siruppiddy

திங்கள், 26 மே, 2014

விக்கியின் தீர்மானம் தொடர்பில் பீரிஸ் கவலை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்தமை மிகப் பெரிய தவறாகம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் புது டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.எனினும், இந்த அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிராகரித்திருந்தார். நல்லெண்ண அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்...

வியாழன், 22 மே, 2014

யுத்தத்தின்போது 18500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்::

இலங்கையில் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் 18,500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆரம்பித்துள்ளது. இதன்போதே 13.590 பொதுமக்கள் மற்றும் 5000 பாதுகாப்பு படையினர் காணாமல்போயுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில், ஆணைக்குழு எப்போதும் சுதந்திரமாக...

வியாழன், 8 மே, 2014

தமிழர் அமைப்புக்கள் கனடாவில் ஒன்றுபட்டு முன்னெடுக்கும் -18 துக்க நாள்

முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை, கனடாவில் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றாக முன்னெடுக்கவுள்ளன. இதனை கடந்த மே-6ம் நாள் செவ்வாய்கிழமை ரொறன்ரேவில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். கனடாவின் ரொறன்ரோ, ஒட்டோவா, மொன்றியல், எட்மண்டன் ஆகிய பிரதான பெருநகரங்களில் தமிழீழத் தேசியத் துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பினையும் முதன்மைப்படுதாமல்...

வெள்ளி, 2 மே, 2014

ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை! அச்சுறுத்தல் :

உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை கீழ் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர்கள் தமது பணிகள் காரணமாக உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கடினமான பின்னணியில் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு...

www.nilavarai.com