siruppiddy

திங்கள், 3 மார்ச், 2014

இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு தென்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு தென் ஆபிரிக்காவிடம், புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் தென் ஆபிரிக்க அமைப்பு கோரியுள்ளது.
தென் ஆபிரிக்க தமிழர் பேரவை, தமிழர் இணைப்புக் கமிட்டி, உலக சைவப் பேரவை உள்ளிட்ட சில அமைப்புக்கள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரியுள்ளன.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் தென் ஆபிரிக்க தேசிய காங்கிரஸிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தமிழ் அமைப்புக்கள், உலகத் தமிழர் பேரவையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com