ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப திட்டமிட்டு வருகின்றது எனவும் கட்சியின் முக்கியஸ்தர்கள் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தனர்.
யாழில் கடந்த வியாழக்கிழமை (27) நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாண சபை அங்கத்தவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசேஷ் பிரேமசந்திரன் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
‘இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. இதற்கு தீர்வு காண வேண்டும். அரசியல் தீர்வுக்கான எமது கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால் நாம் சர்வதேச இணக்க செயற்பாட்டையே விரும்புகின்றோம்’ எனவும் அவர் இதன்போது கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக