siruppiddy

வியாழன், 27 பிப்ரவரி, 2014

தனிஈழ சர்வஜென வாக்கெடுப்புக்கு த.தே.கூட்­ட­மைப்பு வர­வேற்பு

இலங்கைத் தமிழ் மக்­களின் பி­ரச்­சி­னைக்கு இலங்கைத் தமி­ழர்கள் மத்­தியில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பினை நடத்­த­வேண்டும் என தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்­துள்­ள­மைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது வர­வேற்­பினைத் தெரி­வித்துள்ளது.

கட்­சியின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இதனைத் தெரி­வித்தார். இலங்கை ஜனா­தி­ப­தி­யி­னு­டை­யதும் அர­சாங்­கத்­தி­னதும் தோல்­வியும் பிழை­க­ளுமே ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­ற­மைக்­கான கார­ணங்­க­ளாக அமை­கின்­றன எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது.

தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரிவித்த கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் வர­வேற்­கின்­றது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் நில­வு­கின்­றன. ஆனால் இவ்­வி­ட­யத்தில் முக்­கி­ய­மாக இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்­களின் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பதில் தோல்வி கண்­டுள்­ளது. இதனால் ஏனைய பல்­வேறு தீர்­மா­னங்­களும் கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன எனவும் தெரவித்தார்.

இலங்கை அர­சாங்­கத்­தினைப் பொறுத்­த­வ­ரையில் யுத்­தத்­திற்குப் பின்னர் தமிழ் மக்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்குப் பதி­லாக அவர்கள் மேலும் மேலும் தமிழ்இ சிங்­கள உறவில் விரி­சல்­களை ஏற்­ப­டுத்­து­கின்ற செயற்­பா­டு­க­ளையே செய்­துள்­ளனர்.

இன்றும் இரா­ணுவ மயப்­ப­டுத்­து­கின்ற செயற்­பா­டுகள்இ சிங்­களக் குடி­யேற்­றங்கள்இ தமிழர் பிர­தே­சங்­களில் பௌத்­த­வி­கா­ரைகள் போன்­றன மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் தோல்­வி­களில் முடி­வ­டைந்­துள்­ளன எனவும் குறிப்பிட்டார்.
வட மாகாண சபை­யினைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்­கு­ரிய குறைந்­த­பட்ச அதி­கா­ரங்­களைக் கூட வழங்­காது சபையின் செயற்­பா­டு­களை முடக்­கி­வி­டப்­ப­டு­கின்­றனர். இதனால் முத­ல­மைச்­ச­ரினால் மாகாண சபையின் நிர்­வா­கத்தை பூர­ண­மாக நடத்த முடி­ய­வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஒட்­டு­மொத்த இலங்கை அர­சாங்­கமும் தமிழ் விரோதப் போக்­கையே கடைப்­பி­டிக்­கின்­றது. இததான் யதார்த்­த­மான உண்­மை­யாகும். இலங்கை அர­சாங்­கத்தின் இவ்­வா­றான தோல்­வி­களே ஏனைய நாடு­களில் எமது இனப்­பி­ரச்­சினை தொடர்பில் தீர்வு காண்­ப­தற்­கான பல்­வேறு முரண்­பா­டான கருத்­துக்கள் உரு­வா­வ­தற்கு அடித்­த­ள­மாக அமை­கின்­றன எனவும் சுட்டிக்காட்டினார்.

அது மட்­டு­மன்றி இத்­த­கைய செயற்­பா­டுகள் எதிர்­வரும் ஜெனிவா மனித உரிமை சபையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஒரு தீர்­மா­னத்­தையும் கொண்­டு­வ­ரு­வ­தற்கு வழி­கோ­லி­யுள்­ளது என்றார்.
இதனைக் கூட இலங்கை அர­சாங்­கமே உரு­வாக்­கி­யுள்­ளது. அர­சாங்கம் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தாமல் அதனை இழுத்­த­டிப்புச் செய்­துள்­ளமை மற்றும் அதில் தோல்வி கண்­டுள்­ளமை போன்ற கார­ணங்­களால் ஒரு சர்­வ­தேச விசா­ர­ணையை எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதற்­காக ஒரு பிரே­ர­ணையும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது எனக் குறிப்பிட்டார்.

ஆகவே இதற்­கான பொறுப்­புக்­களை இலங்கை அர­சாங்­கமே ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.இலங்கை அர­சாங்கம் தமிழ்த்­தே­சிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­பதில் தொடர்ச்­சி­யாக தோல்வி அடைந்திருக்கின்றமையும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தமக்கு எந்தவித தகுதியும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாலுமே இவ்வாறான தீர்மானங்கள் சர்வதேச அளவில் நிறைவேற்றப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இதனைப் பிறநாடுகளின் தவறுகளாகக் கருதமுடியாது. இலங்கை ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் தோல்விகளும் பிழைகளுமே இதற்குக் காரணமாக அமைகின்றன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரு ம்புகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com