siruppiddy

வியாழன், 18 டிசம்பர், 2014

அடிபணிந்து உரிமைகளைப் பெற தயாராக இல்லை!

 
அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பேரவையில் இன்று காலை 2015 ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீட்டுச் சட்டத்தை சமர்ப்பித்து அறிமுகவுரை ஆற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில்,
2009 இல் இருந்து 2013 வரையில் வெளிநாட்டுப் பணங்களுடனும், சர்வதேச நிறுவனங்களின் கடன்களுடனும் அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டிருப்பினும், இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் வீடமைப்பில் ஈடுபட்டிருப்பினும், ஒரு சில சுய வாழ்வாதாரத் திட்டங்களில் ஈடுபாடு காட்டியிருப்பினும், பாதிக்கப்பட்டோர் சம்பந்தமான போதுமான விபரப்பட்டியலைப் பெறுவதற்கோ, அவர்களின் தனிப்பட்ட தேவைகளைக் கணித்தெடுப்பதற்கோ போரின் பின்னரான வடமாகாணத்தின் தேவைகளைக் கணித்தெடுப்பதற்கோ தவறிவிட்டது.

ஆனால் சமூகத்தின் மனோநிலை பற்றிய ஆராய்வு, அதாவது உள ஊனமுற்றவர்கள் பற்றிய ஆராய்வு, பிறப்பின் மூலமாகவும் நோயின் மூலமாகவும் வலுவிழந்தோர் சம்பந்தமான ஆராய்வு வாழ்வாதார அபிவிருத்தி பற்றிய ஆராய்வு, தொழில் வாய்ப்புக்கள் பற்றிய ஆராய்வு, போரின் பின்னரும் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் பல்லாயிரம் படையினர் முகாமிட்டிருக்கும் சூழலில் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் பற்றிய ஆராய்வு, சமூகத்தின் கலாசாரச் சீரழிவுகள் பற்றிய ஆராய்வு, தொடரும் வன்முறைக் கலாசாரங்கள் பற்றிய ஆராய்வு போன்றவை பற்றி முழுமையான ஆராய்ச்சி நடத்தப்படவில்லை.

இவை சார்பாக நாம் கேட்ட செலவீனங்களுக்காகத் தேவையான நிதியமும் எமக்குத் தந்துதவப்படவில்லை. அதாவது எம்மைப் போரினால் பாதிக்கப்படாத பிரதேசங்களுடன் வைத்துக் கணித்து அவ்வாறான நிதி உதவிகளே எமக்குந்தரப்பட்டு வந்துள்ளன. மேலதிகமாகக் கேட்டவை கொடுக்கப்படவில்லை. இதனால் பலவித முன்னேற்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்த நிலையில் உள்ளன. இவற்றிற்கு மேலதிகமாக எம் சபையை உருவாக்க உதவி செய்த பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வலுவிழந்து காணப்படுகிறது. வலுவற்றே காணப்படுகிறது என்று கூடக் கூறலாம்.

மாகாணசபை வழிமுறையானது அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது. ஆனால் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலு அடையச் செய்வதாகவே காணக் கூடியதாக உள்ளது. ஆளுநர் அத்தகைய ஜனாதிபதியின் முகவராகச் செயற்படுகின்றார். மாகாணசபையால் எந்த ஒரு நியமனத்தையும் ஆளுநரின் அனுமதியின்றி வழங்க முடியாது. ஜனாதிபதி இது பற்றித் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதை எவருந் தட்டிக் கேட்க முடியாத நிலையே தற்பொழுது நிலைபெற்றிருக்கின்றது.

இராணுவமே தொடர்ந்து வடமாகாணத்தை நிர்வகித்து வருவதான ஒரு நிலையை போரின் போதான வடமாகாண யாழ்ப்படைத்தலைவரும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான இரண்டாம் பதவிக்காலம் பெற்றுள்ள ஆளுநர் ஏற்படுத்தி வருகின்றார். அதே நேரத்தில் அலுவலர்களின் அதிகார வளம், அனுபவ வளம் ஆகியன அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. உரம்மிக்க அதிகாரிகளை உட்கொண்டு வருவதற்கு உரிய கட்டமைப்பொன்றும் உருவாக்கப்படவில்லை. அலுவலர் பற்றாக்குறை நியதிச் சட்ட ஆக்கத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது.

எமது ஒருவருடகால அனுபவமானது பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் எமது வடகிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கூறிய சிலரின் கனவைச் சிதைப்பதாகவே அமைந்துள்ளது. அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என்பதையும் இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன். பல விதங்களிலும் மத்திய அரசாங்கந் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்யவே சகல நடவடிக்கைகளையும் எடுத்து வந்துள்ளது. நாடெங்கிலும் குடும்ப ஆட்சியும் மத்தியின் வல்லாட்சியும் நிலை பெற்றிருக்கின்றதென்றால் வடமாகாணத்தில் அது சர்வாதிகாரத்திற்கு இடங்கொடுத்து வருவதாகவே காணக் கூடியதாக இருக்கின்றது. எமது மக்களின் தனித்துவத்தை, தன்மானத்தை, தகைமைகளைத் தகர்த்தெறியவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எமது பாரம்பரிய இனப்பரம்பல் பரிதாபகரமாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். இப்பேர்ப்பட்ட சூழலில் தான் எமது நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 28 நவம்பர், 2014

பாராளுமன்றில் மாவீரரை நினைவுகூர்ந்த எம்.பி.ராதிகா

 தமிழீழத்துக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபைஈசன் உரையாற்றியுள்ளார்.

கனடியத் தமிழர்களின் வரலாற்றில் அவர்கள் நவம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடுவார்கள்.

ரிமம்பரன்ஸ் டே எனப்படும் இறந்த கனடியப் படைவீரர்களை நினைவுகொள்ளும் நாளும் தமிழ் மாவீரர்களின் நாளுமே அதுவாகும் என கனடியப் பராளுமன்றத்தில் இராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்தார்.

கனடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் தொடர்ந்து பேசுகையில், தங்களது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்தவர்களைக் கொண்டாடுவதானால் நவம்பர் மாதம் வாழ்வியலின் அழகை வெளிக்கொணரும் ஒரு மாதமாக திகழ்கிறது.

யுத்தத்தில் இறந்தவர்களை மாத்திரமல்ல, யுத்தத்தில் அகப்பட்டு இறந்த சகல வயதுடைய பொதுமக்களையும் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் வாழ்வதற்காக தங்களை அர்ப்பணித்தவர்களையும் கொண்டாடுகிறோம்.

ஈழத்திருநாட்டிலே இடம்பெற்ற வன்முறைகளால் போரின் போதான ஒரு சிறுமியாகவே நான் பிறந்தேன். வன்முறைகளும் இனங்களுக்கிடையேயான பிரிவும், மத வேறுபாடுகளும் இன்னமும் அந்த நாட்டில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன என இராதிகா மேலும் தனதுரையில் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 26 நவம்பர், 2014

தலைவனே பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் !

   60 வது அகவை காணும் தலைவனே உலகம் உன் வரவுக்காய் காத்து நிற்கிறது தலைவா!
உணர்வுத் தமிழர் துயரம் துடைக்க வா தலைவா!
புலம்பெயர் தமிழர் கல்வியை வளமாக்கிய தலைவா!

புதியதோர் வழி காட்டு, எமது இன எழுச்சிக்காய்
சூரியப் புதல்வரே! தமிழருக்கு சுதந்திரம் பெறவந்த தேவனே!
சூரியக் காலத்தில் நாம் ஈழம் பெறுவது உறுதி.

உயிர் பிரியும் முன் உங்கள் விழிகளைக் காண்போம்!
உறுதி எடுத்துத் தான் நாம் தேசப்பற்றோடு வாழ்கிறோம்!
உங்கள் அகவை அறுபது தமிழருக்கு விடிவுக்காலம் ஆகட்டும்!
உணர்வுத் தமிழினம் ஓர் அணியாய் உங்கள் பாதம் தொடரட்டும்!
பாரெங்கும் வாழும் தமிழர் உங்கள் பெயர் சொல்லிப்பாட
பல்லாண்டு வாழ வேண்டுமென நாம் வாழ்த்தி நிற்கிறோம்!

உலகிலுள்ள மற்றய இனத்தவர்கள் போல ஈழத்தமிழினமும் சுதந்திரம் பெற்ற இனமாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தமிழினம் விடுதலை பெற எந்த ஒரு நாட்டின் உதவியுமின்றி சொந்த மக்களின் பங்களிப்புடன், ஒரு நாட்டிற்கு தேவையான சகல உட்கட்டுமானங்களுடனும், தரை,கடல்,ஆகாயப்படைகளை அமைத்து வீரமுடன் அடக்குமுறையாளர்களை எதிர்த்துப் போராடி, உலகின் ஒரு மூலையிலே முடக்கப்பட்டுக்கிடந்த தமிழர்களை ‘நாம் ஈழத்தமிழர்’ என்று நெஞ்சை நிமிர்த்தி தலை நிமிர்ந்து நடக்க வைத்த எமது தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கட்கு டென்மார்க் கலை பண்பாட்டுக் கழகம் 60ம் ஆண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது, 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 6 நவம்பர், 2014

பிரபாகரன் கடல் உயிரினங்களைப் பாதுகாக்க உதவினார்! –வன அதிகாரி

இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பெரும் உதவியாக இருந்தார்
என்று பிரதான வன தலைமைப் பாதுகாவலரும், தமிழ்நாட்டின் தலைமை வனவாழ் உயிரினங்களின் மேற்பார்வையாளருமான வி.கே.மெல்கானி தெரிவித்துள்ளார்.
கடலாமைகளைப் பிடித்தலைத் தடுத்தல் மற்றும் மீன்பிடி தொடர்பான நடைமுறைகள் குறித்து, இந்தியக் கடலோரக் காவல்படை, வன, மீன்பிடி, காவல்துறை இளம் அதிகாரிகளுக்கு அளித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், அளவுக்கதிகமான மீன்பிடி,  தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த வரை, இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா வரை, கடல்வாழ் பாலூட்டிகளுக்குப் பாதுகாப்பான இடமாக விளங்கியது.
அந்தப் பகுதியில், பாதுகாப்பும் ரோந்து நடவடிக்கைகளும், அதிகரித்திருந்தன.
இதனால், அந்தப் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களுக்கு வளமான கடல் வாழ்க்கை கிடைத்திருந்தது.
அதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் எமக்கு உதவியிருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 4 செப்டம்பர், 2014

விசாரணைகளின் போது இனப்படுகொலை குறித்து விசாரணை செய்யப்படும்

சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் போது, சிறிலங்கா அரசாங்கம் புரிந்து இனப்படுகொலைகள் குறித்தும் விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ள சர்வதேச விசாரணைக்குழு இதனை உறுதி செய்திருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின் போது இனப்படுகொலைகள் குறித்த விசாரணை இடம்பெறாது என்று முன்னதாக கூறப்பட்டது.
எனினும் இந்த விடயத்தை உள்ளடக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் சில கோரிக்கை மனு ஒன்றை விசாரணைக்குழுவிற்கு அனுப்பி இருந்தனர். 
இதற்கு விசாரணைக்குழுவில் இருந்து மறுமொழி கிடைக்கப் பெற்றிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதன் படி சிறிலங்காவுக்கு எதிரான விசாரணையில் சர்வதேச குற்றங்கள்என்ற ஒரு விடயம் இருப்பதாகவும், அதன் கீழ், இனப்படுகொலைகள் மீதான விசாரணைகளும் உள்ளடங்கும் என்றும் விசாரணைக்குழு உறுதி செய்திருப்பதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்
 

திங்கள், 26 மே, 2014

விக்கியின் தீர்மானம் தொடர்பில் பீரிஸ் கவலை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்தமை மிகப் பெரிய தவறாகம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் புது டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.எனினும், இந்த அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிராகரித்திருந்தார்.
நல்லெண்ண அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டமை மிகப் பெரியத் தவறாகவே கருதப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பாராளுன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷெனுகா செனவிரட்ன, யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இந்திய பிரதமர் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

வியாழன், 22 மே, 2014

யுத்தத்தின்போது 18500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்::


இலங்கையில் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் 18,500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆரம்பித்துள்ளது.
இதன்போதே 13.590 பொதுமக்கள் மற்றும் 5000 பாதுகாப்பு படையினர் காணாமல்போயுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில்,
ஆணைக்குழு எப்போதும் சுதந்திரமாக மற்றும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.
http://www.pcicmp.lk/ என்ற இந்த இணையத்தளத்தில் மூன்று மொழிகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், முறைப்பாடுகளையும் இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். அதற்கான படிவங்கள் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
 
 
.

வியாழன், 8 மே, 2014

தமிழர் அமைப்புக்கள் கனடாவில் ஒன்றுபட்டு முன்னெடுக்கும் -18 துக்க நாள்


முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை, கனடாவில் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றாக முன்னெடுக்கவுள்ளன.
இதனை கடந்த மே-6ம் நாள் செவ்வாய்கிழமை ரொறன்ரேவில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
கனடாவின் ரொறன்ரோ, ஒட்டோவா, மொன்றியல், எட்மண்டன் ஆகிய பிரதான பெருநகரங்களில் தமிழீழத் தேசியத் துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அமைப்பினையும் முதன்மைப்படுதாமல் , பொதுமக்கள்  நிகழ்வாக மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை முன்னெடுக்க இருப்பதாக, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு வின் மகாலிங்கம் அவர்கள் உத்தியோகபூர்வ அறிக்கையினை வாசித்து அகவணக்கத்துடன் ஊடக சந்திப்பினை தொடங்கி வைத்திருந்தார்.
பொதுமக்களின் நேர வசதியினைக் கருத்திற்கொண்டு, மே-18 காலை 11மணி முதல் மாலை 5 மணி வரை நினைவேந்தல் வணக்கத்தினைMarkham and Milner சந்திப்பில் அமைந்துள்ள, St peter and Paul உள்ளக மண்டபத்தில் ஓருங்கு செய்துள்ளதாக ஊடக அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் உரைகள் ,சர்வமதப் பிரார்தனைகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் யாவும் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொத்துக் கொத்தான படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும்,  ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது.
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் திரு சு.இராசரத்தினம், தமிழ் படைப்பாளிகள்  கழகத் தலைவர் திரு வேலுப்பிள்ளை தங்கவேலு, கனடியத் தமிழர் பேரவைப் பொருளாளர் வைத்தியக் கலாநிதி சாந்தகுமார், கனடாத் தமிழர் இணையத்தின் தலைவர் திரு நாதன் வீரவாகு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்  திரு. நிமால் விநாயகமூர்த்தி  ஆகியோர் இக்கூட்டு முன்னெடுப்பு குறித்து கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
தொடர்ந்து ஊடகங்கத்துறையினரது  கேள்விகளுக்கு வழங்கிய பதில்களின் முக்கிய தொகுப்பு :
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், பலமாக எதிர்கொள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் புரிந்துணர்வோடு ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறு ஒன்றுபடுவதற்கான பொதுப்புள்ளியாகவும் பொதுமக்கள் நிகழ்வாகவும் மே-18 வணக்க நாள் இருக்கின்றது.
தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசுகளது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்பது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி, கடந்த 2009ம் ஆண்டில் உச்சம் தொட்டு, இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.  இனஅழிப்புக்கு பரிகார நீதியினை வேண்டி எமது விடுதலை அடைவதற்கே அனைவரு நோக்கமாக இருக்கின்றது.
சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொத்துக் கொத்தான படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும்,  ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது.
ஈழத்தமிழ் தளத்தினை மையமாக கொண்டு இயங்குகின்ற ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக அத்தியாவசியமானவை.மக்களுக்கான இந்த பொதுநிகழ்வில் அனைத்து மக்களும் பங்குபற்றிப் பயன்பெறச் செய்ய ஊடகங்களால் மட்டுமே  முடியும்.அதைச் செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில்களின் கருத்து அமைந்திருந்தது.

வெள்ளி, 2 மே, 2014

ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை! அச்சுறுத்தல் :

உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை கீழ் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தமது பணிகள் காரணமாக உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கடினமான பின்னணியில் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.

2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன், அதற்கான நீதி வேண்டி அவர்களின் குடும்பங்கள் இன்னும் காத்துள்ளனர் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.

கடந்த கால குற்றச் செயல்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் உறுதியான கடப்பாட்டை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

நாம் பரந்த உலக மாற்றத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். செழுமை மற்றும் மனித உரிமைகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான ஜனநாயக சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம், கலாசார தொடர்பில் சமூகத்தின் ஊடான மாற்றங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த ஜனநாயக மதிப்புகள் தொடர்பில் எமது பங்காளர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என பிரித்தானியா நம்புகிறது.

உலக ஊடக சுதந்திர தினத்தில் கருத்துச் சுதந்திரத்தை பின்பற்றுவதில் நாம் தமது உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

திங்கள், 14 ஏப்ரல், 2014

தமிழ் புதுவருடநல்வாழ்த்துக்கள் .2014ம்

அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இதயம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்கள்.
 2014ம் ஆண்டில் உதயமாகும் “ஜய” புதுவருடமானது அனைத்து தமிழ் மக்களின் வாழ்விலும் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இந்த இணையங்களின்
 இதயம் கனிந்த சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
“அத்தோடு துன்புறும் எமது தமிழ் உறவுகளை மனதில் கொண்டு அவர்களுக்கு  ஆனந்தமளிப்பதுடன், புதுவருட நாளில் பிற உயிர்களை வதைத்து அவற்றின் ஊணை உண்டு இன்பம் காணாது. சைவ உணவு உண்டு தேவையற்ற கேளிக்கை நிகழ்வுகளை இயன்ற வரை நீக்கி இறை வழிபாட்டு நாளாக கொள்ளுமாறும் வேண்டுகின்றேன்.”

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

2,000 படையினர் பங்கேற்பு கோபிக்கு எதிரான முன்னெடுப்பில்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டதாக வன்னி படைத் தலைமையகம் தெரிவித்தது.

நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற் இராணுவ முன்னெடுப்பில் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தென்னாபிரிக்கா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிகழ்ச்சி நிரல்கள்!

திர்வரும் 9ம் திகதியன்று தென்னாபிரிக்காவுக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு அங்கு 10ம் திகதி  முதல் 13ம் திகதி வரை நான்கு நாட்கள் தென்னாபிரிக்க அரசுத் தலைவர்களுடனும் ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுக்களில் ஈடுபடும்.

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில் செல்லும் இக்குழுவில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் செயலாளர் நாயகமான மாவை. சேனாதிராஜா எம்.பி. தற்போது நாட்டுக்கு வெளியே உள்ளார். அவர் சில சமயங்களில் இலங்கைக்கு வராமல் நேரடியாகத் தென்னாபிரிக்காவுக்குச் சென்று கூட்டமைப்புக் குழுவுடன் இணைந்துகொள்வார் என்று கூறப்பட்டாலும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தக் குழுவில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜாவும் இடம்பெறுவார் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டமைப்புக் குழுவினர் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களிலும் ஜொகன்னர்ஸ் பேர்க், பிரிட்டோரியா ஆகிய இடங்களில் பேச்சு நடத்துவர்.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை டேர்பனுக்குச் செல்லும் குழுவினர் அங்கு தென்னாபிரிக்கத் தமிழர்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசிவிட்டு அங்கிருந்து நேரடியாக இலங்கைக்குப் புறப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்குழுவினர் தென்னாபிரிக்காவில் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் மெயிட்டி நெக்கோனா அம்மையார், பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம், முன்னாள் அரசமைப்பு நீதிமன்ற நீதியரசர் அல்பி சக்ஸ், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்க ஜனாதிபதி சுமாவினால் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமபோசா ஆகியோரை சந்தித்துப் பேசுவர்.

தென்னாபிரிக்காவின் இந்திய பூர்வீகக் குடியைச் சேர்ந்தவரும் தென்னாபிரிக்காவில் சிவில் யுத்தத்தின் பின்னர் இணக்கத்தீர்வு ஏற்படுத்தப்பட்ட சமயத்தில் அரசியல் சாசன பிரதி அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்த மொகமட் வலி மூசாவையும் அவர்கள் சந்தித்துப் பேசுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டமைப்புக் குழுவினரின் தென்னாபிரிக்க நிகழ்ச்சி நிரலில் தென்னாபிரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி சுமாவை அவர்கள் சந்திப்பது பற்றிய குறிப்பு ஏதும் இல்லை.

எனினும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் இறுதி நேரத்தில் நிகழ்ச்சி நிரலில் அந்தச் சந்திப்பும் சேர்த்துக் கொள்ளப்படலாம் என ஒரு தகவல் தெரிவித்தது.

புதன், 26 மார்ச், 2014

புலம்பெயர் அமைப்புக்களுக்கு நன்றி:தமிழ் தேசியக்..

அனைத்துலக விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு அழுத்தங் கொடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்றிருந்த விவாதத்தினைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியிருந்த ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்துலக நாடுகளது பெரும்பான்மை வாக்கினை அமெரிக்கத் தீர்மானம் பெற்றுக் கொள்ள வேண்டுமென தாங்கள் எதிர்பார்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 23 மார்ச், 2014

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால் குறி தவறுமா?


விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால், கிளிநொச்சியில் பொலிஸ்காரர் தப்பியிருப்பாரா என்று எதிர்கட்சியினர் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லட்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர் ரவிகரன் சவால் விடுத்தார். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட நாடகமே நடக்கிறது. வடக்கு மாகாணசபை அமர்வு கொஞ்சம் சூடாகியது.

இருப்பினும் அமர்வு தொடர்ந்து களைகட்டவில்லை. அடிக்கடி காரசாரமான விவாதங்களை நடத்தும் சிவாஜிலிங்கம் அவைக்கு நேற்று வராததால் அவை சோபையிழந்தே, வழமை போன்று தீர்மானங்களை நிறைவேற்றியது.

வடக்கு மாகாணசபையின் ஏழாவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்றுக் காலை 9.38 மணிக்கு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது.

நேற்றைய அமர்வைப் பார்வையிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா பங்கெடுத்திருந்தார்.  எதிர்கட்சித் தலைவர் கமலேந்திரன் அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

அமர்வின் ஆரம்பத்திலேயே உறுப்பினர்களின் உரைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, அவைத் தலைவர் சகல உறுப்பினர்களும் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் முதலில் அமைச்சர்களின் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் போது அமைச்சர் ஜங்கரநேசனால், காங்கேசன்துறையில் சீமெந்து உற்பத்தியை கைவிட வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதனை ஆரம்பிப்பதால் ஏற்படும் சூழல் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டி அதனை அவர் முன்மொழிந்தார்.

இதன் போது எழுந்த ஆளுங்கட்சி உறுப்பினர் சர்வேஸ்வரன், சூழல் மாசடைவதை நவீன முறையில் தடுக்கலாம் என்ற திருத்தத்தை உள்ளடக்கி வழிமொழிவதாகச் சொன்னார். ஆனால் முதலமைச்சரோ அமைச்சரின் பிரேரணை எந்த மாற்றமும் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இதன் பின்னர் கடந்த மாத அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அவையின் நடைமுறைக்கோவை அங்கீகாரத்துக்காக விடப்பட்டு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.
இதன் பின்னர் நியதிச் சட்டத்தை அவையில் முதலமைச்சர் சமர்ப்பித்தார். நியதிச்சட்டம் அவசர தேவையாக இருப்பினும், அதனை ஆராய்ச்சி இல்லாமல் அவசரப்பட்டு முன்வைக்க முடியாது என்று காலம் தாழ்த்தி அவைக்கு வந்தற்கு விளக்கம் கொடுத்தார்.

இதன் பின்னர் எதிர்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பேசுவதற்கான வாய்ப்புக் கேட்டு, அவைத் தலைவரிடம் விண்ணப்பித்திருந்ததற்கு அமைய அவருக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அங்கஜனின் உரை அவையில் தூங்கிக் கிடந்த உறுப்பினர்களை எழுப்பி விட்டது.

அங்கஜன் ஆங்கிலத்திலேயே பேசினார். தனது உரையை உலகம் கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவதாகத் தொடங்கினார். உள்ளூரில் பேசித் தீர்க்க வேண்டிய விடயங்களை சர்வதேசத்துக் கொண்டு சென்றது தொடர்பில் கூட்டமைப்பைத் தாக்கிப் பேசியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சரும் ஆங்கிலத்தில் உரையாற்றினார். வழமைக்கு மாறாக முதலமைச்சர் கொஞ்சம் சூடாகவே பதிலளித்தார்.
அதன் பின்னர் எழுந்த சிவமோகன், அனைத்துலகமும் சேர்ந்தே எமது சுதந்திர போராட்டத்தை அழித்தது என்ற உண்மையையும் உரைத்துக் கொண்டு, கிளிநொச்சி தருமபுரத்தில் இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட செயல் என்றும் சாடினார். இந்தச் சம்பவம் நாளை நமக்கும் நடக்கலாம் என்று குண்டைத் தூக்கியும் போட்டு விட்டுப் போனார்.

இலங்கை எங்களது நாடு, எங்களுக்கும் தேசிய உணர்வு இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களிலிருந்து மாறுபட்ட கருத்தை முன்வைத்தார். அத்துடன் எங்கள் உரிமைகளை எங்களுக்குத் தந்தால் சர்வதேசம் ஏன் வரப்போகின்றது என்ற உண்மையையும் உரைத்தார்.

வெலிஓயாவில் தமிழ் மக்க ளுக்குச் சொந்தமான உறுதிக் காணிகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வே சிங்கள மக்க ளுக்கு வழங்குகின்றார். ஜனாதிபதியே காணியைக் கொள்ளையடிக்கும் நிலையிருக்கையில் நாம் எங்கு செல்வது என்று சர்வேஸ்வரன் கேள்வியைத் தொடுத்தார்.

தொடர்ந்தும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அங்கஜனுக்கு பதிலடி கொடுத்தனர். இறுதியில் கஜதீபன், இந்த விளக்கத்துடன் அங்கஜன் மனம் மாறியிருப்பார். அவரது சம்மதத்துடன் உரையை பதிவேட்டிலிருந்து நீக்கி விடுவோம் என்று சொல்ல, அவையில் சிரிப்பொலி எழுந்தது.
 இதன் பின்னர் வாய்ப்புக்காக அடிக்கடி எழுவதும் அமர்வதுமாக இருந்த எதிர்கட்சி உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், முதலமைச்சர் பேசியதையே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு நல்ல சூடு போட்டார். அத்துடன் எல்லாவாற்றுக்கும் வரிசையாக ஆதாரங்களைக் கேட்டு, அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் வாங்கிக் கட்டியும் கொண்டார்.

இதன் பின்னர் எழுந்த ரவிகரன், உரை நிகழ்த்திய எதிர்கட்சி உறுப்பினர் அங்கஜனிடம் தான் ஒன்றை மட்டும் கேட்பதாகத் தெரிவித்தார். அவர் அதற்கு மனசாட்சியின் படி உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பீடிகையுடன் தொடங்கினார்.

கிளிநொச்சியில் புலிகள்தானே சுட்டது என்று சொல்கிறீர்கள்? உண்மையிலேயே புலி சுட்டிருந்தால் அந்தப் பொலிஸ் உயிருடன் தப்பியிருப்பாரா? என்று ஒரு கேள்வியைப் போட்டார். அவையில் நிசப்தம் நிலவியது.

இதன் பின்னர் உரையாற்றிய அங்கஜன், தான் எல்லோரது கருத்துக்களையும் உள்வாங்கியிருப்பதாகவும், தனது தலைமைக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.. இதன் போது எழுந்த பசுபதிப்பிள்ளை ஏதோ சொல்ல முற்பட அவைத் தலைவர் அவரை இருக்குமாறு சொல்லவும், அவர் அதனையும் மீறி ஏதோ சொன்னார். இருப்பினும் அவைத் தலைவர் அவரது ஒலிவாங்கியை நிறுத்திவிட்டார்.

இந்தச் சூடான விவாதத்துடன், அமைச்சரவைக்கான ஆலோசனைக் குழுக்களின் பெயர்ப்பட்டியல் அவையில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தேநீர் இடைவேளைக்காக அமர்வு 15 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் அமர்வு மீளவும் ஆரம்பமானதும் உறுப்பினர்களின் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் போது நந்திக்கடல் பகுதி ஆழமாக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை ரவிகரனால் முன் மொழியப்பட்டது. இதனை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இதன் போது கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரன், இது எங்களுக்குள் வருகின்றது. இது தொடர்பில் 20 ஆம் திகதி முல்லைத்தீவில் கூட்டம் ஒன்று நடத்தப்படும். அதில் கடற்றொழில் தலைவர்களைக் கலந்துகொள்ளச் சொல்லுங்கள்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தெரியும் தானே என்று அமைச்சர் தொடங்க முன்னரே, அதுதான் உங்களிடம் கேட்காமல் மத்திய அமைச்சிட்ட கேட்டிருக்கின்றன் என்றார் ரவிகரன். இதன் பின்னர் குணசீலனினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
போதனா வைத்தியசாலை இருக்கும் மாகாணத்தில் மாகாண பொது வைத்தியசாலை அமைக்க முடியாது என்ற சுகாதார அமைச்சின் சட்டம் இருக்கத்தக்கதாகவே, தான் ஒரு பிரேரணையை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலை இருக்கத்தக்கதாகவே, வவுனியா ஆதார வைத்தியசாலையை மாகாண பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரினார்.

ஏனைய இரு மாகாணங்களில் இவ்வாறு இருப்பதாக ஆதாரத்தை முன்வைத்த அவர், அதனால் நாமும் முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார். இதன் பின்னர் மிக முக்கிய விடயத்தைப் போட்டுடைத்தார்.

கட்சி உட்பூசல், அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்பாடல் இன்மை மற்றும் நடைமுறைச் சிக்கல் பலவற்றை அவையில் நேரடியாவே தெரிவித்தார். மாவட்டத்தின் விழாக்களுக்கு யாரும் போகலாம். அதைப் பற்றி நாம் கேட்கவில்லை. ஆனால் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் போது மாவட்டத்தின் சகல மாகாணசபை உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும் என்றார்.

தற்போதே மக்கள் மத்தியிலி ருந்து எங்களது குறைப்பாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையும் இதன் பாரதூரத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் பின்னர் மீண்டும் ஒரு சர்ச்சை தொடங்கியது. உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எல்லோருக்கும் சமனாகப் பங்கிட வேண்டும் என்று. முதலமைச்சருக்கு 6 மில்லியனும், அமைச்சர்களுக்கு 4 மில்லியனும், உறுப்பினர்களுக்கு 2.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறில்லாமல் எல்லோருக்கும் ஒரே தொகை வழங்கப்பட வேண்டும் என்று அவையில் வாதிட்டார் சர்வேஸ்வரன். இருப்பினும் அதனை அவைத் தலைவர் சமாளித்து நகர்த்த முற்பட்ட போதும், சர்வேஸ்வரன் விடாப்பிடியாக இருந்ததால், முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார் என்று விடயப் பரப்பை முடிவுக்கு கொண்டு  வந்தார்.

இதன் பின்னர் வவுனியாவில் இராணுவக் குடும்பங்களுக்கு காணி கொடுப்பது தொடர்பான விவாதம் அவையில் சூடாகவே நகர்ந்து கொண்டிருந்தது. 
இதன் பின்னர் லிங்கநாதன் குறித்த விடயத்துடன் தொடர்புடைய விடயங்களை பற்றிப் பேச எழுந்தார். அவர் அவையில் ஆச்சரியமளிக்கும் ஒரு விடயத்தைச் சொன்னார். தான் இனிமேல் பிரேரணை கொண்டு வரமாட்டார் எனவும்  கொண்டு வந்த ஆறு பிரேரணைக்கும் நடவடிக்கையில்லை என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் பிரேரணைகள்  புத்தகத்தில நல்லா தான் இருக்கு என்று நக்கலாக உண்மையைச் சொல்லிவிட்டு விடயப் பரப்பினுள் நகர்ந்தார்.
அத்துடன் காணி அதிகாரம் எங்களிடம் இருக்கின்றது. துணிந்து இறங்குங்கள் என்று முதலமைச்சருக்கு தூண்டுதல் கொடுத்தார். இராணுவத்திற்கான குடியேற்றம் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாதென்பதற்காக அவர் அக்கறையுடன் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அஸ்மின், முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேரும் வாய்ப்பை தவறவிட்டு சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாகச் சாடினார். அத்துடன் கூட்டமைப்புடன் சேருவதற்கான சந்தர்ப்பம் கனிந்து வருவதாக அவர்கள் தெரிவித்திருப்பதானது தேர்தலுக்கான கோ­மாக மட்டும் இருக்கக் கூடாது என்று அவர் சாட்டையடி கொடுத்தார்.

அஸ்மின் வடக்கின் சமூகச் சீர்கேடுகள் தொடர்பில் தனது தெளிவான பிரேரணையை முன்வைத்தார். இதன் போது பெரும்பாலான குற்றச்சாட்டுக்களை இராணுவம் மீதே சுமத்தினார். அத்துடன் போருக்குப் பின்னரான சூழலில், வியட் நாம், ஆப்கானிஸ்தான், ஈராக் கைவிட வடக்கிலேயே சமூக சீர்கேடுகள் அதிகளவில் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார்.

இதன் போது குறுக்கிட்ட எதிர் கட்சி உறுப்பினர் ரிப்கான், இராணுவம் மீது குற்றம் சாட்டுவதை விட எங்கள் பிள்ளைகளையும் ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்று தார்ப்பரியத்தை உணர்த்தினார். மற்றைய எதிர்கட்சி உறுப்பினரான தவநாதன், ஏனைய நாடுகளில் போரின் பின்னரான நிலையை விட வடக்கின் நிலைமை மோசம் இல்லை என்றும், அது எந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையும் கேட்டார்.

இதற்கு கொஞ்சம் சூடாகவே பதிலளித்த அஸ்மின், அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், தவநாதன் சார்ந்திருக்கும் கட்சி (ஈ.பி. டி.பி) வடக்கில் கப்பம், கொலை, கொள்ளையில் ஈடுபட்டது என் பதைச் சுட்டிக்காட்டி விட்டு அமைதியாக அமர்ந்தார்.

இதற்கு தவநாதன் நான் என்னவோ கேட்க அவர் என்னவோ சொல்கின்றார். நான் இங்கு கட்சி பற்றிப் பேசவில்லை என்று சொன்னதும், அஸ்மின் தான் தவறான நோக்கோடு சொல்லவில்லை என்று தெரிவித்து மன்னிப்புக் கோரி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.

இறுதியாக பசுபதிப்பிள்ளையின் பிரேரணைகள்  எடுத்துக் கொள்ளப்பட்டன. நேரமும் சென்று  அவையினர்  பசியிலிருந்ததால் என்னவோ, நான்கு பிரேரணைகளையும் வாசித்து  முடித்த பின்னர் தான் வழி மொழிந்தனர்.

இதில் கிளிநொச்சி தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தை மாகாணசபை பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார். இதன் போது இது தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கணினிப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி என்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைச்சர் குருகுலராஜா, உறுப்பினர் அரியரட்ணம் ஆகியோர் அதன் தலைவர்களாக இருந்தனர் என்று கோர்த்தும் விட்டார். ஆனால் தற்போது அங்கு எதுவும் நடைபெறுவதில்லை என்றும், மாகாணசபை பொறுப்பெடுத்து, புலிகள் இருந்த காலத்தில் கொடுத்த பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
அவையிலிருந்தவர்கள் ஐயா, எந்தப் பயிற்சியை என்று சொல்லுங்கோ என்று நக்கலாகக் கேள்வி எழுப்பினர்.

இதன் பின்னர் கொக்கிளாய் கடல்நீரேரியில் கரைவலைப்பாடு தொடர்பில் ரவிகரனால் அவசர பிரேரணை முன்வைக்கப்பட்டது. அவைத் தலைவருடன் இழுபறிப்பட்டே அந்தப் பிரேரணை அவர் சமர்ப்பித்தார்.

இதன் பின்னர் அடுத்த அமர்வுக்கான கூட்டத் திகதியை அறிவிப்பதில் இழுபறிப்பட்டாலும் கடைசியில் ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து அவை அமர்வு முடிவுக்கு வந்தது.

சனி, 22 மார்ச், 2014

சி.வி, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகிறது:

 சி.வி விக்னேஸ்வரன் எமது நிலையை அடுத்த நாடுகளுக்கு சொல்லி அழ வேண்டிய நிலைமையை அரசாங்கமே தந்துள்ளது ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடகில் பல்வேறு கெடுபிடிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. பழைய நாட்களை எமக்குணர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு அவர் அனுப்பி வைத்த செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதில் மேலும் தெரிவித்திருந்ததாவது,

வட மாகாண தமிழ் மக்கள் அன்றும் இன்றும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இனியும் அவ்வாறான இன்னல்கள் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே இவ் உண்ணாவிரதமும் பிரார்த்தனையும் இடம்பெறுகின்றது.

அண்மையில் யாழ் குடாநாட்டுக்கு ஒரு புதிய கட்டளைத் தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். முன்னர் கிளிநொச்சியில் பதவியேற்றிருந்த அவர் யாழ்.குடாநாட்டில் பதவி ஏற்றதும் பல நல்ல காரியங்களைச் செய்தார். 220 இற்கும் அதிகமாக இராணுவ பணி இடங்களைவ வாபஸ் பெற்றுக்கொண்டார். எமது விவசாயிகள் பாதிக்கப்படக்கூடது என்பதால் படையினரின் உற்பத்தியான மரக்கறிகளை திருநெல்வேலி சந்தைக்கு அனுப்பாது தடுத்தார். ஏ 9 வீதியில் குடாநாட்டுக்குள் இராணுவத்தால் நடத்தப்பட்ட இயக்கச்சி தவிர்ந்த கடைகளை அவர் மூடச்செய்தார். இராணுவத்தினர் மத்தியில் கட்டுப்பாடுகளையும் கட்டுக்கோப்புகளையும் கொண்டு வந்தார்.

இவ்வாறு இருக்கும் போதுதான் ஜெனீவா வந்தது. நேற்றைக்கு முந்தைய தினம் என்னிடம் வந்து விடுதலைப் புலிகள் மீண்டும் வடக்கில் மீள் இணைகின்றார்கள்; இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவது எனது கடமை என்றார். பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது என்றார். படம் போட்டு எவ்வாறு மீள் இணைப்பு நடைபெற்றிருக்கின்றது என்று தாங்கள் நம்புகின்றார்கள் எடுத்துக் காட்டினார்.

இதை ஏன் உங்களுக்கு சொல்கின்றேன் என்றால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. பழைய நாட்களை எமக்குணர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. ஆகவே அன்று நடந்தவற்றை என்றும் நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட இருக்கின்றன. அவ்வாறு நடந்துகொண்டிருப்பதற்கு எதிராகத்தான் இந்த உண்ணாவிரதமும் பிரார்த்தனையும் இடம்பெறுகின்றன. சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28 ஆம் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனீவாவிலும் கூறப்பட்டு வருகின்றன.

நான் இராணுவத் தளபதியிடம் கேட்டேன்  ‘ஜெயக்குமாரி வீட்டினுள் இருந்து யாரோ ஒருவர் வந்த வேளையில் இராணுவத்தினர் அங்கு இருக்கவில்லையா?’ என்று. தூரத்தில் இருந்தார்கள் என்றார். இராணுவத்தினர் அங்கு இருக்கும் போதே சுட்டுவிட்டுத் தப்பிப் போய்விட்டார் என்றால் அதை ஏற்பது சற்றுக் கடினமாக இருக்கின்றது என்றேன். அவர் பதில் கூறவில்லை. எப்படியாவது வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை வரவழைக்கவே இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்பதே தமிழ் மக்கள் அனைவரின் ஏகோபித்த முடிவு.

எமது வருங்காலம் மேலும் இடர்தருவதாக அமையாது. ல்லவிதமாக அமையவேண்டும் என்பதற்காகவே நாம் இந்த அடையாள உண்ணாவிரத்தினையும் பிரார்த்தனையையும் நடத்துகின்றோம்.

ஆனால் எமதருமை மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். வன்முறைகளுக்கு எத்தருணத்திலும் இடம்கொடுக்காதீர்கள்.  அகிம்சை முறையே எமது ஆயுதம். எமது பிரார்த்தனையே எமது கேடயம். இந் நிலையில் எம்மை உறசிப்பார்க்கும் அனைவரையும் தர்மத்தின் பக்கம் சாய வைப்போம்.
நாம் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்க எதிர்ப்பில் ஈடுபடவில்லை. ஆனால் போர்க்கால முடிவில் இடம்பெற்றவை தொடர்பில் ஆய்வு செய்ய இடமளிக்கப்படவில்லை. நடப்பவை தொடர்பாக அரசாங்கம் ஆரஅமர சிந்தித்து பார்க்கவில்லை. அத்துடன் எதேச்சதிகாரமாக இங்கு நடப்பவற்றின் அடித்தளத்தை ஆராய்வதற்கு எமக்கும் அனுசரனைகள் வழங்கப்படவில்லை. ஆகவே அடுத்த நாடுகளுக்கு சொல்லி அழ வேண்டிய நிலைமையை அரசாங்கமே எடுத்து தந்துள்ளது. இதற்காக எம்மைக் குற்றங் கூறுவதில் பயனில்லை.

மனித உரிமையாளர்கள் ருக்கி பெர்ணாண்டோ, அருட்தந்தை பீரவீன் மகேசன் ஆகியோர் அநியாயமாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இன்று பூஸா முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி கூட ஒருநாள் வழக்கேதுமின்றி விடுதலைப்பட வேண்டியவரே. ஆனால் அதுவரையில் அவர் அனுபவிக்கப்போகும் நரக வேதனைகள், அவரின் மகள் அனுபவிக்கப்போகும் அவலங்கள் ஆகியனவற்றிற்கு யார் பதில் சொல்லப் போகின்றார்கள்? ஜெனீவாவில் கதை அளக்க இவர்கள்தான் கிடைத்தார்களா? அரசாங்கமும், இராணுவமும் ‘புலி வந்துள்ளது, புலி வந்துள்ளது!’ என்று ஜெனீவாவில் கூக்குரல் இட இவர்கள்தான் பலிக்கடாக்களாகக் கிடைத்தார்களா?

இராணுவத்தை வெளியேறச் சொன்னால் இதே புலிக்கதை கூறி எமக்கு இராணுவத்தின் பாதுகாப்புத் தேவை என்கின்றார்கள் அரசாங்கமும், இராணுவமும். வேண்டுமானால் சிவில் பொலிஸ் படையை விருத்தி செய்யுங்கள். கூடிய தமிழ்ப் பேசும் பொலிஸ்காரர்களை பொலிஸ் பதவிகளில் நிறுத்துங்கள். அதை விட்டு விட்டு அப்பாவிகளை கைது செய்து அவர்களுக்கு அவலங்களை ஏற்படுத்தாதீர்கள்.

இதைவிட எமது காணிகளை அரசாங்கம் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாரை வார்த்துக்கொடுப்பதை எதிர்த்தும் இவ் விரத்தை நோற்போம். எமது அவலங்கைளயும் இது வரை காலமாக எம்மை இடக்கி ஆண்டு வந்த நிலைமைகளையும் அனைத்து உள்ளுர் மக்களுக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் எடுத்தியம்ப இந்த அகிம்சை வழியை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் எனவும் அவர் தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

வியாழன், 20 மார்ச், 2014

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது..

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையமாக கொண்டு சிறிலங்கா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரென்சு மொழிபேசும் நாடுகளை மையமாக கொண்டு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயல்முனைப்பினைத் தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு ஆபிரிக்க நாட்டுத் தலைநகரங்களில் நேரயாகவும் களப்பணியாற்றப்பட்டு வரும் நிலையில், ஜெனீவாவிலும் இதனை தீவிரப்படுத்தும் பொருட்டு, பிரென்சு மொழி பேசுகின்ற வள அறிஞர்களையும் ஐ.நாவுக்கான தனது வள அறிஞர் குழுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் களமிறக்கியுள்ளது.

ஏலவே நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் ஆபிரிக்காவுக்கான தனது பயணத்தினை முடித்துக் கொண்டு, ஜெனீவாவில் உள்ளவாறு பிரென்சு வள அறிஞரான Frédéric Parpani அவர்களையும் கூட்டிணைத்து சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகளின் மூலம், ஆபிரிக்காவிலுள்ள சிறிய நாடுகளை அமெரிக்காவும், மேற்கு நாடுகளும், தமது செயற்கைக்கோள் மாநிலங்கள் போல வைத்திருக்கின்ற நிலையில், பல்வேறு அழுத்தங்கள் காரணமாக ஆபிரிக்க நாடுகள் சிறிலங்காவைக் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பில் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.


புதன், 19 மார்ச், 2014

நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்தினை


 எழுச்சியுடன் வரவேற்போம் : சுவிஸ் வாழ் தமிழ்
சிங்கள அரசின் தமிழினப்படுகொலைக்கு நீதிகோரும் விடுதலைப் பயணத்தில், லண்டனில் புற்பட்டு ஜெனீவா ஐ.நா முன்றலை எட்டவுள்ள நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்தினை எழுச்சியுடன் வரவேற்க, அணிதிரளுமாறு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (21-03-2014) ஜெனீவா ஐ.நா முன்றலை இந்த நடைப்பயணம் எட்டவுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் 25வது கூட்டத் தொடங்கியிருந்த மார்ச் 3ம் நாள் லண்டனில் தொடங்கிய இந்த நடைப்பயணம் பிரான்ஸ் ஊடாக ஜெனீவாவினை எட்டுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிகளான திருக்குமரன் (பிரித்தானியா) , யோகேந்திரன் (கனடா) ஆகியோருடன் அமிர்தம் ஜயா(பிரித்தானியா) அவர்களும் இந்த நடைப்பயணத்தில் பங்கெடுத்துள்ளனர்.

ஜெனீவா முன்றலை எட்டவுள்ள விடுதலைச் செயற்பாட்டாளர்களை எழுச்சியுடன் வரவேற்க மாலை 15:30 மணிக்கு அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாலை 17:30 மணிக்கு Salle de Montbrillant Paroisse protestante /14 Rue Baulacre / 1202 Geneva எனும் இடத்தில் உள்ள மண்டபத்தில் உள்ளரங்க நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உள்ளரங்க நிகழ்வில் ஐ.நா மனித உரிமைச்சபையில் பங்கெடுத்துள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்து கருத்துக்களை வழங்கவுள்ளனர்.

ஞாயிறு, 16 மார்ச், 2014

தமிழ்மக்களின் பிரச்சினையை மனதில் கொண்டே

 அமெரிக்கா பிரேரணையை தமிழ் மக்களாகிய எமது பிரச்சினைகளை மனதில் கொண்டுதான் அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது. அந்த வகையிலேயே ஜெனிவாவில் கொண்டு வரப்படும் அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ள என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டமைக்கு காரணம் என்ன என கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை நிருபர் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்கா பிரேரணை ஒன்றை முன்னெடுக்கும் போது அதில் வெற்றியடையும் வகையிலான பிரேரணையொன்றையே முன்வைக்கும்.

ஆகவே ஏனைய நாடுகள் எதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் அதற்கமையத்தான் அமெரிக்கா தனது பிரேரணையை முன்வைத்துள்ளது.

இந்தப் பிரேரணையின் எட்டாவது பிரிவில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கூடாக ஒரு விசாரணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளது.

ஆகவே அதற்கூடாக இந்த விசாரணையை செயற்படுத்தலாம் என்ற எண்ணமும் நிலவுகின்றது.

அந்த அடிப்படையில் தான் நானும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.

அதாவது முழுமையாக அமெரிக்க பிரேரணையை நாங்கள் எதிர்க்கின்றோம் எனத் தெரிவித்தால் நீங்களும் இந்தப பிரேரணையை எதிர்க்கின்றீர்கள். இலங்கை அரசாங்கமும் எதிர்க்கின்றது.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் ஏன் இந்தப் பிரேரணையை முன்வைக்க வேண்டும் என்று அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் நினைக்கலாம்.

இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காக நீர்த்துப்போன ஒரு பிரேரணையாக இருந்தாலும் இந்த பிரேரணை சரியான நிலைக்கு செல்வதாகக் கருதி இந்த பிரேரணைக்கு அனுசரணை வழங்கியிருந்தோம்.

அதேநேரம் இந்தப் பிரேரணையை கூடிய வலுவுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்.

பிரித்தானியா, கனடா அல்லது அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தப் பிரேரணையை வலுவுள்ளதாக மாற்றும் வகையில் செயற்பட்டால் இதில் மாற்றத்தை ஏற்படுத்தி வலுவுள்ளதாக்க முடியும்.

எந்த அளவிற்கு இது நடைமுறைப்படுத்தப்படும் என்று என்னால் இப்போது கூற முடியாதுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தீர்மானத்தை விமர்சித்து குழப்ப வேண்டாம்

ஐ.நா.தீர்மானத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப் படுத்துவோர் விமர்சித்து குழப்ப வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் நகைப்பிடமாகத் தோன்றுகின்றது. குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.தமிழ் மக்களின் விடுதலைப்; போராட்டத்தை கொச்சைப் படுத்தி அப்போராட்டமானது வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளால் விரக்தியடைந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு காரணமாணவர்கள் இலங்கை இராணுவம் மட்டுமல்ல, இராணுவத்தின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பொதுமக்களைவிட விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள்தான் அதிகம்; எனக்கூறி, விடுதலைப் புலிகளையும் சர்வதேச விசாரணைகளுக்குட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தவர்தான்தான் இந்த சுமந்திரன் அவர்கள். இவ்வாறு கூறியவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஐ.நா.  தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுவார். எந்த நம்பிக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவரை அங்கு அனுப்பி வைத்தது. இவர் கொழும்பில் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், தென் இலங்கையில் சில அரசியல் தலைவர்களை திருப்தி படுத்துவதற்காகவும் இடைக்கிடை இவ்வாறான அறிக்கைகளை தமிழிலும் விசேடமாக சில பிரமுகர்கள்

வாசிக்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்திலும் விடுப்பார். இவ்வாறானவர் எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை ஐ.நா சபையில் எடுத்துரைப்பார். விடுதலைப் புலிகள் என்பது போராட்டக்குழுவாக இயங்கிய ஒரு அமைப்பு. ஆனால் இலங்கை அரசு என்பது ஒரு அங்கீகரிக்கப் பட்ட அமைப்பு. எனவே சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அரசு கட்டுப்பட்டே ஆக வேண்டும். எனவே சர்வதேச சட்டதிட்டங்கள், மனித உரிமைகள் மீறப் படும் போது கண்டிப்பாக அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பில் யார் எந்த பதவியில் இருந்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.&nbsp; அதுமட்டுமல்ல அவர்கள் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. யாரைப் பிடித்து எப்படி விசாரணை செய்வது? விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திவிட்டு, புலிகளும் விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கூறித்திரிபவர் எவ்வாறு எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமது மக்களின் நிலை பற்றி எடுத்துரைப்பார்?. இவர்தான் தமிழ் மக்களின் பிரதிநிதி என்று தன்னைக் கூறிக்கொண்டு தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள இரட்டை வேடம் போடுகின்றார்;. இவ்வாறானவர்களின் கையில் தமிழ் மக்களின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவதை நினைக்கும் போது, தமிழ் மக்களின் சாபக்கேட்டை ஆண்டவனாலும் தீர்த்து வைக்க முடியாதுபோல தோன்றுகின்றது. ஏனெனில் தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே எழுதிக் கொண்டார்கள்.<br />மனித உரிமை மீறல்கள் எந்தளவிற்கு முக்கியமாக விசாரணை நடத்தப்பட வேண்டியதோ, அந்தளவிற்கு முக்கியமானது எமது மக்களின் வாழ்வாதார பிரச்சினையும். அதாவது பசி பட்டினியுடன் வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வறுமையைப் போக்க வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதுவரை அவர்களுக்கு ஒழுங்கான வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக உடல்

உறுப்புக்களையும் தம் நெருங்கிய உறவுகளையும் இழந்துவிட்டு, குண்டுச் சிதறல்களை உடம்பிலே தாங்கிக்கொண்டு, வாழ வழி தெரியாது தவிக்கும் மக்களின் துயரங்களையும் துடைக்க வேண்டும். எனவே இந்தப் பிரச்சினைகளும் எல்லோருடனும் கலந்துரையாடி, தீர்த்து வைக்கப்பட வேண்டும்.இதைவிடுத்து வெறுமனே வீர வசனங்கள் பேசி மக்களின் உணர்வுகளை தூண்டிவி;ட்டு அறpக்கைள் விடுவதால், எவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் “தமிழ் மக்கள்தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி” என்று கூறி சரத்பொன்சேகாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்த போது சிங்கள மக்கள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு ஒன்று திரண்டு மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து வெற்றிபெற வைத்தார்களோ, அதே போன்று இலங்கையிலுள்ள பொது அமைப்புகள் அத்தனையும் ஒன்று திரண்டு ஐ.நா.தீர்மானத்திற்கு எதிராக ஜனாதிபதிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள். அதன் மூலம் ஜனாதிபதிக்கு ஆதரவு பெருகிக் கொண்டே போகும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி தமிழ்மக்கள்தான். தலைவர்கள் எல்லோரும் தப்பித்துக் கொள்வார்கள்;. இரட்டை வேடம் போடுபவர்கள் எப்படியும் வாழப் பழகிக் கொள்வார்கள். புத்திஜீவிகள் அத்தனை பேரும் புத்தியாக
சீவித்துக்கொள்வார்கள். அப்பாவி மக்கள் மட்டும் அகப்பட்டுக் கொள்வார்கள்;. போராட்டக் களத்தை சற்று திரும்பிப் பார்த்தால் புரியும் அனைவருக்கும,; இன்று புத்திஜீவிகள் என்று கூறிக் கொள்பவர்களோ அவர்களின் பிள்ளைகளோ அன்றைய போரட்டங்களின் போது புத்தியாக சீவித்துக் கொண்டிருந்தார்கள்.<br />சிங்கள மக்களுக்கும்சரி, இஸ்லாமிய மக்களுக்கும்சரி அம்மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்கக்கூடிய நல்ல தலைவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் நல்ல தலைவர்களும் இல்லை, நல்லவர்களை தேர்தல் காலங்களில் எம் மக்கள் தேர்ந்தெடுப்பதும் இல்லை. அதன் விளைவுதான் இன்று சுமந்திரன் போன்றோர் வெளிநாடு சென்று எம்மக்களுக்காக ஆதரவு திரட்டுகின்றார்கள். குழப்புவதற்குத்தான் நான் இருக்கின்றேனே, பின்பு நீங்கள் எல்லோரும் எதற்கு என்று கூறுகின்றார் போலும். இன்றைய சூழ்நிலையில் எமது பிரச்சினையை இந்தியாவிடம் ஒப்படைத்துவிடுவதே சாலச்சிறந்தது. எமது இன்பத்திலும், துன்பத்திலும் உதவும் ஒரே நாடு இந்தியாவே
.வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்,தமிழர் விடுதலைக் கூட்டணி.


சனி, 15 மார்ச், 2014

ஊடகங்களின் கவனத்தினைப் பெற்ற சிறுமி விபூசிகா :

 
இலங்கைப் படையினரால் கடத்தப்பட்ட தாயும் மகளினதும் விவகாரம் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. இத்தகவலை அனைத்துலக ஊடகங்களான ஏபி( AP) மற்றும் சனல்-4 ஆகியன வெளியிட்டுள்ளன.

14 வயதுடைய சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயார் இலங்கை படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய மறுகணமே, இவ்விவகாரத்தினை EINPRESSWIRE எனும் அனைத்துலக செய்தி வழங்கியூடாக அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில் அனைத்துலகத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் ஏலவே இவ்விருவரும் பெற்றிருந்த நிலையில், குறித்த கடத்தல் சம்பவம் மீண்டும் அவர்கள் மீதான அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றுள்ளது.
தமிழீழத் தாயகத்தின் கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் இலங்கை படையினரால் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டு, தாயார் ஜெயக்குமாரி அவர்களுக்கு 3 மாத தடுப்புக்காவலும், 14 வயது சிறுமி விபூசிக்காவுக்கு சிறுவர் நன்னடத்தை முகாமும் என, கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளி இரவு உத்தரவிட்டிருந்தது.
இவ்விவகாரத்தில் அனைத்துலக மட்டத்தினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே, கடத்தப்பட்ட இவ்விருவரையும் கைது செய்யததாக இலங்கை அரச வட்டாரங்கள் வியாக்கியானம் புரிந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
  

வெள்ளி, 14 மார்ச், 2014

பாரிய விரிசல்! ஐ.நாவில் சிங்களவர்களும் போர்க்குற்ற


எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சிங்கள சகோதரர்களும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துகின்றனர். இந்தநிலையில் ஐ.நாவில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கலாம் என ச.வி.கிருபாகரன் தெரிவித்தார்.
இலங்கை- இந்தியாவிற்கிடையில் பாரிய விரிசல், இது ஐ.நாவில் தாக்கம் செலுத்துவதுடன் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் தெரிவித்தார். நேற்றய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஐ.நாவில் தெரிவித்த கருத்து

வியாழன், 13 மார்ச், 2014

சிறுமி சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டார் :

காணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில், அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றிருந்த 13வயது சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுதொடர்பில் அனைத்துலகத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அச்சிறுமியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் அனைத்துலக சமூகத்தினைக் கோரியுள்ளது.

கிளிநொச்சி தருமபுரத்தினைச் சேர்ந்த விபூசிகா எனும் 13வயதுடைய சிறுமியே இன்று சிறிலங்கா படையினரால் அவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

காணாமல்போன தனது அண்ணனுக்காக தனது தாயாருடன் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்திருந்ததோடு, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளா நவிப்பிள்ளை மற்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் ஆகியோரது யாழ்ப்பாண பயணத்தின் போது, காணாமல்போனவர்களது உறவினர்களின் போராட்டத்தில் கதறியழுது, அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றிருந்தவர்.

இந்நிலையில் கிரிமினல் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி சிறிலங்கா அரச படையினர் அச்சிறுமியின் வீட்டினைச்சுற்றி வளைத்திருந்தனர்.

அச்சிறுமியும் அவரது தாயாரும் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்த மறுகணம், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளார் அலுவலகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாசபைக்கான பிரதிநிதி முருகையா சுகிந்தன் அவர்கள், காணாமல் போனவர்களது உறவினர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தமாறும் கோரியிருந்தார்.

இதேவேளை சிறிலங்கா அரசினது அத்துமீறல்கள் அனைத்துலக ஊடகங்களில் அம்பலப்பட்டு வரும் நிலையில், குறித்த சம்பவத்தினை அனைத்துலக ஊடகப்பரப்பிற்கும் நா.தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றது.

http://world.einnews.com/pr_news/194999075/sri-lanka-mother-daughter-of-a-family-of-the-disappered-abducted-by-security-forces-tgte-urges-un-to-act

பிந்திய செய்திகளின்படி அச்சிறுமி மட்டுமே சிறிலங்காப் படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் காவல்துறை ஒருவர் காயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண, சிறிலங்கா இராணுவத்துக்கு இதில் தொடர்பு கிடையாது என சிறுமியின் கடத்தலை மூடிமறைத்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமரின் யாழ் பயணத்தின் போது :


நவிப்பிள்ளையின்
பயணத்தின் போது
  சிறுமியின் கதை : என் அண்ணாவ தாங்கோ .., ” ” என் அண்ணாவ எங்கே மறைச்சு வைச்சிருக்கிறீங்க… “என காணாமல்போனவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் ஒரு சிறுமி கதறி அழுவாள் . அந்த சிறுமி மூன்று அண்ணன்களுக்கு நான்காவதாக பிறந்தவள். முதல் இரண்டு அண்ணாகளையும் பறிகொடுத்து விட்டாள் மூன்றாவது அண்ணனை தொலைத்து விட்டு தன் தாயுடன் சேர்ந்து தேடிக்கொண்டு இருக்கின்றாள். இவள் காணாமல் போனவர்களின் உறவுகளால் நாடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் அண்ணாவை மீட்பதற்காக கதறி அழுவாள். புளியம்பொக்கணை முசுறன்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி தர்மபுரம் மகா வித்தியாலையத்தில் தரம் 8 லில் கல்வி கற்று வருகிறாள் திருகோணமலை செல்வநாயகபுரத்தில் மூன்று அண்ணன்களுக்கு நான்கவதாக பிறந்தவளே விபூசிகா என்னும் அந்த சிறுமி இவள் சிறு வயதாக இருந்த போதே தகப்பனார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் .அதன் பின்னர் இவளது தாயார் கூலி வேலை செய்தும் வீட்டில் இருந்து கடைகளுக்கு சாப்பாடு செய்து கொடுத்தும் அதன் மூலம் வரும் வருமானத்திலையே இவர்களை வளர்த்து வந்தார் இந் நிலையில் சிறுமியின் மூத்த அண்ணன் படித்து கொண்டிருந்த காலப்பகுதியில் 2006ம் ஆண்டு 10 மாதம் 20 ம் திகதி வீட்டுக்கு அருகாமையில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்ப்பட்டார். அதன் பின்னர் திருகோணமலையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என கருதி அந்த சிறுமியின் தாய் தன் ஏனைய மூன்று பிள்ளைகளுடனும் வன்னிப்பகுதிக்கு வந்து குடியேறினாள் பின்னர் யுத்தம் காரணமாக ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து சென்று 2009ம் ஆண்டு 5ம் மாதம் 5ம் திகதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்த போது அங்கு வீசப்பட்ட எறிகணைக்கு தனது இரண்டாவது அண்ணனையும் பறிகொடுத்தாள் அதன் பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்ற வேளை 2009ம் ஆண்டு 5ம் மாதம் 15ம் திகதி தன் மூன்றாவது அண்ணனையும் தொலைத்து விட்டாள் . அதன் பின்னர் தனது தாயுடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்துவிட்டாள் . தன் மூன்றாவது அண்ணனனையும் பறிகொடுத்து விட்டதாக நினைதிருந்த வேளையில் தான் L.L.R.C புத்தகத்தில் தன் அண்ணனின் படம் இருப்பதாக அறிந்து கொண்டாள் அவள் அந்த புத்தகத்தை பார்த்த போது புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் போராளிகள் என சில இளைஞர்கள் உடல் பயிற்சி செய்யும் படம் இருந்தது. அந்த இளைஞர்களுக்குள் தனது மூன்றாவது அண்ணனும் இருப்பதை கண்டாள் அதன் பின்னரே தன் அண்ணன் உயிருடன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில் அவனை தேடி அலைந்து கொண்டும் அண்ணனை மீட்பதற்காகவும் கதறி அழுது கொண்டு இருக்கிறாள். கணவனையும் இழந்து மூத்த இரண்டு ஆண் பிள்ளைகளையும் இழந்து மூன்றாவது ஆண் மகனையும் தொலைத்து விட்டு நான்காவது பெண் பிள்ளையுடன் சேர்ந்து தொலைந்து போன தன் மூன்றாவது மகனை பற்றிய தகவல் அறிய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு கதறி அழுது கொண்டு இருக்கிறாள் அந்த சிறுமியின் தாய் தொலைந்த தன் மூன்றாவது மகனை பற்றிய தவல்களை அறிய அந்த தாய் செல்லாத இடம் இல்லை எங்கும் அவனை பற்றிய தகவல்களை அந்த தாயால் அறிய முடியவில்லை தன் மகன் இன்றும் உயிருடன் ஏதோ ஓர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்றே அந்த தாய் நம்புகிறாள். தன் மகனை உடனே விடுதலை செய்யாவிட்டாலும் அவனை பற்றிய தகவல்களையாவது தெரிவியுங்கள் என்று கோரியே அனைத்து போராட்டங்களிலும் அந்த தாய் கலந்து கொண்டு கதறி அழுகிறாள். அதேவேளை அந்த தாய் தனது நான்காவது பிள்ளையான அந்த சிறுமியின் எதிர்காலம் பற்றியும் கவலையுடன் இருக்கிறாள். குறித்த சிறுமி பற்றி தாய் கூறுகையில் இவள் அண்ணா வேணும் என்று அழுது கொண்டு இருக்கிறாள். படிப்பில் கவனம் செலுத்துகிறாள் இல்லை. வீட்டிலும் வெறித்து பார்த்து கொண்டு இருப்பாள். திடீர் திடீர் என அண்ணா வேணும் என அழுவாள். ஏம்மா அண்ணாவை விடுனம் இல்லை ? அண்ணாவை எங்கே தடுத்து வைச்சிருபாங்கள் ? அண்ணாவை இன்னுமா சித்திரவதைப்படுத்துவாங்க ? எப்ப அம்மா அண்ணாவை விட்டுவாங்க ? என்றெல்லாம் கேட்டு அழுவாள் எனக்கு என்ன சொல்லுரதேன்றே தெரியாமல் இருக்கும் பள்ளிக்கூடம் போகாமல் என்னோடு போராட்டங்களில் கலந்து கொண்டு அண்ணா வேணும் என்று அழுகிறாள். பள்ளிக்கூடம் போய் படி என்றா அண்ணா முதல்ல வரட்டும் அப்புறம் படிக்கலாம் என்கிறாள்.இப்ப இவளை நினைச்சு இவள் எதிர்காலத்தை நினைத்து எனக்கு கவலையாக இருக்கிறது.என அன்று ஒருநாள் அவள் தாயார் கூறினார் அந்த சிறுமியோ என் அண்ணா எங்கே ? என் அண்ணாவ எங்கே வைச்சிருக்கிறீங்க ? ஏன் என் அண்ணாவை என்கிட்ட இருந்து பிரிச்சு ஏன் என்னை அநாதை ஆக்கினீங்க ? எனக்கு என் அண்ணா வேணும் என கதறி அழுது கொண்டே இருந்தவள் இன்று அவளும் கடத்தப்பட்டு விட்டாளாம்.

புதன், 12 மார்ச், 2014

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே! இதனை சர்வதேச


 அமைப்புக்களுக்கு நாம் வலியுறுத்த வேண்டும்” நாடு கடந்த தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன்
ஸ்ரீலங்காவில் 2009 மே மாதம் 19,20ம் திகதிகளில் அரச படையினர் நடாத்திய போர் நடவடிக்கைகளினால் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ள பல சர்வதேச அமைப்புக்கள் அது தமிழ் இனத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் இனஅழிப்பு நடவடிக்கை என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் 25வது மனித உரிமை மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட போர் தமிழினத்தவர்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு போர் என்பதனை வலியுறுத்த வேண்டும். அதனை வலியுறுத்தும் வகையில் நாம் “சுநஅநனயைட துரளவiஉந கழச வுயஅடைள” (தமிழினத்தவரின் நீதிக்கான திருத்தம்) என்ற நூலினை வெளியிட்டுள்ளோம்”.

கடந்த செவ்வாயன்று மாலை ஸ்காபுறோவிலுள்ள “Pசinஉந டீயஙெரநவ ர்யடட” மண்டபத்தில் நடைபெற்ற ஊடகத்துறையினருக்கான கருத்தரங்கில் காணொளி மூலம் உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமாரன் இவ்வாறு கூறினார். நாடு கடந்த தமிழீழ அரசின் புலம் பெயர்ந்தோர் விவகார அரமைச்சர் திரு.நிமல் விநாயமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பேராசிரியர் சந்திரகாந்தன் நூலினை
அறிமுகம் செய்து வைத்து இக்கால கட்டத்தில் இத்தகைய நூல் வெளி யிடப்படுவது அத்தியாவசியமெனக் கூறினார்.

பிரதமர் திரு. உருத்திரகுமாரன் தொடர்ந்து உரையாற்றிய போது

“ஐ.நா.வின் நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கையில் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தமது உரிமைகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்த்திரேலிய சட்ட அறிஞர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மாத்திரம் ஸ்ரீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடாத்தப் படவேண்டும் என வலியுறுத்த வேண்டியது புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பொறுப்பாகும். இதுகுறித்து உள்நாட்டில் ஸ்ரீலங்கா அரசு விசாரணை நடாத்த வேண்டும் என சில அமைப்புக்கள் கோரி வருகின்றன. அர்த்தமற்ற அந்தக் கோரிக்கை ரத்துச் செய்யப்பட வேண்டும். நாம் நமது அரசியல் நடவடிக்கைகளையும் வேலைத் திட்டங்களையும் ஒன்றிணைத்து போராட வேண்டும் எனவும் பிரதமர் திரு.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்தார்.

என்.எ.பி.கட்சியின் ஒன்ராறியோ மாகாணத் தலைவர் திரு.நீதன் சான்,கொன்சவேற்றிப் கட்சியின் முன்னாள் வேட்பாளரான திரு.சான் தயாபரன், திரு.ஈழவேந்தன் ஆகியோரும் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். இராப் போசன விருந்துபசாரத்துடன் கூட்டம் நிறைவெய்தியது.

இந்தியாவிற்கு விஜயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வாரத்தில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை இந்தியா இன்னமும் அறிவிக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தீர்மானம் குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

செவ்வாய், 11 மார்ச், 2014

ஐ.நா சனல்-4 வின் புதிய காணொளி! எதுவும் தெரியாதென்கிறது

 இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றிருந்த போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்ததை சித்தரித்துக் காட்டும் சனல் 4 தொலைக்காட்சி சர்ச்சைக்குரிய புதிய காணொளி குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் காணொளி குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் புதிய பேச்சாளரான ஸ்ரிபன் துஜாரிக் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை குறித்து கடந்த ஒரு சில தினங்களாக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களில் மாற்றமேதும் காணப்படவேயில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான குறித்த காணொளியை நான் இதுவரை பார்க்கவேயில்லை. முன்னாள் ஐ.நா. வின் பேச்சாளரான மார்ட்டின் இலங்கை விவகாரம் பற்றியும் அது குறித்து செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடு குறித்தும் விரிவான முறையில் பேசியுள்ளதாகவே நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

திங்கள், 10 மார்ச், 2014

மக்கள் வெள்ளம் ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான **

 இலங்கையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு சுயாதீன விசாரணை வேண்டும் என உலகின் பல பாகங்களில் இருந்து ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் 25வது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு நியாயமான சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி உலகின் பல பாகங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஐ.நா முன்றிலில் அலையெனத் திரள்வோம் :

நாடுகடநத தமிழீழ தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் அனைத்துலக விசாரணையினை வென்றெடுக்க ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. சிறிலங்கா விவகாரத்தில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர், அனைவரது கவனத்தினையும் பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய தமிழர்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஜெனீவாவில் வரும் திங்கட்கிழமை (10-03-2014) இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேசத் தீர்மானம் அங்கத்துவக நாடுகளது கருத்துப்பிரமாற்றச் சுழற்சிக்குள் இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையினை மையமாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு தமிழர் அமைப்புக்கள் பலவும் கூட்டாகவும், தனித்தும் அனைத்துலக விசாரணையினை நோக்கிய களச்செயற்பாட்டினை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவ்வகையான களச்செயற்பாட்டுக்கு மக்கள் தளத்தில் இருந்து வலுவூட்டவும், மக்களின் நிலைப்பாட்டினை அனைத்துலகிற்கு பறைசாற்றவும், ஐ.நா முன்றலில்

மக்கள் வெள்ளமாக அணிதிரள்வது காலத்தின் கடமையென நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது சிங்கள அரசினால் நடத்தப்பட்ட

போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில்; ஒளிப்படக் கண்காட்சியினை ஜெ னீவாவில் தொடர்சியாக மேற்கொண்டு தமிழ்உணர்வாளர் திரு.கஜன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தங்களது தோழமையினை அவருக்கு தெரிவித்து உற்சாகப்படுத்தியிருந்தனர்.!வெள்ளி, 7 மார்ச், 2014

தமிழ் குழுக்கள் ஆஸியிடம் விண்ணப்பம்

இணை அனுசரணை வழங்குமாறு!!! இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் யுத்தக்குற்றங்களை ஆராய்வதற்கான ஒரு சர்வசே விசாரணையைக் கோரும் அமெரிக்க தீர்மானத்தை வரவேற்றுள்ள தமிழ் குழுக்கள் அப்பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளன என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட தீர்மான வரைவு இராணுவ மிகை நடவடிக்கைகள் தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் படி கேட்டுள்ளது.
2015 மார்ச்சுக்கு முன்னர் எழுத்து வடிவ அறிக்கையையும் செப்டெம்பரில் வாய் மொழி மூல அறிக்கையையும் சமர்ப்பிக்கும்படி இந்த தீர்மானம்  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கேட்கின்றது.
மே 2009 இல் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40000 தமிழ் பொதுமக்கள் அரசாங்க படைகளால் கொல்லப்பட்டதாக நம்பகமான விசாரணைகள் சுட்டுகின்றன.
சர்வதேச விசாரணை தேவையில்லாததொரு தலையீடு எனக்கூறிய இலங்கை அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் ஜீ.வி.பிஷப்பிடம் இந்த தீர்மானத்தை ஆதரிக்குமாறும் முடியுமாயின் இணை அனுசரணை வழங்குமாறும் கேட்பதற்காக ஒரு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கன்பெரா சென்றுள்ளார்
 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யூலி பிஷப்புடன் பேசியுள்ளார்;.இவர் இரண்டு பிரதான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கமளித்தார்.
இலங்கை பொறுப்புக் கூறுதல் விடயத்தில் எதையும் செய்யவில்லை என்பதால் பொதுவான கருத்தொற்றுமை உள்ளது. என சுமந்திரன் அவுஸ்திரேலிய நெட்வேக்குக்கு கூறினார். உள்நாட்டு யுத்தத்தின் போது இறுதிகட்டத்தில் நடந்ததாக கூறப்படும் கொடூரங்களை விசாரிக்கும்படி ஐ.நா மனித உரிமை ஆணையாளரை கேட்கும் தீர்மானமொன்று தற்போது ஐ.நா மனித உரிமை பேரவையில் உள்ளது.
நாம் ஒரு சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை கேட்டுள்ளோம் நாம் பார்த்த இந்த வரைவு ஒரு தீர்மானமூடாக சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரவில்லை.
நாம் சற்று ஏமாற்றமடைந்துள்ளோம் இருப்பினும் இந்த தீர்மானம் தொடர்பில் முன்னேற்றம் கண்டு வருகிறோம் அமெரிக்கா ,பிரித்தானியா மற்றும் வேறு சில நாடுகள் இதை முன்னெடுத்து தேவையான விளக்கங்களை பெற்று அது நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமென நாம் நம்பிக்கையோடு உள்ளோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மார்ச் 28 இல் இந்த தீர்மானம் தொடர்பாக வாக்களிக்கவுள்ளது.

வியாழன், 6 மார்ச், 2014

லண்டனில் இருந்து புறப்பட்டது ஜெனீவாவினை நோக்கிய

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச்சபைத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஜெனீவாவினை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் லண்டனில் இருந்து புறப்பட்டது. பிரித்தானிய பிரதமருக்கு கோரிக்கை மனுவொன்றினைக் கையளித்தவாறு, பிரித்தானிய பிரதமர் அலுவலக வாயிலில் இருந்து இந்த நடைப்பயணம் புறப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிகளான திருக்குமரன் (பிரித்தானியா) ,யோகேந்திரன் (கனடா) ஆகியோருடன் அமிர்தம் ஜயா அவர்கள் பொதுமகனாக இந்த நடைப்பயணத்தில் பங்கெடுத்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் முன்னெடுக்கப்படும் இந்த நடைப்பயணமானது, தலைநகர் பாரிஸ் ஊடாக 21-03-2014ம் நாளன்று ஜெனீவாவினை சென்றடையவுள்ளது. இந்த நடைப்பயணத்தின் ஊடாக வேற்றின மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களின் நீதிக்கான நியாயப்பாடுகளை ஆங்கிலம் - பிரென்சு மொழிகளில் விநியோகித்தும், கிடைக்கக் கூடிய வாய்ப்புகளில்அரசியல் அரச பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை கையளித்தவாறும், இந்த நடைப்பயணத்தினை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[ காணோளி புகைப்படங்கள் இணைப்பு]
 


www.nilavarai.com