siruppiddy

வியாழன், 20 மார்ச், 2014

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது..

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையமாக கொண்டு சிறிலங்கா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரென்சு மொழிபேசும் நாடுகளை மையமாக கொண்டு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயல்முனைப்பினைத் தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு ஆபிரிக்க நாட்டுத் தலைநகரங்களில் நேரயாகவும் களப்பணியாற்றப்பட்டு வரும் நிலையில், ஜெனீவாவிலும் இதனை தீவிரப்படுத்தும் பொருட்டு, பிரென்சு மொழி பேசுகின்ற வள அறிஞர்களையும் ஐ.நாவுக்கான தனது வள அறிஞர் குழுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் களமிறக்கியுள்ளது.

ஏலவே நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் ஆபிரிக்காவுக்கான தனது பயணத்தினை முடித்துக் கொண்டு, ஜெனீவாவில் உள்ளவாறு பிரென்சு வள அறிஞரான Frédéric Parpani அவர்களையும் கூட்டிணைத்து சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகளின் மூலம், ஆபிரிக்காவிலுள்ள சிறிய நாடுகளை அமெரிக்காவும், மேற்கு நாடுகளும், தமது செயற்கைக்கோள் மாநிலங்கள் போல வைத்திருக்கின்ற நிலையில், பல்வேறு அழுத்தங்கள் காரணமாக ஆபிரிக்க நாடுகள் சிறிலங்காவைக் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பில் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com