siruppiddy

வியாழன், 5 டிசம்பர், 2013

தலைவருடன் சில மணிப் பொழுதுகள் !!!


 அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப  இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம்

இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.

´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளி இருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து, தளிர்த்து, சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. !நானும் அண்ணனைப் பார்க்க

வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்.` எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.

என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காகத் தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.

என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

நேற்று முன் தினம் மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும் தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் ஆளனுப்பியிருந்தார். `எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும்` சொல்லி விட்டிருந்தார்.

ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம். நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல்துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.

அதே சிரிப்பு..! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் எம்மை வரவேற்றார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.

அவருடனான இரவு உணவு நளபாகம்தான். இறால், இறைச்சி, மரக்கறி... என்று சுவையாக இருந்தது. அங்கிருந்த உறவுகள் அதை நட்போடு பரிமாறிய விதம் மிகவும் இதமாக இருந்தது. அந்த இனிய உபசரிப்பில் மனசும் வயிறும் நிறைந்திருக்க நாம் விடை பெற எழுந்து கொண்டோம்.

அப்போதுதான் தமிழ்ச்செல்வன் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். "வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்" என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.

அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.

வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ, சமையல் செய்தவர்களிடமும், உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான

கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.

உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..! எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து "மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்" என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.

நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போரின் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதியில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம். கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே ´எங்கே.. இன்று எம்மால்

அண்ணையைச் சந்திக்க முடியாது` என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று மனசு பயப்பட்டது.
அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.
ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவரான, ரேகா ஓட்டி வந்தார். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல அக்கா.. அக்கா.. என்று உரிமையோடு இனிமையாகப் பேசினார்.

சில நிமிடங்களில் வாகனம் மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா, அலுவலகமா தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.

சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது. ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.
சந்திப்புக்கான பிரத்தியேகமான, தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.

மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. நா பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.

எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள். சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது "மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது" என்றார். "இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்" என்றார். 

பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். தகடை மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் அவனது விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார். மொறிஸ் பற்றிச் சொன்னார். "ஆனால் மொறிஸை கடைசியில் சந்திக்க முடியாமற் போய் விட்டது." என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம்.

அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான். மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி எழுதுவா" என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது. மறைந்த கவிஞர்

தீட்சண்யன் பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.
பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் "சாப்பிடுவோம் வாங்கோ"  என அவர் அழைத்த போது

ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..! மனசு புளகாங்கிதமடைந்தது.
சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாகச் சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்ணியத்திலிருந்த அரசியல் வரை அலசினோம்.

பெண்ணியம் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும் செயற்படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை.

அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள் என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.
"சில போராளிகள் ´ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ` என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை" என்று வருந்தினார்.

அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.

பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும், கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தது. அண்ணனிடம் சொன்னேன். "டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு" என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். "சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்" என்றார்.

இப்படியே ஒரு விடயமென்றில்லாமல் குடும்பம், அரசியல், போராட்டம்... என்று பல் வேறுபட்ட கதைகளுடன் சில மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.

விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.

"எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி" என்று அண்ணையிடம் சொன்னேன்.

உடனே அண்ணன் "இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்" என்றார்.

அவரது அந்தப் பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன். அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.

அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார். எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. எனக்கு அந்த டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை.

அண்ணை என்னோடும், என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் வெறுமனே ஒரு இராணுவத் தளபதியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவரோடு கதைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும்  அவர் ஒவ்வொரு போராளிக்கும் எப்படியெப்படி தனது இதயத்துள் இடம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். எல்லோரும் நினைப்பார்கள் ´ஆயுதந் தூக்கிப் போராடுபவர்கள் தானே` என்று. அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பது அவரோடு நேரே பேசும் போதுதான் தெரிந்தது. போராளிகளின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் நெருக்கமும் என்னை வியக்க வைத்தன.

மாவீரர்கள் எல்லோரையும் அவர் மனதில் நிறுத்தி வைத்திருப்பதை, எந்த மாவீரன் பற்றிப் பேசினாலும் அந்த மாவீரனைத் தன் நினைவில் கொண்டு வந்து அந்த மாவீரன் பற்றி  அவன் இப்படி அவன் அப்படி என்று அவர் சொன்ன போது அறிந்து நான் வியந்து போனேன். தலைவர் என்பதன் அர்த்தத்தை அங்குதான் புரிந்து கொண்டேன்.

வன்னியின் நேர்த்தி மட்டுமா..! எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.

எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும் அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும் செயற்பாடும் இருக்கிறது. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்... சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.

அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும் அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.
 

வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவராக தவராசா?

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராசா நியமிக்கப்படலாம் என தெரியவருகிறது. நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்

வட மாகாண சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இவரது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகலாம் என்ற கருதப்படுகிறது.
   
இந்தச் சூழலில் இவருக்கு அடுத்த நிலையில் விருப்பு வாக்குகளைப் பெற்ற தவராசா மாகாணசபை உறுப்பினராகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  அமைப்பின் உறுப்பினரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினருமான சங்கிலி என்று அழைக்கப்படும் 37 வயதுதுடைய இரத்தினசிங்கம் பரமேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விளாவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான இவரது சடலம், விளாவெட்டுவானில் உள்ள சவற்சாலைப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

வவுணதீவுப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார்

புதன், 27 நவம்பர், 2013

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர்களின் நினைவாக மரம் நாட்டிய ஐங்கரநேசன்.


மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்ட வேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டது. இந்தபோதும் அவர் மன்னாரில் நேற்று மரங்களை நாட்டினார். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய அமைச்சருக்குமான கலந்துரையாடல் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் நேற்று நடைபெற்றது. கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் மரங்களை நாட்டுவதை நிறுத்தவேண்டும் என்று தெரிவித்தும் அவ்வாறு நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் அவரது நினைவாகவும் மரங்களை நடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விவசாயிகளுடனான கலந்துரையாடலை நிறைவு செய்து உரையாற்றிய அமைச்சர், 'மரணித்தவர்கள் நினைவாக மரங்களை நடுவது குற்றமாகாது, இங்கு தங்கள் பிள்ளைகளைப் போரில் இழந்த ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்கள் துயரை ஆற்றுவதற்கு இந்த அரசு தடைவிதிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்ட நிலையில் எல்லோரும் வீடுகளில் அவர்களது நினைவாக உயிருள்ள ஜீவ சமாதிகளாக மரங்களை நடுவோம்' என்றும் குறிப்பிட்டார். இதன் பின்னர் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண போக்குவரத்து, மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன், ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர்.






 



சுவிஸில் இடம்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவை கொண்டாட்டங்கள்


 சுவிஸில் இடம்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவை கொண்டாட்டங்கள் 
தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 59வது அகவை தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரின் ஒருங்கிணைப்பில் மாவீரர் நாள் நடைபெறும் பிறிபூர்க் போறூம் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவைநாள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழின உணர்வாளர் ஓவியர் திரு.வீரசந்தானம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்தோடு இன்று ஆரம்பமாகும் தேசிய மாவீரர் நாளில் கலந்து கொண்டு எமது தேசத்தின் வீரப் புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடனும், உரிமையுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

                            





 

திங்கள், 11 நவம்பர், 2013

தமிழ்த் தேசியத்தின் தளத்தை வலுப்படுத்த மொரீஷியசில் மாநாடு:


 
தமிழ்த் தேசியத்தின் தளத்தை உலகளாவிய ரீதியில் வலுப்படுத்த மொரீஷியசில் "புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு" எனும் தலைப்பில் மூன்று நாட்கள் தமிழீழம், தமிழ்நாடு உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து மொரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் அனுசரணையுடன் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்து நடாத்துகிறது. இன்றைய நாளில் மாவீரர்களுக்கான மற்றும் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவு தூபிக்கு மலர்வணக்கம் செலுத்தி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.

தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் பேராசியர் ராமசாமி மற்றும் பல அரசியல்

ஆய்வாளர்கள் ,தமிழ்த் தேசிய ஊடகவியாளர்கள் , தமிழீழ ஆதரவாளர்கள் இம் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள் . அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக கனடாவில் இருந்து மோகன் ராமகிரிஷ்ணன் , பிரான்சில் இருந்து திரு திருட்சோதி , நோர்வேயில் இருந்து ஸ்.டீவன் புஷ்பராஜா ஆகியோர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள்.










வியாழன், 7 நவம்பர், 2013

வெலிஓயா பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை


குடியேற்ற இராணுவம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதனால் வெலிஓயா முற்றுமுழுதாக சிங்கள மயமாகும் பேராபத்தை நோக்கியுள்ளது என பெயர் குறிப்பிடாத அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் விளக்குகையில்,

அனுராதாபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது கிராமங்களையும் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய் , கருணாட்டுக்கேணி, ஆகிய மூன்று தமிழ் கிராமங்களையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டது.

வன்னி யுத்தத்தின் பின் இப்பிரதேசம் முற்று முழுதாக இராணுவ மயமாக்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக 2000 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் தீவிர முயற்சியில் இராணுவம் செயற்பட்டு வருகின்றது. இந்த திட்டத்துக்கு இராணுவ நிதி

பயன்படுத்தப்படுவதுடன் சிங்கள செல்வந்தர்களும் உதவி வருகின்றனர்.
ஏற்கெனவே இச்செயலாளர் பிரிவில் 11,000 மக்கள் குடியிருந்து வருகின்றார்கள் பெரும்பான்மை சமூகத்தை குடியேற்றுவதன் மூலம் இப்பிரதேசத்தில் இன்னும் சில கிராமங்களை இணைத்து சிங்கள பிரதிநிதி ஒருவர் வரக்கூடிய தேர்தல் தொகுதியொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்காலத்திட்டமென்றும், இங்கு

குடியேற்றுவதற்காக,பண்டாரவளை, மொனராகலை, அநுராதபுரம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெரும்பான்மை சமூகத்தினர் வரவழைக்கப்பட்டு குடியேற்றப்படுகிறார்கள்.
இதனால் வெலிஓயா கிராமம் சிங்கள மயமாகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

படப்பிடிப்பு கருவிகள் பறிப்பு; வலி.வடக்கில் இராணுவ..


வலி.வடக்கிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களது படப்பிடிப்புக் கருவிகள் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டதுடன் படங்களும் அழிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு கட்டுவன் பகுதியில் பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக இன்று காலை  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை , நகரசபை உறுப்பினர்களும்

 நேரடியாக சென்றிருந்தனர்.
அங்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த இடத்திற்கு வந்த இராணுவ அதிகாரி உள்ளிட்டவர்கள் இவர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர்.

இதனைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் இராணுவ அதிகாரியினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் அவர்களது படப்படிப்பு கருவிகள் பலவந்தமாக பறிக்கப்பட்டு அதில் இருந்த படங்களும் அழிக்கப்பட்டன.
அத்துடன் 'உங்கள் எல்லோரையும்

 எமக்கு நன்றாகத்தெரியும் நாளைய தினம் பத்திரிகையில் படங்கள்  வெளியிடப்பட்டிருந்தால் பின்னர் என்ன நடக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்' என குறித்த அதிகாரி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமை  குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை கோருகிறது

   இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டன் தமிழர் பேரவைக்கும், பிரிட்டன் தொழிற் கட்சித் தலைவர் எட்மில்லிபாண்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கையை எட் மில்லிபாண்ட் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதுடன், கடந்த காலக் குற்றங்களுக்கு இன்னமும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லையென்பதையும் பிரிட்டன் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

"இலங்கையில் நல்லிணக்கம்' என்ற அறிக்கை ஒன்றையும் எட் மில்லிபாண்டிடம் சமர்பித்துள்ளனர் பிரிட்டன் தமிழர் பேரவையினர். இந்த அறிக்கையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள், காணி சுவீகரிப்பு குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பார்வையிட்ட மில்லிபாண்ட் அதிர்ச்சியடைந்ததாகவும் பிரிட்டன் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

சனி, 2 நவம்பர், 2013

கார்த்திகை 27 தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் -



எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழ தேசியத்துக்காய் தம் உயிர்ஈத்த மாவீரர்களின் மாபெரும் வணக்க நிகழ்வு கனடா ரொறன்ரோவில் இடம்பெறவுள்ளதை அனைத்துலக தமிழ்

 உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்….

வியாழன், 31 அக்டோபர், 2013

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம்.


இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கு இந்திய பிரதமர் வருகை தர வேண்டும என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவுகள்

எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 13வது அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் வடக்கில் தேர்தல் ஒன்றை நடத்த இந்தியா ஆற்றிய சேவைக்காக அந்த கடிதத்தில் விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த திங்கட்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித், இலங்கையின் வடக்கு மக்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு இருக்கும் என்று கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன் பின்னரே விக்னேஸ்வரனின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திங்கள், 28 அக்டோபர், 2013

பிரதமருக்கும் மற்றும் பலருக்கும் நன்றி தெரிவிக்க திரண்ட தமிழர்கள்..



கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள்,

 தமது சக கனடிய உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்க ஒட்டாவா பாராளுமன்றம் முன் தமிழர்கள் ஒன்று திரண்டு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் அணிதிரண்ட கனடியத் தமிழர்களின் படத்தொகுப்பு








 

சனி, 26 அக்டோபர், 2013

பொழிலன் பெரும் தமிழர் கூட்டத்தின் வாழ்த்து முழக்கத்துடன்


 இந்திய அரசு தொடக்கக் காலம் முதலே ஈழத் தமிழர்க்கு இரண்டகம் இழைத்து வருகிறது. இராசிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை என்கிற பெயரிலான கொலைப்படை ஈழத் தமிழர்க்கு இழைத்த கொடுமைகள் எண்ணற்றவை.

இவற்றை நாடே கண்டித்தது. இந்தக் கொலைப்படை தன் 'பணிகள்' முடித்து இந்தியா திரும்பிய போது ஈழத் தமிழர்க்கு எதிரான பொய்யான பரப்புரைகளைக் கண்டித்து 1988இல் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலன் இவ்வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்தார். பத்து ஆண்டுகள் புழல் சிறையில் வாழும்

 தமிழர்களுக்கு தமிழ் தேச சிந்தனையை விதைத்து விட்டு .இந்திய ஆரிய வல்லாதிக்கத்தை தவிடு பொடியாக்கும் உறுதியோடு வெளிவந்தார்...
சாதி மதம் தகர்த்து தமிழ் தேச தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தை சிறைக்கு வெளியே நின்ற மக்கள் திரளில் முழங்கினார்...

பொழிலன் தோழரின் குடும்பத்தினரும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து உரையாடியது நெகிழ்வான தருணம்தமிழ் தேச மக்கள் கட்சி தோழர் தமிழ் நேயன் செவ்வேள் பாவேந்தேன் பார்வேந்தன் தமிழ் மகன் தமிழர் நலம் பேரியக்கம் தோழர் மு.களஞ்சியம் வழக்குறைஞர் அங்கயற்கன்னி தாயார் அற்புதம் அம்மாள் வழக்குறைஞர் வடிவாம்பாள் தோழர் அதியமான்

தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர் அருண்சோரி கலகத் தோழர்கள் அமலன் கீரா தமிழ்பாலன் முச்தாக் தமிழினியன் மற்றும் பல்வேறு கட்சி இயக்கங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டு தோழருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அரசின் அடக்குமுறைக்கு புத்தர் கலைக்குழு மகிழினி மணிமாறன் தலைமையில் பறை அடித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது தோழர்

மகேந்திரவர்மன் காவலர்களின் நெருக்கடிகளை கோப வார்த்தைகளால் தகர்த்து எறிந்தார் பின் அனைத்து தோழர்களும் பெரும் திரளாக அனுமதி மீறி ஊர்வலமாக வந்து புரட்சியாளர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்க மரியாதை செலுத்தினர்.பின் பொழிலன் தோழரை சுமந்து கொண்டு வாகனம் தமிழ்க்களத்தை நோக்கி பயணித்தது

 

சிறுவர் துஸ்பிரயோகத்தை கண்டித்து விழிப்புணர்வு நடவடிக்கை


சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழித்து அனைத்து சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு உறுதிபூணுவோம் என்ற மக்கள் விழிப்புணர்வு போராட்டம் நேற்று மாலை 4 மணியளவில் யாழ்.பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களுக்கு துண்டப்பிரசுரங்களை வழங்கியதுடன் சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுகளையும் மேற்க்கொண்டனர்.

மேலும், சிறுவர்களது ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியினை பாதிக்கும் அல்லது பாதிப்புக்கு இடமளிக்கும் எந்தவொரு நபரின் செயற்பாடுகள், மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தப்படல், என்பன சிறுவர் துஸ்பிரயோகமாகவே கருதப்படும். இத்தகைய சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 5 வருட கால சிறைதண்டனை வழங்கப்படும் என மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

திங்கள், 21 அக்டோபர், 2013

முன்னாள் போராளிகளையும், மக்களையும்


போராளிகள் வருவார்களா? மௌனிக்கிறார். முன்னாள் போராளிகளையும், மக்களையும் காக்க புலம் பெயர் மக்களை அழைக்கும்: செல்வம் பா.உ
எமது போராளிகள் வருவார்களா போராட்டம் வெடிக்குமா மௌனத்துடன் தயகத்தில் முன்னால் போராளிகளையும் மக்களையும்

 காக்க புலம் பெயர் உறவுகள் இணைவது காலத்தின் கட்டாயம் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

லங்காசிறி வானொலியின் வாராந்த அரசியல் களம் வட்ட மேசை நிகழ்வில் தமிழர் தாயகத்தின் சிங்கள அரசின் ஆக்கிரமிப்பினையும் எம் இனத்தின் இன்றைய நிலையையும் வெளிப்படுத்துகிறார்.

ஈழத்தமிழர் வாழ்வின் வலியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் 'ராவண தேசம்'

 
அஜெய் என்பவர் இயக்கி நடிக்கும் படம் ''ராவண தேசம்'' இப் படத்தை நியூ எம்பயர் செல்லுலாயிட்ஸ் சார்பில் லட்சுமிகாந்த் தயாரிக்கிறார்.
இந்த படம் ஈழத்து மக்களது  அகதிப்பயணத்தை மையமாக கொண்ட படமாக தெரிவித்துள்ள இயக்குனர் மேலும் தெரிவிக்கையில்,

போர் காலத்தில் ஈழத்திலிருந்து அப்பாவி மக்கள் படகுகளிலும் சிறு கப்பல்களிலும் வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடினார்கள். அதில் நடுக்கடலில் ஜலசமாதி ஆனவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொடிய பயணத்தை மையமாக கொண்ட படம் இது.
யதார்த்தமாக பதிவு செய்துள்ளோம் இருக்கிறது என்றார் படத்தின் இயக்குனர் தெரிவித்தார்.
 


 

சனி, 19 அக்டோபர், 2013

நிமலராஜன் மறைந்து 13 வருடங்கள் நிறைவு

 
நிமலராஜன் கொலை செய்யப்பட்டு, 13 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர்.

அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார்.

கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்த பின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய தமிழர்கள் பலர் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்பட்டனர். சில வருடங்கள் சென்ற பின்னர் நிமலராஜன் வடபகுதி தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை ஊடகவியலாளர் என்ற வகையில் எடுத்துரைத்தார்.

குறைந்த வசதிகளுடன் கடினமான சூழலில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டார். பி.பி.சி தமிழோசை, வீரகேசரி ஆகிய தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியிலும் பி.பி.சி சந்தேஷய, ஹிரு எவ்.எம் மற்றும் ராவய ஊடகங்களில் சிங்கள மொழியிலும் உயிரிழக்கும் வரை தொடர்ந்தும் தகவல்களை மிகவும் அக்கறையோடு வெளியிட்டு வந்தார்.

இதுதொடர்பாக ஊடக நிறுவனங்களில் அப்போது பணியாற்றிய ஊடகவியலாளர்கள் சாட்சி கூறுவார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் சரியான தகவல்களை வழங்கும் ஊடகவியலாளராக பல கஸ்டங்களுக்கு மத்தியில் பணியாற்றியக் கூடிய இயலுமையின் காரணமாக நிமலராஜன் தென்பகுதி ஊடகவியலாளர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகவியலாளராக இருந்தார். தலைநகரில் இருந்ததால் சிங்கள மொழியின் பரீச்சயமும் தனது தந்தையிடமிருந்து கிடைத்த இடதுசாரி கொள்கைகளும், அவருக்கு உதவியாக அமைந்தன. ஒருமுறை நிமலராஜன் ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பாரதூரமான நெருக்கடியை எதிர்நோக்கினார்.

அப்போது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வன்முறை மற்றும் அடக்குமுறைச் சூழல் காரணமாக ஊடக அடையாள அட்டையை வைத்திருப்பது மிக முக்கியமாக இருந்தது. இதன்மூலம் ஓரளவு தடையின்றி தகவல்களைத் தேடிக்கொள்ள முடியுமென்ற நிலைப்பாட்டில் நிமலராஜன் இருந்தார். அவருக்குப் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். ராவய பத்திரிகை நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். எனினும் அது கிடைக்கவில்லை.

ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், நிமலராஜன் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுவதால் ராவய பத்திரிகையின் மூலம் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். ஏ.பி.சி நிறுவனத்தின் தலைவர்களும் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை. அப்போது பிரதேச ரீதியாக செயல்படும்

ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க ஊடக நிறுவனங்கள் போதிய அக்கறைக் காட்டவில்லை.
இறுதியில் நிமலராஜன் அரைய பத்திரிகையின் ஊடாக ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். எனினும் அவரது செய்தியின் தேவை ஊடகங்களுக்கு இருந்தது. அதற்காக நிமலராஜனை அனைத்து ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன.
வடபகுதி மக்கள் தொடர்பாகவும் அங்கு இடம்பெற்ற, இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான விடயங்களில் நிமலராஜன் முக்கிய இடத்தை வகித்தார். தனக்குத் தெரிந்த சகல தகவல்களையும் மறைக்காது வெளியிடுவது அவரது இயல்பாக இருந்தது. இதற்காக பணம் கிடைத்ததா கிடைக்கவில்லை என அவர் கருத்திற்கொள்ளவில்லை. அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டார். அதை அவர் தனது கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

எப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் செய்தி அளிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் பல உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் அவருக்கு குறைந்தபட்ச கொடுப்பனவுகளையே வழங்கியது. ஒரு செய்திக்காக 50 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது. 24 மணி நேரம் செயல்படும் அந்த நிறுவனத்தின் ஐந்து வானொலிகள் மணிக்கொரு தடவை செய்திச் சுருக்கங்களை ஒலிபரப்பி வருகிறது.

பிரதான செய்திகளுக்கு புறம்பாக இந்தச் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. அனைத்து செய்தி அறிக்கைகளிலும் நிமலராஜனின் செய்திகள் பயன்படுத்தப்பட்டன. தொலைநகல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது குரல் ரீதியாகவும் வழங்கிய அனைத்துச் செய்திகளும் ஒரே அளவிலான ஊதியமே வழங்கப்பட்டது.

இதுசம்பந்தமாக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளிடம் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், நிமலராஜன் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் தமது நிறுவனங்களின் ஊடகவியலாளர் எனக் கூறி புகழைத்தேடும் தேவை அவர்களுக்கு இருந்தது. நிமலராஜனின் இறுதிக் கிரியைகளுக்காக ஏ.பீ.சி நிறுவன அதிகாரிகள் நிதியுதவிகளை வழங்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது. இதன்மூலம் அவர்கள் தமது ஊடக நிறுவனத்திற்குப் புகழை ஈட்டிக்கொள்ள முயற்சித்தனர்.

நிமலராஜன் ஊடகவியலாளர் என்ற வகையில் பி.பி.சி சந்தேஸய மூலமே சிங்கள மக்கள் மத்தியில் பரீட்சையமானார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணாமல் போதல், கொலைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட துன்ப துயரங்கள், அனைத்தையுமே அவரது குரலில் சிங்கள மக்கள் கேட்டனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்திற்கு

கொண்டுசென்றவர் நிமலராஜன்தான். அதில் முக்கியமான நபரும் அவர் தான். செம்மணி படுகொலை தொடர்பான முழுமையான அறிக்கையை நிமலராஜன் ஊடகங்களில் வெளியிட்டார். 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊர்காவல்துறை தீவகப் பகுதிகளில் இடம்பெற்ற வாக்கு மோசடிகள் தொடர்பாக அவர் முழுமையான செய்தியை வழங்கியிருந்தார்.
இந்தச் செய்தி வெளியிடப்பட்டு சில தினங்களுக்குப் பின்னர் அவருக்கு

அடிக்கடி மர்ம அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. அதிலொரு அழைப்பிற்கு நிமலராஜனின் மனைவி பதிலளித்திருந்தார். நீங்கள் வெள்ளை ஆடை உடுத்த தயாராக இருங்கள் என அந்தத் தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நான் அஞ்சப் போவதில்லை. செய்திகளை நான் தொடர்ந்தும் வழங்குவேன் என நிமராஜன் கூறியிருந்தார்.

தனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக நிமராஜன் தனது ஊடக நண்பர்களிடம் கூறியிருந்தார். சில தினங்கள் கடந்தன. நிமலராஜன் அவரது வீட்டுக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். அவரது வீடு யாழ்ப்பாணத்தின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்தது.

நிமலராஜனின் கொலையானது தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் பாரிய அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. இந்தக் கொலை தொடர்பாக நேரடியாக அரசாங்கம் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தின்

பிரதான கூட்டணிக் கட்சியாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி செயல்பட்டது. டக்ளஸ் தேவானந்தா அந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வு தொடர்பான அமைச்சரவை அந்தந்துள்ள அமைச்சராகப் பணியாற்றினார்.
இந்தக் கொலையுடன் ஈ.பி.டி.பி சம்பந்தப்பட்டுள்ளதாக முதலாவது ஊடக அறிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியே வெளியிட்டது. அப்போது அந்தக் கூட்டணியின் தலைவராக ஆனந்தசங்கரி செயல்பட்டுவந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஈ.பி.டி.பியினர் நிமலராஜனை விடுதலைப் புலி உறுப்பினர் எனக் குறிப்பிட்டனர். விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம் என ஈ.பி.டி.பி.யினர் குற்றஞ்சுமத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் நிமலராஜன் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.

மக்களைப் புனர்வாழ்வளிக்க முயற்சிக்கின்றவர்கள் மக்களைக் கொலை செய்துவருவதாகக் கூறி அவர்களும் கொலைக் குற்றத்தை ஈ.பி.டி.பி யினர் மீது சுமத்தினர். சுதந்திர ஊடக அமைப்பும் நிமலராஜனின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. கொலை இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிமலராஜனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிமலராஜனின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான குழு போன்ற பல சர்வதேச அமைப்புகள் இந்தக் கொலை குறித்து கவனம் செலுத்தின.
2000ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் இந்தக் கொலைக்கு காரணமாக இருப்பதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு காரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், நிமலராஜன் கொலை சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்தது. இந்த விசாரணைகள் யாழ்ப்பாணக் காவல்துறை நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ரஞ்சித் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றன.

கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பில் முன்னர் செயல்பட்டவர்களாக இருந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் வழியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்களையும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்யத் தவறினர். புலனாய்வுப் பிரிவனரால் அந்த பிரதான சந்தேக நபரின் சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது போனது.
ஈ.பி.டி.பியின் முக்கிய நபரான நெப்போலியன் என்ற செபஸ்டியன் பிள்ளை ரமேஸ் என்பவர் அரசாங்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பின் கீழ்

நாட்டிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றார். ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதன்பின்னர், ஊடகத்துடன் தொடர்புடைய சில ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் அலுவலகம் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கானமயில்நாதனை பல தடவைகள் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வலம்புரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளரான ராமச்சந்திரன் காணாமல் போனதுடன் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவல்களும் இல்லை. ராமச்சந்திரன் வலம்புரி பத்திரிகையின் சாவகச்சேரி செய்தியாளராக பணியாற்றினர்.யாழ்ப்பாண ஊடங்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டதுடன், அச்சு காதிதங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது உயிரரை துச்சமென மதித்து, யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்தனர்.

பல ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, பலர் தமது ஊடக நடவடிக்கைகளில் அமைதியான போதிலும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட சிலர் தமது கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். இந்த நிலைமையில் நிமலராஜனின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றனர்.

நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திடம் நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தொடர்பில் ராஜபக்ஸ அரசாங்கத்தின் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவைகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகின்றனர். நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தற்போதை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினதும் முக்கிய கூட்டணியாளர்களாக உள்ளனர் என்பதே இதற்கான காரணமாகும்.

நிமலராஜனின் கொலை தாம் செய்யவில்லை என ஈ.பி.டி.பியினர் நிராகரித்த போதிலும், உரிய விசாரணைகளை நடத்த இதுவரை அவர்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது. காரணம் யாழ்ப்பாணத்தில் ஏனைய விடயங்கள் மாத்திரமல்ல ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டளையின் கீழேயே செயற்படுகின்றன.

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு,13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது ஊடக நண்பர்கள் அதனை நினைவுக் கூறுவதும் கஸ்டமான நிலைமையாக மாறியுள்ளது. அவ்வாறு அவர்கள் நிமலராஜனை நினைவு கூர்ந்தாலும் அவரை கொன்றவர்களுடன் இணைந்தே நினைவு கூற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

தலிபான்கள் சதி ஜேர்மன் தூதரகத்தை தாக்க!!


தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் அடிப்படையில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஜேர்மன்
 தூதரகத்தை தாக்கப் போவதாக தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் தூதரகமானது சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர் மார்ட்டின் சாபிர் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை செய்தி வந்துள்ளது.

மேலும் அந்த தகவல்களின் அடிப்படையில் தூதரகமானது சில நாட்களுக்கு மூடப்படும் என்றும், ஜேர்மன் மக்களை காப்பாற்றும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
 

இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற அகதி கைது


மட்டக்களப்பு,கல்லடி ஆராயம்பதியைச் சேர்ந்த சின்னத்துரை சுதாகரன் (வயது33) 2012ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து விசா மூலம் இந்தியாவுக்கு வந்து சென்னையில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு செல்ல விசாக்காலம் 2012 ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்ததால் திரும்பிச் செல்ல முடியாமல் சென்னை காவந்திர அகதி முகாமில் தலைமறைவாக தங்கி இருந்துள்ளார்.
இலங்கைக்கு படகு மூலம் செல்ல வியாழக்கிழமை காலையில்

இராமேஸ்வரம் தனுஷ்கோடி வந்துள்ளார். இவரை அப்பகுதியில் தமிழக கடலோர காவல் படை குழும காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜோதிபாஸ் தலைமையில் பொலிஸார் பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் இலங்கைக்கு படகுமூலம் செல்ல இருந்தது தெரியவந்ததால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 16 அக்டோபர், 2013

தலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம்


 
ஆண்டுகளாகத் தமிழினத்தில் பிறக்கவில்லை! - நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் Top News 
இயக்கத் தலைவர் திரு பழ நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு வைப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். திரு பழ நெடுமாறன் அவர்கள் அரும்

 பாடுபட்டு தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். இந்த நூல் தவைவர் பிரபாகரனின் முழு வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியாது. அவரைப் பற்றிய முழு நூல் வெளிவரவேண்டும். இந்த நூலின் முதல் பதிப்பு 1888 இல் வெளிவந்தது. பின்னர் அதனை விரிவாக எழுதி 2012 மார்ச்சு மாதத்தில் இரண்டாவது பதிப்பாக வெளியிட்டுள்ளார்.
   
மொத்தம் 90 அதிகாரங்களையும் 1,200 பக்கங்களையும் கொண்ட இந்த நூல் உள்ளடகத்தில் மட்டுமல்ல உருவத்திலும் கனதியான நூல். தலைவர் பிரபாகரனை இளமை முதல் நன்கு தெரிந்தவர் என்ற முறையிலும் தமிழீழத்தை மாதக் கணக்காகச் சுற்றிப் பார்த்தவர் என்ற முறையில் இந்த நூலை எழுதுவதற்கு நெடுமாறன் முழுத் தகைமை உடையவர். நான் நூலைப்பற்றிப் பேச விரும்பவில்லை. இந்த நூலை அன்பரசி, ஈழவேந்தன், இரா. குணநாதன் ஆய்வுரை நிகழ்த்த உள்ளனர்.

தலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தமிழினத்தில் பிறக்கவில்லை. முத்தமிழ் அறிஞர் விசுவநாதம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலமாக பிரபாகரன் போல் ஒரு மாவீரன் பிறக்கவில்லை என்கிறார்.

தலைவர் பிரபாகரன் உலக அரங்கில் தமிழர்களுக்கு ஒரு முகவரியைத் தேடித் தந்தவர். ஒரு அடையாளத்தைத் தேடித்தந்தவர். தமிழர்களதைத் தெரியாதவர்களும் பிரபாகரனைத் தெரிந்திருக்கிறார்கள்" என்றார்.

தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண் இரண்டையும் ஒவியா சுந்திரபோஸ் வித்தியா பிரபாகரன் இருவரும் இணைந்து பாடினார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இனிய இளைய உயிர்களை ஈகை செய்த மாவீரர்கள் நினைவாகவும் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நக்கீரன் பேசுகையில்,

சேர, சோழ, பாண்டிய இராச்சியங்கள் 13 ஆவது நூற்றாண்டோடு மறைந்து போயின. அதன் பின்னர் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 700 ஆண்டுகளுக்கு மேலாக துலுக்கர், தெலுங்கர், நாயக்கர்கள், மராத்தியர், ஆங்கிலேயர் ஆகிய இனத்தவரால் ஆளப்பட்டனர். யாழ்ப்பாண இரச்சியம் 1619 இல் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் 329 ஆண்டுகள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆங்கிலேயருக்கு நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றாலும் தமிழர்கள்

 தொடர்ந்து சிங்களவர்களுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.இந்தப் பின்னணியில் தோன்றிய தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடி தமிழீழம் என்ற நிழல் அரசை உருவாக்கினார். இன்று அந்த அரசு இல்லாவிட்டாலும் அதன் கட்டுமானம் அசையாமல் இருக்கிறது.

விடுதலைப் போராட்டம் என்பது ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றது. தந்தை செல்வநாயகம் அந்தத் தேரை மேற்கு வீதி மட்டும் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போய்விட்டார். அதன் பின்னர் தலைவர் பிரபாகரன் தேரை வடக்கு வீதி மட்டும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இப்போது இருக்கும் தலைமுறை தேரை இருப்பிடத்துக்கு இழுத்து வரவேண்டும்.

தமிழினத்தில் வரலாற்றை நாம் ஒழுங்காக, சீராக, ஆண்டு வாரியாக எழுதவில்லை என்ற பெரும் குறை இருக்கிறது. தொல்காபியர், திருவள்ளுவர் போன்றவர்களது வாழ்க்கை வரலாறு தெரியாது இருக்கிறது. இடைக்காலத்தில் வாழ்ந்த கம்பர் பிறந்த ஆண்டு, மாதம், நாள் மட்டுமல்ல அவர் பிறந்த நூற்றாண்டும் சரியாகத் தெரியவில்லை. தமிழ் அரசர்களது வரலாறு முழுமையாகக் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாண அரசர்களது ஆட்சி பற்றிய முழுமையான வரலாறு கிடைக்கவில்லை. எனவே பழ நெடுமாறன் எழுதிய நூல் தலைவர் பிரபாகரனது காலத்திலேயே எழுதப்பட்டது போற்றுதலுக்கு உரியது. இனிவரும் தலைமுறைகள் இந்த நூலைப் படித்தபுப் பயன் பெற வேண்டும். நீங்கள் ஒவ்வொருவதும் இந்த நூலின் இரண்டு படிகளை வாங்க வேண்டும்.

 ஒன்று உங்களுக்கு மற்றது உங்கள் நண்பருக்கு" எனக் கூறினார்.
தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண் இரண்டையும் ஒவியா சந்திரபோஸ் வித்தியா பிரபாகரன் இருவரும் இணைந்து பாடினார்கள்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்தவர்களை தமிழ்ப் படைப்பாளிகள் கழக செயலாளர் முருகேசர் தியாலிங்கம் வரவேற்று உரையாற்றினார்.
நூலாசிரியர் பழ நெடுமாறன் அனுப்பி வைத்த வாழ்துச் செய்தியை ஆசிரியர் சின்னத்துரை துரைராசா படித்தார்.

நூலின் முதல் 30 அதிகாரங்கள் பற்றி ஆய்வுரை நிகழ்த்திய அன்பரசி பேசும் போது " "தொடக்க காலம் முதற்கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அறம் குறித்தும் எழுச்சி குறித்தும் அறிந்தவர் என்ற வகையிலும் வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் பங்குகொண்டவர் என்ற வகையிலும் கெரில்லாப் போராட்டத் தாக்குதல் சம்பவங்களில் தொடங்கி வான்படை அமைத்துப் போராடிய வரையிலான போராட்ட வளர்ச்சியினை நன்கு

அறிந்தவர் என்ற வகையிலும் பழ. நெடுமாறன் அவர்கள் இந்நூலை எழுதுவதற்கு மிகப்பொருத்தமான தெரிவாகிறார் என்பது அய்யத்திற்கிடமற்றது.
வரலாற்றை ஆவணப்படுத்துதல் என்பது காலங்காலமாய் நடைமுறையில் இல்லாமை என்பது எம் இனத்தைப் பீடித்த சாபம் எனலாம். அந்தளவுக்கு எம்மினம், எமது வரலாற்றை, எம்மினச் சான்றோர்களது வரலாற்றை, இலக்கியங்களை, அரசியலை, நாகரீகத்தை, கண்டுபிடிப்புகளை, அறிவியலை, மருத்துவத்தை என்று எதனையும் சரிவர ஆவணப்படுத்தத் தவறிவிட்டது என்பது சோகம்.

அந்த வகையில், அந்தக் குறையை ஓரளவேனும்போக்க, தமிழகத்தில் தான் கூட இருந்து தெரிந்துகொண்டது, செவிவழி அறிந்தது, பிறர் சொல்லக் கேட்டது, படித்தது என்று அத்தனையையும் தன்னாலியன்ற வகையில் தொகுத்து இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார் திரு. நெடுமாறன். பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் வீழ்ந்த எம் தமிழ் இனத்தின் மீள் எழுச்சியின் வடிவம் என்பதனை அரசியல், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் துணைக்கொண்டு மிகச்சிறப்பாக ஆவணப்படுத்தியுமிருக்கிறார். (முழு உரை பின்னர் வரும்)

அடுத்து நூலின் பாடுபொருளாக விளங்கும் தலைவர் பிரபாகரனையும் நூலாசிரியர் நெடுமாறனையும் நன்கு தெரிந்த திரு மா.க. ஈழவேந்தன் உரையாற்றினார்.

"1987 யூலை 29 ஆம் நாள் இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்திட்ட போது நான் தமிழ்நாட்டில் இருந்தேன். அந்த உடன்படிக்கையைப் படித்துவிட்டு அதனைக் கண்டித்து இது தமிழ்மக்களை ஒழிக்க இந்தியா - இலங்கை இரண்டு நாடுகளின் கூட்டுச் சதி என அறிக்கை விட்டேன். உடனே இந்திய உளவுத்துறையினர் என் வீட்டுக்கு வந்து எப்படி ஒரு அகதியாக

இருக்கும் நான் இந்தியப் பிரதமர் செய்து கொண்ட உடன்படிக்கையை கண்டித்து அறிக்கைவிடலாம் எனக் கேட்டார்கள். அதற்கு நான் இந்த உடன்படிக்கை வட - கிழக்கு தமிழ்மக்களது தாயகம் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. அது எமக்குத் தெம்பு தருகிறது. ஆனால் இந்தியா வட கிழக்கில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டோம். என்னிடம் இருந்து ஒரு நீண்ட வாக்கு மூலத்தை வாங்கிக்கொண்டு போனார்கள். போனவர்கள் போனவர்கள்தான். சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பது பற்றி ஒன்றுமே நடக்கவில்லை.

அடுத்துப் பேசிய இரா குணநாதன் தான் சமாதான காலத்தில் வன்னி சென்றிருந்த போது பல படைத்தளபதிகளைச் சந்தித்து அளாவியதை நினைவு கூர்ந்தார். முக்கியமாக இராணுவத்தின் கோட்டையாக இருந்த ஆனையிறவைப் பிடித்த தளபதி பால்ராஜ் அவர்களை தானும் தனது நண்பர்

ஒருவரும் சந்தித்துப் பேசியதை நினைவு கூர்ந்தார். தாங்கள் தளபதி பால்ராஜை சந்தித்த போது அவர் ஒரு பாயில் உட்கார்ந்திருந்தார். ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அவரோடு பேசினோம். ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப்புலிகள் கைபற்றும் திட்டத்தை தலைவர் பிரபாகரன் மிகவும் மதி நுட்பத்தோடு வரைந்திருந்தார்.

அதனை தான் உட்பட தளபதி தீபன், தளபதி பானு அவர்கள் மற்றும் படைத்தளபதிகளுக்கு விளக்கினார். "நீங்கள் குடாரப்பில் தரையிறக்கப்படுவீர்கள். குடாரப்பை ஊடறுத்து புலாப்பளையைத் தாண்டி

எழுதுமட்டுவாளை நோக்கி ஊடறுத்து தாக்குதல் நடைபெற வேண்டும்" என்றார். அப்போது நான் இராணுவத்தில் 20,000 இராணுவத்தினரைக் கொண்ட இரண்டு படை அணிகள் இருப்பதைக் குறிப்பிட்டேன். அதற்குத் தலைவர் "20,000 ஆயிரம் என்ன 40,000 இராணுவத்தினர் இருந்தால் என்ன இங்கேதான் போர் நடக்கும். அதன் பின் நீங்கள் வருவதாயிருந்தால் ஏ9 பாதை ஊடாகத்தான் வரவேண்டும்" என்றார்.

தளபதி பால்ராஜ் தலைமையில் புலிகளது படையணிகள் குடாரப்பில் தரையிறக்கம் செய்யப்பட்டன. இதுவே விடுதலை புலிகளின் கடல் வழியான தரை இறக்க தாக்குதலில் மிகப் பெரியது. இதில் ஆயிரத்து ஐந்நூறு போராளிகள் கலந்து கொண்டனர். தளபதி பால்ராஜ் தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி வரலாற்றுப் புகழ் பெற்ற வெற்றியை ஈட்டித் தலைவர் சொன்னது போல ஏ9 பாதை வழியே அவரும் எஞ்சிய அவரது போராளிகளும் திரும்பினார்கள்.

போரின் இறுதி நாட்களில் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் வன்னியில் மேற்கொண்ட நிவாரணப் பணியை விளக்கியபோது போர்க்களத்தில் சிக்குண்ட 300,000 மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்ற முழங்காவில் வீடுகட்டும் திட்டத்திற்கு தம்பி செந்தில் மூலம் சேகரித்து வைத்திருந்த 5 இலட்சம் டொலர்களைத் வேறு வழியின்றி அந்த மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கொழும்பில் வாங்கி லொறிகளில் கொண்டு சென்று கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.

பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை திரு கந்தையா இராஜகுலசிங்கம் வெளியிட்டு வைக்க அதன் முதற் படிகளை நிமால் வினாயகமூர்த்தியும் திரு கார்த்திகேசு சிவசேகரனும் பெற்றுக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் வரிசையில் வந்து நூலை வாங்கினார்கள்.
 

வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அரசு நிறைவேற்றியேயாக வேண்டும் -


கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. இணைந்து செயற்படப் போவதுமில்லை. நாம் சட்டத்தின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதில் யாருடைய தலையீடும் அல்லது அடக்குமுறையும்

இருக்கக்கூடாதென்பதே எமது பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான விசேட பூஜை வழிபாடொன்று நேற்று கொழும்பு கொச்சிக்கடை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.
   
இதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பூஜையின் பின்னர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த விசேட செவ்வியில் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ்க் கட்சிகள் பலவற்றை உள்ளடக்கிய மக்கள் கூட்டமைப்பாகும். இதில் தமிழரசுக் கட்சியும் ஒரு கூட்டுக்கட்சியாகவே நாம் கருதுகின்றோம். தமிழரசுக்கட்சி தனித்து

செயற்படுகின்றது என்ற கூற்றினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வட மாகாண சபையினை பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்சியிலுமுள்ள அங்கத்தவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து ஆட்சி நடத்துவது கடினமானது. நாம் எமக்கு கிடைத்துள்ள பதவிகளை கட்சி அடிப்படையில் பார்க்காது தகுதியடிப்படையிலேயே பார்க்கின்றோம்.

இதன் காரணத்தினாலேயே அண்மைக்காலங்களில் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகளும், மனஸ்தாபங்களும் ஏற்பட்டன. எனினும் இன்று எமது கூட்டமைப்பு ஒற்றுமையாகவே செயற்பட ஆரம்பித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு எம்மை அரசாங்கம் அழைத்திருப்பதற்கான தாற்பரியம் என்ன என்பது எம்மால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாம் கலந்துகொள்வது தொடர்பில் எமது கட்சியில் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பிலான முடிவுகளை எடுக்க முடியும்.

வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை. அதனால் நாம் அரசாங்கத்தை எதிர்க்கப் போவதுமில்லை. ஆகவே, முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வடமாகாணத்தில் எம்மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

கடந்த காலத்தில் முஸ்லிம் தலைமைகள் அம்மக்களுக்கு பாதுகாப்பையும் அவர்களுக்கான உரிமைகளையும் பெற்றுக் கொடுக்காத காரணத்தால் முஸ்லிம் மக்கள் பெரும் துன்பத்திலிருந்தனர். அச்சந்தர்ப்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களின் பிரச்சினைகளையும் சர்வதேசம் வரை எடுத்துச் சென்றுள்ளார்.

இதன் காரணத்தினால் முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, தமிழ் முஸ்லிம் மக்களை இணைத்து அனைவருக்குமான நல்லதொரு ஆட்சியினை வடக்கு மற்றும் கிழக்கில் அமைத்து அவர்களை பாதுகாப்போம் என அவர் குறிப்பிட்டார்.
 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

இறுதிக் போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ஒத்துழைப்பு

 
இறுதிக் கட்ட போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இலங்கை அரச இராணுவத்திற்கு உதவியுள்ளனர்.
பிரிட்டனின் PSNI என்னும் வடஅயர்லாந்து பொலிஸ் பிரிவினர் இவ்வாறு உதவியுள்ளனர்.

இறுதிக் கட்ட போரின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவி வழங்கியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரித்தானிய இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2007ம் ஆண்டு முதல் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் 3500 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்திலும் இவ்வாறு இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

 
தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: வைகோ வேண்டுகோள்-
இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் தியாகு, போராட்டத்தை கைவிட வேண்டுமென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு 14வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரது உடல்நிலை மோசமானதையடுத்து சென்னை அரசு

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்று பேசிய வைகோ, தியாகுவின் உயிர் இந்த நாட்டுக்கு அவசியம் என்றும், அவர் போராட்டத்தை வேறு வகையில் கையில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் தியாகு
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

14 நாட்களாக இந்த உண்ணா விரதப் போராட்டத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். உடல் நலிந்த நிலையில் அவர் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் உட்பட பலர் அவரை சந்தித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர்
மு கருணாநிதிக்கு.


 கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள, தியாகுவும் மாலையில் பழ இரசம் அருந்தி தனது உண்ணாநிலை போராட்டத்தினை முடித்துக் கொண்டார்.
இந்தியா முற்றிலும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் வரை வேறுவகையில் போராட்டம் தொடரும் என்று கூறினார் தோழர் தியாகு. தமிழக மக்கள் இனி வெவ்வேறு வகையில் போராட்டத்தை முன்னெடுக்க தயாராக வேண்டும் என அவர்  பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்.

சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார்.

இனியும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இனியும் பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

எந்த நேரமும் தோழர் தியாகு கைது செய்யப்படும் நிலை
கொமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி 14 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தில்

ஈடுபட்டு வரும் தோழர் தியாகுவின் உண்ணா விரத போராட்ட பந்தலை காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். எந்த நேரமும் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் தோழர் கைது செய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் தோழரின் ஆதரவாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

தோழருக்கு ஆதரவு வழங்கி வருகின்றது மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு.இவர்கள் தோழர் தியாகுவி}ன் தியாகத்தை மதித்து கடிதம் மூலம் தொடர்பும் கொண்டுள்ளனர்.{ காணொளி




 




 
 

திங்கள், 14 அக்டோபர், 2013

முதலமைச்சருக்கு அரசாங்கம் அழைப்பு


மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளது.

வடமாகாண சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­  தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழமை.

இதில் மாத இறுதி அமர்வில் மாத்திரமே மாகாண முதல்வர்கள் கலந்துகொள்வார்கள்.
மாகாண அபிவிருத்தித் திட்டப் பொறிமுறைகள், மாகாண விடயதானங்கள் குறித்தான சட்டமூலங்கள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்பதுடன் முதல்வர்களின் ஆலோசனைகளும் பெறப்படும்.

குறிப்பாக இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் எட்டு மாகாண சபைகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே, அரசின் திட்டங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே முதலமைச்சர்கள் எடுப்பார்கள்.
எனினும், ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியின் கீழ் இம்முறையே

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சரொருவர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உதயமாகியுள்ளது.
மாகாண சபை சம்பந்தமான பிரேரணைகள் அமைச்சரவையின் அனுமதிக்காக வரும்போது, அது மாகாண நிர்வாகத்துக்கு பாதகமாக இருந்தால் அதற்கு எதிராக முதல்வரால் கருத்து வெளியிடமுடியும்.

அத்துடன், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளு மாறும் அவரால் கோரிக்கை விடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பீங்கான் கோப்பை: ரூ.110 கோடிக்கு விற்பனை


சீன பீங்கான் கிண்ணம், ஹாங்காங்கில் உள்ள ஒரு ஏல விற்பனை நிலையத்தில், 110 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.
பதினைந்தாம் நூற்றாண்டின், சாங்க்வா காலத்தில், சீனாவில், கலை மற்றும் கைத்தொழில் புகழ் பெற்று இருந்தன. பீங்கானால் செய்யப்பட்ட, சிறிய, அழகான, இந்த 'மிங்' கிண்ணத்தை, அப்போதைய பேரரசர் குவாங் பயன்படுத்தினார். ஆசிய கலைப் பொருட்களின் விற்பனைக்குப் பெயர் பெற்ற, ஹாங்காங்கின், சூதேபி ஏல நிறுவனத்தில், நடந்த விற்பனையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த கலை ஆர்வலர்கள்
வந்திருந்தனர். இந்த 'மிங்' கிண்ணத்தை, ஹாங்காங்கைச் சேர்ந்த, சீன மண்பாண்ட டீலரான வில்லியம் செக் என்பவர் வாங்கியுள்ளதாக, இதன் நிறுவனர் நிகோலஸ் சாவூ கூறியுள்ளார்.

www.nilavarai.com