siruppiddy

திங்கள், 17 பிப்ரவரி, 2014

இலங்கை மீது தன்அறிக்கையில் கோருவார் நவிபிள்ளை;

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்றுக்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை (நவி பிள்ளை) பரிந்துரை செய்ய உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அத்தகைய ஒரு விசாரணைக்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்திய விதம் குறித்தும் தனது இலங்கைப் பயணம் குறித்தும் எதிர்வரும் மார்ச் மாதம் நவிபிள்ளை முழுமையான அறிக்கை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தாக்கல் செய்வார். அந்த அறிக்கையில் அவர் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குப் பரிந்துரை செய்துள்ளார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, இலங்கை அரசின் பார்வைக்காக, ஜெனி வாவில் உள்ள  இலங்கை

தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க ஊடாக கடந்த வாரம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை அரசை கடுமையாகக் குற்றம்சாட்டும் வகையில் அமைந்துள்ள இந்த அறிக்கை, 20 பக்கங்களைக் கொண்டதாகவும், 74 குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் அமைந்திருந்தது என்று அந்தச் செய்திகள் கூறுகின்றன.

தீவிர ஆலோசனைகளுக்குப் பின்னர், இலங்கை வெளி விவகார அமைச்சு ஒவ்வொரு குறிப்புக்கும் பதிலளித்து, தயாரித்த அறிக்கை, ரவிநாத் ஆரியசிங்க மூலம் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளரின் பணியகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஐ.நா. மனிதஉரிமைகள் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி ஆரம்பிக்க சில நாள்கள் முன்னதாக, நவநீதம்பிள்ளையின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட வுள்ளது. எனினும்,  இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் முக் கிய அம்சங்களை கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் இடம் பெற்ற அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், எந்த வொரு உள்நாட்டு செயன் முறைகளைக் கண்காணிப்பதற்கும், அனைத்துலக விசா ரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது.

1. வெறுப்பைத் தூண்டுதல், சாட்சிகளைப் பாதுகாத்தல், தகவல் உரிமை, பலவந்த மாக காணாமற்போதல் குற்றங்கள் போன்றன பற்றி தற்போதுள்ள சட்டங்களை மீளாய்வு செய்து, அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தின் தரத்துக்கு கொண்டு வர வேண்டும்.

2. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கான விதி முறைகளை அகற்ற வேண்டும்.

3. சிறுபான்மை சமூகத்தினர், ஊடகங்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், சாட்சிகள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.

4. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் உள்ளிட்ட, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அனைத்துலக உதவியுடன், சுதந்திர மான, நம்பகமான குற்றவியல் மற்றும் தடயவியல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

5. அனைத்துலக தரத்துக் கேற்ப விரிவான, அணுகு முறையின் ஒரு பகுதியாக, இடைக்கால நீதியை வழங்கும் விதத்தில், தேசிய இழப்பீட்டுக் கொள்கையை உரு வாக்குவதற்கு உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்.

6. காணாமற் போனவர்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, தீவின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமற்போனவர்கள் குறித்தும், காணாமற்போதல்கள் நிகழ்ந்த எல்லாக் காலங்களிலும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் விசாரிக்கும் வகை யில், அதன் விசாரணை இலக்கை விரிவுபடுத்த வேண்டும். காத்திரமான பரப்புரைக ளின் மூலம், பொதுமக்களுக்கு இதுபற்றித் தெரியப்படுத்தி, எல்லா முறைப்பாட்டா ளர்களினதும், முறைப்பாடுகளை சமர்ப்பிக்க போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும்.

7. இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் இறுதி அறிக்கை, 2006ஆம் ஆண்டு  இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்பனவற்றை பகிரங்கப்படுத்தி, அண்மையில் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்கள் அந்த சான்றுகளை மதிப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.

8. படைக் குறைப்புக்கு மேல திக நடவடிக்கைகளை எடுத்து, அமைதிக்கால மட்டத்திற்கு படைத் தலையீட்டைக் குறைப்பதற்கு அர்த்தமுள்ள, வெளிப்படையான நடவடிக்கை களை ஆரம்பிக்க வேண்டும், படைக்கலைப்பு, ஆயுதக் களைவு, பொதுமக்களின் செயற் பாடுகளில் இருந்து இராணுவம் விலகுவதற்கு தெளிவான காலஎல்லையை வகுக்க வேண்டும்.

9. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை, இன்னும் முழுமையாக, செயற்படுத்துவது குறித்து சிவில், சமூக மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகளுடன், கலந்தாலோசிக்க வேண்டும்.

 10. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் ஒரு தேசிய நினைவு நாளை கடைப்பிடிப்பதுடன், எல்லா பொதுமக்களும், தனியாகவோ குழுவா கவோ, நினைவுகூரும் உரிமையை வழங்க வேண்டும், போரில் கொல்லப்பட்டவர் களுக்கு பொருத்தமான நினைவுச் சின்னங்களை அமைப்பது குறித்து தேசிய அளவில் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.

11. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் தொழில் நுட்ப உதவியை ஏற்பது குறித்து சாதகமான கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

 12. பலவந்தமாக காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் குறித்த பணிக்குழு மற்றும் சிறு பான்மையினர் விவகாரங்களுக்கான சுதந்திர நிபுணர் உள்ளிட்ட, சிறப்பு ஆணை யாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டில் அழைப்பு விடுக்க வேண்டும்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com