siruppiddy

புதன், 29 ஜனவரி, 2014

இலங்கையை எதிர்க்க இந்தியாவுக்குக் கடும் அழுத்தம்;

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கையை, இந்திய அரசு எதிர்க்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழின உணர்வாளர்களை ஒன்று திரட்டிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் “உதயனுக்குத்’ தெரிவித்தார்.   எதிர்வரும் முதலாம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர்.   ஐ.நா. மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை

நிறைவேற்றுவதற்காக இந்திய அரசு செயற்பட வேண்டும். அதற்கு இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.   எவ்வாறான வகையில் அந்த அழுத்தங்களைக் கொடுப்பது, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்பவை தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக நெடுமாறன் உதயனிடம் மேலும் கூறினார்.

செவ்வாய், 21 ஜனவரி, 2014

தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை


"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. மகிந்த ராஜபக்ச பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கே பெறுமதியற்றவர்." முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா
 கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடிய உன்னதமான போராளிகளை எதிரியே ஒரு கட்டத்தில் புகழ்வான்.
துரோகிகளுக்கும் நக்கிப்பிழைப்பவர்களுக்கும் என்றைக்கும் அந்த புகழாரம் கிடைக்கப்போவதில்லை.
இனியாவது சிலர் புரிந்து கொண்டு தம்மை மாற்றி கொள்வார்களா?

வியாழன், 16 ஜனவரி, 2014

சிறைச்சாலையில் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுகின்றனர்

வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை, சிறைச்சாலையின் பெண் அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெண் சிறைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி அடிக்கடி சோதனையிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
இவ்வாறு கடுமையாக சோதனை இடுவதன் மூலம் கைதிகளின் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண் கைதிகள் மட்டுமன்றி சிறுவர் சிறுமியரும் இவ்வாறு நிர்வாணமாக்கி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சந்தேகம் ஏற்பட்டால் வைத்தியர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி சோதனையிட முடியும் என தெரிவித்துள்ளனர்.

வெளியே அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கைதிகளை சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்படும் போது இவ்வாறான சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

புலிகளோடுஈழத்தமிழர்கள் தொடர்புவைத்தாலும் பிரச்சனை -


 அரசோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனைதான்!  - பிரான்ஸ் தமிழரது குடியுரிமை ரத்து! 
இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டதற்காக, ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பிரான்ஸ் மீளப்பெற்றுக்கொண்டுள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்றுவந்துள்ளார்.
   
அத்துடன் இலங்கை தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ளார். படம்இவரது குடும்ப விபரங்களை நிர்வாக ரீதியாக ஒழுங்கு படுத்துவது தொடர்பான ஒரு சந்திப்பில் இந்த விபரங்கள் பிரான்ஸ் அகதிகள் திணைக்களமான OFPRA க்கு தெரியவந்தைதையடுத்து அந்த அமைப்பு அந்த இலங்கைத் தமிழருக்கு வழங்கிய அகதி தகுதி நிலையை திரும்பப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக OFPRAஅவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில். '2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அகதிகளுக்கான ஜெனீவா சட்டத்தின் 1சி 1 சரத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு 3 தடவைகளுக்கு மேல் சென்று வந்தது,நிர்வாக ரீதியாக தொடர்பு கொண்டது.இலங்கைவில் உள்ள அரச நிர்வாகத்துடன் எந்தவித தடங்கலுமின்றி தொடர்பு கொண்டது ஆகிய காரணங்களின் அடிப்படையில் மீளப் பெற்றுக்கொள்கிறோம்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் அச்சுறுத்தல் உள்ளது என்று அகதி தகுதிநிலை பெறுவதற்காக நீங்கள் தெரிவித்த காரணங்கள் இலங்கை அரசாங்கத்துடன் நீங்கள் எந்தவித நெருக்கடிகளுமின்றி தொடர்பு கொண்டதன் மூலம் வலுவற்றதாகியுள்ளதென தெரிவித்துள்ள பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் (OFPRA)) வெளிநாட்டவர் வருகை மற்றும் தங்குவதற்கான உரிமை தொடர்பான பிரான்சின் எல் 731-1,எல் 731-2 மற்றும் ஆர்733-10 ஆகிய சட்ட சரத்துக்களின் கீழ் தங்களது முடிவை ஒரு மாத காலத்துக்குள் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

படம்'பிரான்சில் அகதி தகுதி நிலை பெற்ற ஒருவர் இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாகவே அல்லது வேறெந்த வகையிலுமோ எந்தவித தொடர்பும் வைத்திருக்க கூடாது' என்ற விடயம் தனக்கு தெரியாது என்று பாதிக்கப்பட்டவர் தெரிவித்த கருத்தை பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் ஏற்க மறுத்துவிட்டது.புலம் பெயர்ந்த தமிழர்களுடைய வரலாற்றில் பிரான்சில் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதிநிலை திரும்பப் பெறப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

 

www.nilavarai.com