திர்வரும் 9ம் திகதியன்று தென்னாபிரிக்காவுக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு அங்கு 10ம் திகதி முதல் 13ம் திகதி வரை நான்கு நாட்கள் தென்னாபிரிக்க அரசுத் தலைவர்களுடனும் ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுக்களில் ஈடுபடும்.
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில் செல்லும் இக்குழுவில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் செயலாளர் நாயகமான மாவை. சேனாதிராஜா எம்.பி. தற்போது நாட்டுக்கு வெளியே உள்ளார். அவர் சில சமயங்களில் இலங்கைக்கு வராமல் நேரடியாகத் தென்னாபிரிக்காவுக்குச் சென்று கூட்டமைப்புக் குழுவுடன் இணைந்துகொள்வார் என்று கூறப்பட்டாலும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தக் குழுவில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜாவும் இடம்பெறுவார் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டமைப்புக் குழுவினர் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களிலும் ஜொகன்னர்ஸ் பேர்க், பிரிட்டோரியா ஆகிய இடங்களில் பேச்சு நடத்துவர்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை டேர்பனுக்குச் செல்லும் குழுவினர் அங்கு தென்னாபிரிக்கத் தமிழர்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசிவிட்டு அங்கிருந்து நேரடியாக இலங்கைக்குப் புறப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இக்குழுவினர் தென்னாபிரிக்காவில் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் மெயிட்டி நெக்கோனா அம்மையார், பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம், முன்னாள் அரசமைப்பு நீதிமன்ற நீதியரசர் அல்பி சக்ஸ், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்க ஜனாதிபதி சுமாவினால் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமபோசா ஆகியோரை சந்தித்துப் பேசுவர்.
தென்னாபிரிக்காவின் இந்திய பூர்வீகக் குடியைச் சேர்ந்தவரும் தென்னாபிரிக்காவில் சிவில் யுத்தத்தின் பின்னர் இணக்கத்தீர்வு ஏற்படுத்தப்பட்ட சமயத்தில் அரசியல் சாசன பிரதி அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்த மொகமட் வலி மூசாவையும் அவர்கள் சந்தித்துப் பேசுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டமைப்புக் குழுவினரின் தென்னாபிரிக்க நிகழ்ச்சி நிரலில் தென்னாபிரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி சுமாவை அவர்கள் சந்திப்பது பற்றிய குறிப்பு ஏதும் இல்லை.
எனினும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் இறுதி நேரத்தில் நிகழ்ச்சி நிரலில் அந்தச் சந்திப்பும் சேர்த்துக் கொள்ளப்படலாம் என ஒரு தகவல் தெரிவித்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக