
மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்ட வேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டது. இந்தபோதும் அவர் மன்னாரில் நேற்று மரங்களை நாட்டினார். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய அமைச்சருக்குமான கலந்துரையாடல் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் நேற்று நடைபெற்றது. கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த...