siruppiddy

வியாழன், 13 பிப்ரவரி, 2014

தென்மராட்சி வறணி மத்திய மகாவித்தியாலய உரையினை தேடி!!

  வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனினது தென்மராட்சி வறணி மத்திய மகாவித்தியாலய உரையின் ஒலிப்பதிவு நாடாவை தேடும் நடவடிக்கையில் இராணுவப்புலனாய்வினர் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வகையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களிடம் குறித்த ஒளி அல்லது ஒலிப்பதிவுகளை வழங்குமாறு நிர்ப்பந்தித்து வருவதாக தெரியவருகின்றது.
இதனிடையே குறித்த நிகழ்வில் அழையா விருந்தாளியாக நுழைந்த மஹிந்த ராஜபக்ஸ சகோதரர்களுக்கு நெருக்கமான  ஒருவரே முதலமைச்சரினது உரையினை திரிவுபடுத்தி மஹிந்த ராஜபக்ஸவிடம் போட்டுக்கொடுத்ததாக அரசாங்க தரப்பிற்கு நெருக்கமான தகவல்  ஒன்று கூறுகிறது.

யாழ்ப்பாணத்தில் அமைப்பொன்றை  நடத்திவரும் இவர் தானே வடக்கு மாகாணசபையின் அடுத்த ஆளுநரெனவும் கூறிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள இவர் இந்தப் பாடசாலையின் பழைய மாணவர் எனவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த பாடசர்லைக்கு நேரில் சென்றுள்ள அவர் தம்மையும் கௌரவ விருந்தினராக அழைக்க நிர்ப்பந்தித்துள்ளார். எனினும் முன்கூட்டியே வடக்கு முதல்வரை பிரதம விருந்தினராக அழைத்துள்ள நிலையில் பாடசாலை நிர்வாகம் சிக்கல் நிலை தொடர்பாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எடுத்து கூறியுள்ளது.

அவ்வேளையில் குறித்த நபரினையும் விருந்தினராக அழைப்பது தொடர்பில்  தமக்கு ஆட்சேபனை இல்லையென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் இவரும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.அங்கு மாணவாகளிற்கு நல்வழிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் ஆற்றிய உரையே தற்போது திரிபு படுத்தப்பட்டு மஹிந்த குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல் ஒன்று கூறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com