siruppiddy

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நீதிகேட்டு ஐ.நாமுன்றலில் ஒளிப்பட போராட்டம்!

சிறீலங்கா அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன அழிப்பு புகைப்பட கண்காட்சியுடன் மனிதநேய செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள். ஐ.நாவின் 25வது மனித உரிமை கூட்டத்தொடர் மார்ச் 3ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள்வரை நடைபெறவுள்ளது. இனஅழிப்பிற்கு நீதி கேட்டு தமிழின அழிப்பு புகைப்பட கண்காட்சி தொடராக ஐ.நா முற்றத்தில் நடைபெறவுள்ளது. மனிதநேய செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இனஅழிப்பிற்கு நீதிகேட்டு...

மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் போது ஜப்பான்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் ஜப்பான் வாக்களிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ஆதரவாகவோ செயற்படாது என தெரிவிக்கப்படுகிறது. வாக்களிப்பு நடத்தப்பட்டால் வாக்களிப்பில் பங்கேற்காதிருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகத் தகவல்கள் தெரிவக்கின்றன. அமெரிக்கா குறிப்பிடுவதனைப் போன்று...

வியாழன், 27 பிப்ரவரி, 2014

தனிஈழ சர்வஜென வாக்கெடுப்புக்கு த.தே.கூட்­ட­மைப்பு வர­வேற்பு

இலங்கைத் தமிழ் மக்­களின் பி­ரச்­சி­னைக்கு இலங்கைத் தமி­ழர்கள் மத்­தியில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பினை நடத்­த­வேண்டும் என தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்­துள்­ள­மைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது வர­வேற்­பினைத் தெரி­வித்துள்ளது. கட்­சியின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இதனைத் தெரி­வித்தார். இலங்கை ஜனா­தி­ப­தி­யி­னு­டை­யதும் அர­சாங்­கத்­தி­னதும் தோல்­வியும்...

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தனி ஈழ வாக்குறுதி ஜெயாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

இலங்கையில் தனி ஈழம் அமைக்க இலங்கை வாழ் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவினால் இன்று (25) வெளியிடப்பட்டது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும்,...

சர்வதேச விசாரணை தேவை: நவி பிள்ளை அறிக்கை

இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு பொருத்தமான விசாரணையை நடத்த இலங்கை தவறிவிட்டது என்று ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் நவி பிள்ளையின் அறிக்கை ஒன்று கூறுகிறது. பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்படவே\ண்டும் என்று அந்த அறிக்கை...

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

இலங்கை அரசு முயற்சி: த.தே.கூட்டமைப்பு..

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையின் கடுமைத் தன்மையை தணிப்பதற்காக அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு தென்னாபிரிக்காவிற்கு தூதுக்குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான முயற்சிகளில் தென்னாப்பிரிக்கா அக்கறை செலுத்தி வந்திருக்கின்ற போதிலும், இலங்கை அரசாங்கம்...

வியாழன், 20 பிப்ரவரி, 2014

இலங்கைவெற்றி பெற மந்திர தந்திரம் செய்யும் !

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிக்கும் நோக்கில், ராஜபக்ஷ அரசாங்க மந்திர தந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மனிதன் புல்லை பிடித்தாவது உயிர் தப்பிக்க முயற்சிப்பது போல், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கொண்டு வரும் பிரேரணையை மந்திரீக சக்தி பயன்படுத்தியாவது...

புதன், 19 பிப்ரவரி, 2014

காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிப்பு: .

வடக்கு கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 35 சதவீதமான காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதி தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பாராளுமன்றில் யோகேஸ்வரன் எம்.பி ஆற்றிய உரை,இலங்கை அரசாங்கத்தால் காணி சார்பாக என்னென்ன திருத்தச் சட்டமூலம் கொண்டு...

திங்கள், 17 பிப்ரவரி, 2014

இறுதிநாள் சாட்சியப்பதிவுகள் ஆரம்பம்

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று நல்லூர் பிரதேச பிரதேச செயலகத்தை சேர்ந்த கிராம சேவகர் பிரிவில் உள்ள 4 பிரிவுகளைச் சேர்ந்த 52 பேர் சாட்சியப்பதிவுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்....

இலங்கை மீது தன்அறிக்கையில் கோருவார் நவிபிள்ளை;

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்றுக்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை (நவி பிள்ளை) பரிந்துரை செய்ய உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அத்தகைய ஒரு விசாரணைக்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்திய விதம் குறித்தும் தனது இலங்கைப் பயணம் குறித்தும் எதிர்வரும்...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

தென்மராட்சி வறணி மத்திய மகாவித்தியாலய உரையினை தேடி!!

  வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனினது தென்மராட்சி வறணி மத்திய மகாவித்தியாலய உரையின் ஒலிப்பதிவு நாடாவை தேடும் நடவடிக்கையில் இராணுவப்புலனாய்வினர் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களிடம் குறித்த ஒளி அல்லது ஒலிப்பதிவுகளை வழங்குமாறு நிர்ப்பந்தித்து வருவதாக தெரியவருகின்றது. இதனிடையே குறித்த நிகழ்வில் அழையா விருந்தாளியாக நுழைந்த மஹிந்த ராஜபக்ஸ சகோதரர்களுக்கு நெருக்கமான  ஒருவரே முதலமைச்சரினது...

திங்கள், 10 பிப்ரவரி, 2014

சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் மீள வலியுறுத்து

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு போர்க்குற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் மீளவும் வலியுறுத்தியுள்ளது.பிரிட்டன் நாடாளுமன்றத்தில், வெளிவிவகார பொதுநலவாயத்துறை அமைசர் ஸுவைவர்  உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.  அங்கு நடந்தேறிய போர்க் குற்றம் தொடர்பாக வெளிப் படை யான விசாரணை தேவை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வை,...

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

தமிழீழத் தேசியத் தலைவரின் பெயரால் மோதிக்கொள்ளும் !!

 தமிழீழத் தேசியத் தலைவரின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும் சிங்களத் தலைமைகள் அவரது பெயரால் இப்போதும் மோதிக்கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை மிக மோசமானவராகக் காண்பிக்க நச்சுக் கருத்தக்களை அள்ளியள்ளி வீசிய தலைமைகள் இப்போது அவர் புகழ்பாடவும், அவரை ஏனைய சிங்களத் தலைமைகளுக்கும் உயர்வாக ஒப்பிடவும் தொடங்கியுள்ளனர். இதில் முன்னணியில் இருக்கின்றார் சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தின் முன்னாள் தளபதியும், ஜனநாயகக் கட்சியின்...

வியாழன், 6 பிப்ரவரி, 2014

நீதிக்கான நடை பயணம்:8ம் நாளாக உலகத் தமிழ் மக்கள் அலையென!!

ஐநா நோக்கிய நீதிக்கான நடை ப்பயணம் வெற்றிகரமாக நேற்று Pijpelheide நகரத்தை வந்தடைந்தது. காலநிலை மழையும் குளிருமாக இருந்தபொழுதிலும் உறுதி தளராமல் தாய் மண்ணை மனதில் நிறுத்தி மனித நேயப்பணியாளர்கள் நடை பயணத்தை தொடர்ந்தனர். நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. நடை யணம் செல்லும் பாதையில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உரிமையுடனும் மனிதநேய பணியாளர்களை...

சனி, 1 பிப்ரவரி, 2014

சிங்களத்துக்கு சுதந்திர தினம் தமிழீழத்துக்கு கறுப்பு நாள்

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் அவர்களுக்கும் இவ் உலகுக்கும் நாம் ஈழத்தமிழர் என்பதை எடுத்துக்கூற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம். பிரித்தானிய காவல்துறையிடம் அனுமதி பெற்று இடம்பெறும் இவ் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஒரு தேசிய இனம் எமக்கான அடையாளங்களுடனும் விழுமியங்களுடனும் வாழும் ஒரு தமிழினம் என்பதை இவ் உலகுக்கு பறை சாற்றுவோ...

www.nilavarai.com