளாகக் கருதமுடியாது. இலங்கை ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் தோல்விகளும் பிழைகளுமே இதற்குக் காரணமாக அமைகின்றன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரு ம்புகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தனி ஈழ வாக்குறுதி ஜெயாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்


இலங்கையில் தனி ஈழம் அமைக்க இலங்கை வாழ் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவினால் இன்று (25) வெளியிடப்பட்டது.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. சபையில் வலியுறுத்தவும், தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று அந்த விஞ்ஞாபனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை தேவை: நவி பிள்ளை அறிக்கை

இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு பொருத்தமான விசாரணையை நடத்த இலங்கை தவறிவிட்டது என்று ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் நவி பிள்ளையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்படவே\ண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசும் அது அமைத்த நல்லிணக்க ஆணையமும், இந்த குற்றச்சாட்டுகளை சரியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன என்றும் அது கூறுகிறது.
ஆனால் இந்த அறிக்கை இலங்கைக்கு எதிரான ஒரு அரசியல்மயப்படுத்தப்பட்ட, காழ்ப்புணர்ச்சி கொண்ட திட்ட நிரலை பிரதிபலிப்பதாக இலங்கை அரசு கூறுகிறது.
இந்த அறிக்கை அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

இலங்கை அரசு முயற்சி: த.தே.கூட்டமைப்பு..

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையின் கடுமைத் தன்மையை தணிப்பதற்காக அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு தென்னாபிரிக்காவிற்கு தூதுக்குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான முயற்சிகளில் தென்னாப்பிரிக்கா அக்கறை செலுத்தி வந்திருக்கின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.

கடந்த காலங்களில் தென்னாபிரிக்க அரச பிரதிநிதிகள் பல தடவைகள் இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன்னர் இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் தனித்தனியாக தென்னாபிரிக்கா சென்றுவந்துள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனால், இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் காட்டத் தவறியபடியாலேயே தென்னாபிரிக்காவின் ஈடுபாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த கொமன்வெல்த் மாநாட்டின்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின் பிரகாரம் இலங்கைக்கு உதவ முன்வந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் தென்னாபிரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துச் சென்றதாக சுமந்திரன் கூறினார்.

தென்னாபிரிக்காவின் முயற்சிகளில் சந்தேகமா?

ஆனால், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று வரவுள்ள சூழ்நிலையில், ‘இன்னொரு நாடொன்றின் அனுசரணையுடன் நல்லிணக்க முயற்சிகள் நடப்பதாக சர்வதேசத்துக்கு காட்டும் முயற்சியாகவே’ தென்னாபிரிக்காவுக்கு அரச தூதுக்குழு சென்றுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ெ

எனினும் தென்னாபிரிக்காவின் பங்களிப்புடன் நடக்கும் இணக்க முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீணாக்குகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், தென்னாப்பிரிக்கா ஊடான முயற்சிகளில் நன்மை உள்ளவரை அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனால், சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றுக்கு தமது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.

இதேவேளை, இலங்கை அரசின் தென்னாப்பிரிக்கப் பயணத்தை ‘ஜெனீவா தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி’ என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவின் பங்களிப்பையும் சந்தேகிக்கிறதா? – என்று தமிழோசை வினவியது.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், ‘நாங்கள் அப்படிச் சொல்லவில்லை, இலங்கை அரசாங்கத்தையே விமர்சிக்கின்றோமே தவிர, தென்னாபிரிக்காவை அல்ல’ என்று கூறினார்.

எதிர்காலத்தில் தென்னாபிரிக்கா உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச நாடோ அல்லது ஐநா உள்ளிட்ட அமைப்புகளோ இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்க்க முன்வந்தால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளத் தயார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

இலங்கைவெற்றி பெற மந்திர தந்திரம் செய்யும் !

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிக்கும் நோக்கில், ராஜபக்ஷ அரசாங்க மந்திர தந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மனிதன் புல்லை பிடித்தாவது உயிர் தப்பிக்க முயற்சிப்பது போல், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கொண்டு வரும் பிரேரணையை மந்திரீக சக்தி பயன்படுத்தியாவது தோற்கடிக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ நகைப்புக்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கொட்டகலையில் நாளைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் மகா யாகம் ஒன்றை நடத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்தள்ளார்.

இந்த யாகத்தை நடத்துவதற்காக அமைச்சர் தொண்டமானுக்கு மிக நெருக்கமான ஹதராபாத்தை சேர்ந்த ரூபா மாகாந்தி ராம் மோகன் என்பவர், கேரளாவை சேர்ந்த 9 மந்திரவாதிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளார்.

கேரள மந்திரவாதிகள் நடத்தும் ஜெனிவா பிரேரணையில் இருந்து தப்பிக்கும் இந்த யாகம் கொட்டகலையில் உள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

இதனை தவிர அடுத்த மாதம் முழுவதும் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய சதித்திட்டத்தை தோற்கடிக்கும் பூஜை வழிப்பாடுகள் இலங்கையில் ஆலயங்களில் நடத்தப்பட உள்ளன.

அத்துடன் ஜனாதிபதியின் மனதை வென்றெடுப்பதற்காக அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் தமது வீடுகளில் யாகங்களையும் ஹோமங்களையும் நடத்த உள்ளனர்.

புதன், 19 பிப்ரவரி, 2014

காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிப்பு: .

வடக்கு கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 35 சதவீதமான காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதி தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் யோகேஸ்வரன் எம்.பி ஆற்றிய உரை,

இலங்கை அரசாங்கத்தால் காணி சார்பாக என்னென்ன திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டாலும், அது வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பையே அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக இன்று கிழக்கு மாகாணத்தில் பல காணிகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாட்டின் நிமிர்த்தம் சுவீகரிக்க ஏற்பாடாகி வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது என்ற ரீதியில் அரசு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 4550 ஹெக்டெயர் பரப்பளவுள்ள நிலத்தைச் சுவீகரிக்க உள்ளது.

செங்கலடி பிரதேசத்தில் வேப்பவட்டவான், ஈரளக்குளம், மாவடிஓடை, சின்னப்புல்லுமலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 3897 ஹெக்டெயரையும், புதூர் பகுதியில் 51 ஹெக்டெயரையும், வவுணதீவு பிரதேசத்தில் குறிஞ்சாமுனைப் பகுதியில் 600 ஹெக்டெயர் நிலத்தையும் கரும்புச் செய்கைகக்காக எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இது அப்பகுதி மக்களின் வாழ்வாதார செயற்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் அதே நேரத்தில் விவசாய நிலமாக இருந்து கொண்டிருக்கின்ற அம்மண்ணின் வளம் பாதிப்புக்குள்ளாகி பயனற்ற நிலைக்கு செல்வதற்கும் வழி வகுப்பதாகவே அமைகின்றது.

பொதுவாக கரும்புச் செய்கை மூலம் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதால் எதிர்காலத்தில் விவசாய மக்களுடைய வாழ்வாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடிய சூழல் உருவாகின்றது. அது தவிர 23000 ஹெக்டெயர் நிலத்தையும் தமது வனபரிபாலன காணியிலிருந்தும், மகாவலி அபிவிருத்திச் சபையிலிருந்தும் சுவீகரிக்கத் திட்டமிட்டிருக்கின்றது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வேற்று இனந்தவர்களால் அத்துமீறிப் பயிர்ச் செய்கை என்ற ரீதியில் சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பொழுதிலும் அவற்றுக்கு இதுவரையில் சரியான தீர்வு கிடைக்கவில்லை.

வெல்லாவெளிப் பிரதேசத்தில் மாலையன்கட்டு என்னும் பகுதியில் உள்ள கிட்டத்தட்ட 1000 ஏக்கர் நிலப்பரப்புப் பிரதேசம் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பட்டிப்பளைப் பிரதேசத்தில் கச்சக்குடி சுவாமிலை கிராம அதிகாரி பிரிவிலுள்ள 150 ஏக்கர் காணி பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றத்துக்காக எடுக்கப்பட்டுள்ளது. கெவிளியாமடு, புளுகுனாவள, அடைச்சல் பகுதிகளில் 250 ஏக்கர் காணி பெரும்பான்மை இன மக்களால் பயிர்ச் செய்கைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளன.

வவுணதீவு பிரதேசத்தில் 160 ஏக்கரில் வெட்டிப்போட்டசேனையிலும் 15 ஏக்கரில் காந்தி நகரிலும் பெரும்பான்மை இன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 5181 ஏக்கரில் வெட்டிப்போட்டசேனை, கறுவாச்சேனை, தும்பாலனஞ்சேனை, வித்திச்சேனை, பன்சேனை, கற்புத்தானை, மாவளையாறு, மணல்ஏற்றம் போன்றவற்றில் பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறிக் குடியேறி பயிர்ச்செய்கை மேற்கொள்கின்றார்கள்.

குறிப்பாக வவுணதீவு, செங்கலடி, பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் 25000 ஏக்கருக்கு மேற்பட்ட தமிழ் மக்களுடைய காணிகள் பெரும்பான்மை இன மக்களால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இராணுவ வீடமைப்புத் திட்டம் என்ற ரீதியில் வாகரை பனிச்சங்கேணியில் கிரிமிச்சை சந்திப்பகுதியில் 1000க்கு மேற்பட்ட ஏக்கர் காணியை அரசாங்கம் சுவீகரித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சின் 26.07.2013ஆம் திகதிய 1820/08 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய கிரான் பிரதேசத்தில் 6380 ஏக்கர் காணியை அரசாங்கம் சுவீகரித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சின் 26.07.2013ஆம் திகதிய 1820/28ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய உன்னிச்சைப் பகுதியில் வனபரிபாலன மேச்சல் தரையிலிருந்து 18115 ஏக்கரை அரசாங்கம் சுவீகரித்துள்ளது.

பொதுவாக வனபரிபாலனத்துக்கும் மேய்ச்சல் தரைக்கும் என ஒதுக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான காணிகளை அரசாங்கம் சுவீகரித்திருப்பதால் கால்நடைகள் அங்கு வசிக்க முடியாத சூழலும், மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழலும் உருவாகி வருகின்றது.

பருத்திச்சேனையில் 8505 ஏக்கரையும், கித்துள்வௌ பகுதியில் 498 ஏக்கரையும், உறுகாமத்தில் 7271 ஏக்கரும், குடும்பிமலை பகுதியில் 62382 ஏக்கரும் வனபரிபாலனத்தில் இருந்து சுரண்டப்படுகின்றது. இதனை சுற்றாடல் அமைச்சின் 01.08.2013ஆம் திகதிய 1821/34ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமும், 26.07.2013ஆம் திகதிய 1820/28ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமும் இக்காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

கிரான் பிரதேசத்திலும், செங்கலடி பிரதேசத்திலும் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைச் சுவீகரித்துக் கொண்டிருப்பதனால் அங்கு கால்நடைகளை வளர்ப்பதற்கு முடியாத சூழ்நிலையில் கால்நடையாளர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களை வெளியேற்றும் முகமாக அரசாங்கம் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. வாகரைப் பிரதேசத்தில் புணாணை பகுதியில் வனபரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 46 குடும்பங்கள் இராணுவத்தினதும், பௌத்த பிக்கு ஒருவரினதும் அனுசரணையில் குடியேற்றப்பட்டிருக்கின்றன.

அண்மையில் அந்தப் பகுதிக்கு மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் ஆகியோர் வருகை தந்தார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்திருந்தார்கள். அவர்களது சொந்தக் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அந்த மக்களை மிளக் குடியேற்றும் முகமாக நடவடிக்கை நடந்த வேளையிலேயெ இராணுவ முகாமை அகற்றி தங்களது காணியைத் தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இன்றுவரை இராணுவம் அங்கிருந்து வெளியேற்றவில்லை. இராணுவம் பொது மக்களின் காணியைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கம் கொண்டு வருகின்றது இவ்வாறான ஒவ்வொரு செயற்றிட்டத்தின் காரணமாகவும், தமிழ் மக்களின் காணிகள் அங்கு பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுவாக வடக்கு கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 35 சதவீதமான காணிகளை இராணுவம் சுவீகரித்திருக்கின்றது..

திங்கள், 17 பிப்ரவரி, 2014

இறுதிநாள் சாட்சியப்பதிவுகள் ஆரம்பம்

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று நல்லூர் பிரதேச பிரதேச செயலகத்தை சேர்ந்த கிராம சேவகர் பிரிவில் உள்ள 4 பிரிவுகளைச் சேர்ந்த 52 பேர் சாட்சியப்பதிவுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மீது தன்அறிக்கையில் கோருவார் நவிபிள்ளை;

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்றுக்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை (நவி பிள்ளை) பரிந்துரை செய்ய உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அத்தகைய ஒரு விசாரணைக்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்திய விதம் குறித்தும் தனது இலங்கைப் பயணம் குறித்தும் எதிர்வரும் மார்ச் மாதம் நவிபிள்ளை முழுமையான அறிக்கை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தாக்கல் செய்வார். அந்த அறிக்கையில் அவர் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குப் பரிந்துரை செய்துள்ளார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, இலங்கை அரசின் பார்வைக்காக, ஜெனி வாவில் உள்ள  இலங்கை

தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க ஊடாக கடந்த வாரம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை அரசை கடுமையாகக் குற்றம்சாட்டும் வகையில் அமைந்துள்ள இந்த அறிக்கை, 20 பக்கங்களைக் கொண்டதாகவும், 74 குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் அமைந்திருந்தது என்று அந்தச் செய்திகள் கூறுகின்றன.

தீவிர ஆலோசனைகளுக்குப் பின்னர், இலங்கை வெளி விவகார அமைச்சு ஒவ்வொரு குறிப்புக்கும் பதிலளித்து, தயாரித்த அறிக்கை, ரவிநாத் ஆரியசிங்க மூலம் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளரின் பணியகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஐ.நா. மனிதஉரிமைகள் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி ஆரம்பிக்க சில நாள்கள் முன்னதாக, நவநீதம்பிள்ளையின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட வுள்ளது. எனினும்,  இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் முக் கிய அம்சங்களை கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் இடம் பெற்ற அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், எந்த வொரு உள்நாட்டு செயன் முறைகளைக் கண்காணிப்பதற்கும், அனைத்துலக விசா ரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது.

1. வெறுப்பைத் தூண்டுதல், சாட்சிகளைப் பாதுகாத்தல், தகவல் உரிமை, பலவந்த மாக காணாமற்போதல் குற்றங்கள் போன்றன பற்றி தற்போதுள்ள சட்டங்களை மீளாய்வு செய்து, அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தின் தரத்துக்கு கொண்டு வர வேண்டும்.

2. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கான விதி முறைகளை அகற்ற வேண்டும்.

3. சிறுபான்மை சமூகத்தினர், ஊடகங்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், சாட்சிகள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.

4. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் உள்ளிட்ட, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அனைத்துலக உதவியுடன், சுதந்திர மான, நம்பகமான குற்றவியல் மற்றும் தடயவியல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

5. அனைத்துலக தரத்துக் கேற்ப விரிவான, அணுகு முறையின் ஒரு பகுதியாக, இடைக்கால நீதியை வழங்கும் விதத்தில், தேசிய இழப்பீட்டுக் கொள்கையை உரு வாக்குவதற்கு உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்.

6. காணாமற் போனவர்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, தீவின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமற்போனவர்கள் குறித்தும், காணாமற்போதல்கள் நிகழ்ந்த எல்லாக் காலங்களிலும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் விசாரிக்கும் வகை யில், அதன் விசாரணை இலக்கை விரிவுபடுத்த வேண்டும். காத்திரமான பரப்புரைக ளின் மூலம், பொதுமக்களுக்கு இதுபற்றித் தெரியப்படுத்தி, எல்லா முறைப்பாட்டா ளர்களினதும், முறைப்பாடுகளை சமர்ப்பிக்க போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும்.

7. இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் இறுதி அறிக்கை, 2006ஆம் ஆண்டு  இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்பனவற்றை பகிரங்கப்படுத்தி, அண்மையில் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்கள் அந்த சான்றுகளை மதிப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.

8. படைக் குறைப்புக்கு மேல திக நடவடிக்கைகளை எடுத்து, அமைதிக்கால மட்டத்திற்கு படைத் தலையீட்டைக் குறைப்பதற்கு அர்த்தமுள்ள, வெளிப்படையான நடவடிக்கை களை ஆரம்பிக்க வேண்டும், படைக்கலைப்பு, ஆயுதக் களைவு, பொதுமக்களின் செயற் பாடுகளில் இருந்து இராணுவம் விலகுவதற்கு தெளிவான காலஎல்லையை வகுக்க வேண்டும்.

9. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை, இன்னும் முழுமையாக, செயற்படுத்துவது குறித்து சிவில், சமூக மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகளுடன், கலந்தாலோசிக்க வேண்டும்.

 10. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் ஒரு தேசிய நினைவு நாளை கடைப்பிடிப்பதுடன், எல்லா பொதுமக்களும், தனியாகவோ குழுவா கவோ, நினைவுகூரும் உரிமையை வழங்க வேண்டும், போரில் கொல்லப்பட்டவர் களுக்கு பொருத்தமான நினைவுச் சின்னங்களை அமைப்பது குறித்து தேசிய அளவில் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.

11. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் தொழில் நுட்ப உதவியை ஏற்பது குறித்து சாதகமான கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

 12. பலவந்தமாக காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் குறித்த பணிக்குழு மற்றும் சிறு பான்மையினர் விவகாரங்களுக்கான சுதந்திர நிபுணர் உள்ளிட்ட, சிறப்பு ஆணை யாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டில் அழைப்பு விடுக்க வேண்டும்.
 

வியாழன், 13 பிப்ரவரி, 2014

தென்மராட்சி வறணி மத்திய மகாவித்தியாலய உரையினை தேடி!!

  வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனினது தென்மராட்சி வறணி மத்திய மகாவித்தியாலய உரையின் ஒலிப்பதிவு நாடாவை தேடும் நடவடிக்கையில் இராணுவப்புலனாய்வினர் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வகையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களிடம் குறித்த ஒளி அல்லது ஒலிப்பதிவுகளை வழங்குமாறு நிர்ப்பந்தித்து வருவதாக தெரியவருகின்றது.
இதனிடையே குறித்த நிகழ்வில் அழையா விருந்தாளியாக நுழைந்த மஹிந்த ராஜபக்ஸ சகோதரர்களுக்கு நெருக்கமான  ஒருவரே முதலமைச்சரினது உரையினை திரிவுபடுத்தி மஹிந்த ராஜபக்ஸவிடம் போட்டுக்கொடுத்ததாக அரசாங்க தரப்பிற்கு நெருக்கமான தகவல்  ஒன்று கூறுகிறது.

யாழ்ப்பாணத்தில் அமைப்பொன்றை  நடத்திவரும் இவர் தானே வடக்கு மாகாணசபையின் அடுத்த ஆளுநரெனவும் கூறிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள இவர் இந்தப் பாடசாலையின் பழைய மாணவர் எனவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த பாடசர்லைக்கு நேரில் சென்றுள்ள அவர் தம்மையும் கௌரவ விருந்தினராக அழைக்க நிர்ப்பந்தித்துள்ளார். எனினும் முன்கூட்டியே வடக்கு முதல்வரை பிரதம விருந்தினராக அழைத்துள்ள நிலையில் பாடசாலை நிர்வாகம் சிக்கல் நிலை தொடர்பாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எடுத்து கூறியுள்ளது.

அவ்வேளையில் குறித்த நபரினையும் விருந்தினராக அழைப்பது தொடர்பில்  தமக்கு ஆட்சேபனை இல்லையென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் இவரும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.அங்கு மாணவாகளிற்கு நல்வழிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் ஆற்றிய உரையே தற்போது திரிபு படுத்தப்பட்டு மஹிந்த குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல் ஒன்று கூறுகிறது.

திங்கள், 10 பிப்ரவரி, 2014

சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் மீள வலியுறுத்து

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு போர்க்குற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் மீளவும் வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில், வெளிவிவகார பொதுநலவாயத்துறை அமைசர் ஸுவைவர்  உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில் மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.  அங்கு நடந்தேறிய போர்க் குற்றம் தொடர்பாக வெளிப் படை யான விசாரணை தேவை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வை, பிரிட்டன் பிர தமர் டேவிட் கமரூன் வலியுறுத்தி உள்ளார். இதையே பிரிட்டன் முழுமையாக விரும்புகின்றது. இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய செயல்பாடாக சர்வதேச விசாரணை தேவைப்படுகிறது.

பிரதமர் டேவிட் கமரூன் முன்னரே குறிப்பிட்டதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் வெளிப்படையான விசாரணை தொடங்கவில்லை என்றால் சர்வதேச விசாரணை நடத்த பிரிட்டன் முயற்சி எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

தமிழீழத் தேசியத் தலைவரின் பெயரால் மோதிக்கொள்ளும் !!

 தமிழீழத் தேசியத் தலைவரின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும் சிங்களத் தலைமைகள் அவரது பெயரால் இப்போதும் மோதிக்கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை மிக மோசமானவராகக் காண்பிக்க நச்சுக் கருத்தக்களை அள்ளியள்ளி வீசிய தலைமைகள் இப்போது அவர் புகழ்பாடவும், அவரை ஏனைய சிங்களத் தலைமைகளுக்கும் உயர்வாக ஒப்பிடவும் தொடங்கியுள்ளனர்.

இதில் முன்னணியில் இருக்கின்றார் சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தின் முன்னாள் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா. விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதலில் இருந்து உயிர்தப்பியதாகப் பெருமிதப்பட்டுக்கொள்ளும் இவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்னர் வெளியிட்டு வந்தவர். மகிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களுடன் இணைந்து இனப்படுகொலையையும் செய்துமுடித்தவர். இப்போது அதே ஆட்சியாளர்களால் பந்தாடப்பட்டு சிறைக் கம்பிகளையும் எண்ணி முடித்துவிட்டு வெளியில் வந்திருக்கின்றார். இப்போது தனது ராஜபக்ச எதிராளிகளுடன் மோதுவதற்கு தமிழீழத் தேசியத் தலைவரிடம் இருந்த நற்பண்புகளை உதாரணமாகக் காண்பிக்க இவர் முயன்றுள்ளார்.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கும் கூடப் பெறுமதியற்றவர்” என அண்மையில் கூறியிருந்த சரத் பொன்சேகா இப்போது மேலும் பல கருத்துக்களை கூறியிருக்கின்றார்.
கொழும்பு கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் கூறியதாவது,

எல்லாளன் இறந்த பின்னர் துட்டகைமுனு மன்னன், எல்லாளனுக்கு நினைவிடம் ஒன்றை அமைத்து கௌரவப்படுத்தினான். இந்த முன்னுதாரணத்தை அடிப்படையாக கொண்டு நானும் எதிரியை மதிக்கின்றேன். எனக்கு எதிரியுடன் எந்த பகையும் இல்லை. எனினும் நாட்டின் இன்றைய ஆட்சியாளர் அவ்வாறான நற்குணங்களை அறிந்தவர் அல்ல. நான் பிரபாகரன் பற்றி பேசும் போது ஆட்சியாளரின் மனம் துன்பப்படுகிறது.

ஆனால் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சியாளர்களுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் விடுதலைப் புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாவை கொடுத்தனர். சர்வதேச சமூகத்துடன் மோதல்களை ஏற்படுத்தி நாட்டை ஆபத்தில் தள்ளியுள்ளனர். கடாஃபி போன்று தன்னை சுற்றி பெண்களை வைத்திருக்கும் தலைவர்கள் மற்றும் சுவாசிலாந்து நாட்டின் மன்னர் போன்று நிர்வாணமாக பெண்களை வைத்திருக்கும் தலைவர்களுடன் பழகும் நாட்டின் ஆட்சியாளர்கள் சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டின் இன்றைய சர்வாதிகார போக்குடனான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்லும் அதேவேளை ராஜபக்ச குடும்பத்தினர் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இந்நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்றதாக கூறுவது வேடிக்கைக்குரிய விடயமாகும் என்று கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவின் தமிழீழத் தேசியத் தலைவர் குறித்தான கருத்துக்கள் மகிந்த ராஜபக்சவைக் கொதிப்படைய வைக்கின்றதோ இல்லையோ, சிங்கள பௌத்த மதவாதிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக அவர்கள் வக்காலத்து வாங்கத் தொடங்கியுள்ளனர். 30 வருடகால சாபத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரபாகரனின் முடிக்கு ஒப்பானவர் அல்ல எனக் கூறுவது பாரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளதன் மூலம் அவர் தற்பொழுது எந்த வழியில் பயணிக்க தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. பிரபாகரன் மோட்டார் குண்டுகளை வீசி தாக்கி, வெடி குண்டுகளை வெடிக்க செய்து, தற்கொலை குண்டுதாரியை கொழும்புக்கு அனுப்பி பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய போது பொன்சேகாவுக்கு பிரபாகரனின் உடலில் உள்ள முடியின் மதிப்பு தெரியவில்லையா என நான் கேள்வி எழுப்புகிறேன். வாய் இருக்கின்றது என்பதால் வீணாக வார்த்தைகளை உதிராது ஒழுக்கமான அரசியலில் ஈடுபடுமாறு பொன்சேகாவிடம் கேட்டுக்கொள்வதாக மேதானந்த தேரர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனுடைய மயிரிழைக்கு கூட இவ்வாட்சியாளர்கள் தகுதியற்றவர்களென கூறியமைக்கு அரச ஊடகங்கள் என்னை தேசத்துரோகி என பெயர் சூட்டியுள்ளன. நான் மனச்சாட்சிக்கு உடன்படவே கூறுகிறேன். இந்நாட்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பொது மக்களை இலக்காக வைத்தே தாக்குதல்கள் மேற்கொண்டார். பிரபாகரன் இந்நாட்டை சீரழித்ததை விடவும் இவ்வரசாங்கம் மக்களை பெரும் துன்பத்திற்குள் தள்ளியுள்ளது என்று இருதரப்பையும் குற்றம்சாட்டும் வகையில் கூறியுள்ளார்.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

நீதிக்கான நடை பயணம்:8ம் நாளாக உலகத் தமிழ் மக்கள் அலையென!!

ஐநா நோக்கிய நீதிக்கான நடை ப்பயணம் வெற்றிகரமாக நேற்று Pijpelheide நகரத்தை வந்தடைந்தது. காலநிலை மழையும் குளிருமாக இருந்தபொழுதிலும் உறுதி தளராமல் தாய் மண்ணை மனதில் நிறுத்தி மனித நேயப்பணியாளர்கள் நடை பயணத்தை தொடர்ந்தனர். நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. நடை யணம் செல்லும் பாதையில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உரிமையுடனும் மனிதநேய பணியாளர்களை ஆதரித்து பங்களித்தனர். நகர இளையோர்கள் நடை பயணத்தில் இணைந்தும் கொண்டனர். இதேவேளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரை வேல்முருகன் உலகத் தமிழ் மக்களை ஐநா முன்றலில் அலையெனத் திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மார்ச் திங்களில் ஐ.நா கூடவுள்ளது. இந்த நிகழ்வில் உலகமெல்லாம் வாழுகின்ற ஈழ உறவுகளும், ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற ஈழ உறவுகளும் இளைய தலைமுறையினரும் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, ஐநாவிற்கு முன்பாக கூடுவோம். 60ஆண்டு கால தமிழீழ சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு வெற்றியைக் காணுகிற தூரத்திற்கு வந்துள்ளோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரைத் துறந்த மாவீரர்களுடைய தியாகமும் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்களன் தியாகமும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எம்மினம் முற்றுமுழுதாக அழிப்பதற்கு சிங்களப் பேரினவாத அரசு யெ்த கொடுமைகளும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் செத்து மடிந்ததிற்கு நாம் நீதி கேட்டு, நியாயம் கேட்டு நமக்கான உரிமை கேட்டு, இந்த மாபெரும் பேரணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



சனி, 1 பிப்ரவரி, 2014

சிங்களத்துக்கு சுதந்திர தினம் தமிழீழத்துக்கு கறுப்பு நாள்

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் அவர்களுக்கும் இவ் உலகுக்கும் நாம் ஈழத்தமிழர் என்பதை எடுத்துக்கூற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம். பிரித்தானிய காவல்துறையிடம் அனுமதி பெற்று இடம்பெறும் இவ் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஒரு தேசிய இனம் எமக்கான அடையாளங்களுடனும் விழுமியங்களுடனும் வாழும் ஒரு தமிழினம் என்பதை இவ் உலகுக்கு பறை சாற்றுவோம்

www.nilavarai.com