siruppiddy

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஐ.நா முன்றிலில் அலையெனத் திரள்வோம் :

நாடுகடநத தமிழீழ தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் அனைத்துலக விசாரணையினை வென்றெடுக்க ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. சிறிலங்கா விவகாரத்தில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர், அனைவரது கவனத்தினையும் பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய தமிழர்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஜெனீவாவில் வரும் திங்கட்கிழமை (10-03-2014) இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேசத் தீர்மானம் அங்கத்துவக நாடுகளது கருத்துப்பிரமாற்றச் சுழற்சிக்குள் இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையினை மையமாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு தமிழர் அமைப்புக்கள் பலவும் கூட்டாகவும், தனித்தும் அனைத்துலக விசாரணையினை நோக்கிய களச்செயற்பாட்டினை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவ்வகையான களச்செயற்பாட்டுக்கு மக்கள் தளத்தில் இருந்து வலுவூட்டவும், மக்களின் நிலைப்பாட்டினை அனைத்துலகிற்கு பறைசாற்றவும், ஐ.நா முன்றலில்

மக்கள் வெள்ளமாக அணிதிரள்வது காலத்தின் கடமையென நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது சிங்கள அரசினால் நடத்தப்பட்ட

போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில்; ஒளிப்படக் கண்காட்சியினை ஜெ னீவாவில் தொடர்சியாக மேற்கொண்டு தமிழ்உணர்வாளர் திரு.கஜன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தங்களது தோழமையினை அவருக்கு தெரிவித்து உற்சாகப்படுத்தியிருந்தனர்.!



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com