siruppiddy

செவ்வாய், 11 மார்ச், 2014

ஐ.நா சனல்-4 வின் புதிய காணொளி! எதுவும் தெரியாதென்கிறது

 இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றிருந்த போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்ததை சித்தரித்துக் காட்டும் சனல் 4 தொலைக்காட்சி சர்ச்சைக்குரிய புதிய காணொளி குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் காணொளி குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் புதிய பேச்சாளரான ஸ்ரிபன் துஜாரிக் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை குறித்து கடந்த ஒரு சில தினங்களாக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களில் மாற்றமேதும் காணப்படவேயில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான குறித்த காணொளியை நான் இதுவரை பார்க்கவேயில்லை. முன்னாள் ஐ.நா. வின் பேச்சாளரான மார்ட்டின் இலங்கை விவகாரம் பற்றியும் அது குறித்து செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடு குறித்தும் விரிவான முறையில் பேசியுள்ளதாகவே நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com