siruppiddy

புதன், 19 மார்ச், 2014

நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்தினை


 எழுச்சியுடன் வரவேற்போம் : சுவிஸ் வாழ் தமிழ்
சிங்கள அரசின் தமிழினப்படுகொலைக்கு நீதிகோரும் விடுதலைப் பயணத்தில், லண்டனில் புற்பட்டு ஜெனீவா ஐ.நா முன்றலை எட்டவுள்ள நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்தினை எழுச்சியுடன் வரவேற்க, அணிதிரளுமாறு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (21-03-2014) ஜெனீவா ஐ.நா முன்றலை இந்த நடைப்பயணம் எட்டவுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் 25வது கூட்டத் தொடங்கியிருந்த மார்ச் 3ம் நாள் லண்டனில் தொடங்கிய இந்த நடைப்பயணம் பிரான்ஸ் ஊடாக ஜெனீவாவினை எட்டுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிகளான திருக்குமரன் (பிரித்தானியா) , யோகேந்திரன் (கனடா) ஆகியோருடன் அமிர்தம் ஜயா(பிரித்தானியா) அவர்களும் இந்த நடைப்பயணத்தில் பங்கெடுத்துள்ளனர்.

ஜெனீவா முன்றலை எட்டவுள்ள விடுதலைச் செயற்பாட்டாளர்களை எழுச்சியுடன் வரவேற்க மாலை 15:30 மணிக்கு அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாலை 17:30 மணிக்கு Salle de Montbrillant Paroisse protestante /14 Rue Baulacre / 1202 Geneva எனும் இடத்தில் உள்ள மண்டபத்தில் உள்ளரங்க நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உள்ளரங்க நிகழ்வில் ஐ.நா மனித உரிமைச்சபையில் பங்கெடுத்துள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்து கருத்துக்களை வழங்கவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com