siruppiddy

வியாழன், 6 பிப்ரவரி, 2014

நீதிக்கான நடை பயணம்:8ம் நாளாக உலகத் தமிழ் மக்கள் அலையென!!

ஐநா நோக்கிய நீதிக்கான நடை ப்பயணம் வெற்றிகரமாக நேற்று Pijpelheide நகரத்தை வந்தடைந்தது. காலநிலை மழையும் குளிருமாக இருந்தபொழுதிலும் உறுதி தளராமல் தாய் மண்ணை மனதில் நிறுத்தி மனித நேயப்பணியாளர்கள் நடை பயணத்தை தொடர்ந்தனர். நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. நடை யணம் செல்லும் பாதையில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உரிமையுடனும் மனிதநேய பணியாளர்களை ஆதரித்து பங்களித்தனர். நகர இளையோர்கள் நடை பயணத்தில் இணைந்தும் கொண்டனர். இதேவேளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரை வேல்முருகன் உலகத் தமிழ் மக்களை ஐநா முன்றலில் அலையெனத் திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மார்ச் திங்களில் ஐ.நா கூடவுள்ளது. இந்த நிகழ்வில் உலகமெல்லாம் வாழுகின்ற ஈழ உறவுகளும், ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற ஈழ உறவுகளும் இளைய தலைமுறையினரும் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, ஐநாவிற்கு முன்பாக கூடுவோம். 60ஆண்டு கால தமிழீழ சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு வெற்றியைக் காணுகிற தூரத்திற்கு வந்துள்ளோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரைத் துறந்த மாவீரர்களுடைய தியாகமும் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்களன் தியாகமும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எம்மினம் முற்றுமுழுதாக அழிப்பதற்கு சிங்களப் பேரினவாத அரசு யெ்த கொடுமைகளும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் செத்து மடிந்ததிற்கு நாம் நீதி கேட்டு, நியாயம் கேட்டு நமக்கான உரிமை கேட்டு, இந்த மாபெரும் பேரணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com