siruppiddy

புதன், 26 மார்ச், 2014

புலம்பெயர் அமைப்புக்களுக்கு நன்றி:தமிழ் தேசியக்..

அனைத்துலக விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு அழுத்தங் கொடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்றிருந்த விவாதத்தினைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியிருந்த ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அனைத்துலக நாடுகளது பெரும்பான்மை வாக்கினை அமெரிக்கத் தீர்மானம் பெற்றுக் கொள்ள வேண்டுமென...

ஞாயிறு, 23 மார்ச், 2014

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால் குறி தவறுமா?

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால், கிளிநொச்சியில் பொலிஸ்காரர் தப்பியிருப்பாரா என்று எதிர்கட்சியினர் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லட்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர் ரவிகரன் சவால் விடுத்தார். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட நாடகமே நடக்கிறது. வடக்கு மாகாணசபை அமர்வு கொஞ்சம் சூடாகியது. இருப்பினும் அமர்வு தொடர்ந்து களைகட்டவில்லை. அடிக்கடி காரசாரமான விவாதங்களை நடத்தும் சிவாஜிலிங்கம் அவைக்கு நேற்று வராததால் அவை சோபையிழந்தே, வழமை போன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. வடக்கு...

சனி, 22 மார்ச், 2014

சி.வி, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகிறது:

 சி.வி விக்னேஸ்வரன் எமது நிலையை அடுத்த நாடுகளுக்கு சொல்லி அழ வேண்டிய நிலைமையை அரசாங்கமே தந்துள்ளது ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடகில் பல்வேறு கெடுபிடிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. பழைய நாட்களை எமக்குணர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.மன்னாரில்...

வியாழன், 20 மார்ச், 2014

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது..

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையமாக கொண்டு சிறிலங்கா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரென்சு மொழிபேசும் நாடுகளை மையமாக கொண்டு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயல்முனைப்பினைத் தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு ஆபிரிக்க நாட்டுத் தலைநகரங்களில் நேரயாகவும் களப்பணியாற்றப்பட்டு வரும் நிலையில், ஜெனீவாவிலும் இதனை தீவிரப்படுத்தும் பொருட்டு, பிரென்சு மொழி பேசுகின்ற வள அறிஞர்களையும் ஐ.நாவுக்கான தனது வள அறிஞர் குழுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் களமிறக்கியுள்ளது. ஏலவே...

புதன், 19 மார்ச், 2014

நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்தினை

 எழுச்சியுடன் வரவேற்போம் : சுவிஸ் வாழ் தமிழ் சிங்கள அரசின் தமிழினப்படுகொலைக்கு நீதிகோரும் விடுதலைப் பயணத்தில், லண்டனில் புற்பட்டு ஜெனீவா ஐ.நா முன்றலை எட்டவுள்ள நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்தினை எழுச்சியுடன் வரவேற்க, அணிதிரளுமாறு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வரும் வெள்ளிக்கிழமை (21-03-2014) ஜெனீவா ஐ.நா முன்றலை இந்த நடைப்பயணம் எட்டவுள்ளது.ஐ.நா மனித உரிமைச்சபையின் 25வது கூட்டத் தொடங்கியிருந்த மார்ச் 3ம்...

ஞாயிறு, 16 மார்ச், 2014

தமிழ்மக்களின் பிரச்சினையை மனதில் கொண்டே

 அமெரிக்கா பிரேரணையை தமிழ் மக்களாகிய எமது பிரச்சினைகளை மனதில் கொண்டுதான் அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது. அந்த வகையிலேயே ஜெனிவாவில் கொண்டு வரப்படும் அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ள என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டமைக்கு காரணம் என்ன என கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை நிருபர் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.அவர்...

தீர்மானத்தை விமர்சித்து குழப்ப வேண்டாம்

ஐ.நா.தீர்மானத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப் படுத்துவோர் விமர்சித்து குழப்ப வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் நகைப்பிடமாகத் தோன்றுகின்றது. குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.தமிழ் மக்களின் விடுதலைப்; போராட்டத்தை கொச்சைப் படுத்தி அப்போராட்டமானது வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளால் விரக்தியடைந்த...

சனி, 15 மார்ச், 2014

ஊடகங்களின் கவனத்தினைப் பெற்ற சிறுமி விபூசிகா :

  இலங்கைப் படையினரால் கடத்தப்பட்ட தாயும் மகளினதும் விவகாரம் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. இத்தகவலை அனைத்துலக ஊடகங்களான ஏபி( AP) மற்றும் சனல்-4 ஆகியன வெளியிட்டுள்ளன. 14 வயதுடைய சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயார் இலங்கை படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய மறுகணமே, இவ்விவகாரத்தினை EINPRESSWIRE எனும் அனைத்துலக செய்தி வழங்கியூடாக அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில் அனைத்துலகத்துலக...

வெள்ளி, 14 மார்ச், 2014

பாரிய விரிசல்! ஐ.நாவில் சிங்களவர்களும் போர்க்குற்ற

எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சிங்கள சகோதரர்களும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துகின்றனர். இந்தநிலையில் ஐ.நாவில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கலாம் என ச.வி.கிருபாகரன் தெரிவித்தார். இலங்கை- இந்தியாவிற்கிடையில் பாரிய விரிசல், இது ஐ.நாவில் தாக்கம் செலுத்துவதுடன் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் தெரிவித்தார். நேற்றய...

வியாழன், 13 மார்ச், 2014

சிறுமி சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டார் :

காணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில், அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றிருந்த 13வயது சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுதொடர்பில் அனைத்துலகத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அச்சிறுமியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் அனைத்துலக சமூகத்தினைக் கோரியுள்ளது. கிளிநொச்சி தருமபுரத்தினைச் சேர்ந்த விபூசிகா எனும் 13வயதுடைய சிறுமியே இன்று சிறிலங்கா...

புதன், 12 மார்ச், 2014

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே! இதனை சர்வதேச

 அமைப்புக்களுக்கு நாம் வலியுறுத்த வேண்டும்” நாடு கடந்த தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன் ஸ்ரீலங்காவில் 2009 மே மாதம் 19,20ம் திகதிகளில் அரச படையினர் நடாத்திய போர் நடவடிக்கைகளினால் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ள பல சர்வதேச அமைப்புக்கள் அது தமிழ் இனத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் இனஅழிப்பு நடவடிக்கை என்ற வார்த்தையே இடம்பெறவில்லை....

இந்தியாவிற்கு விஜயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்தில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தியா அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு...

செவ்வாய், 11 மார்ச், 2014

ஐ.நா சனல்-4 வின் புதிய காணொளி! எதுவும் தெரியாதென்கிறது

 இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றிருந்த போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்ததை சித்தரித்துக் காட்டும் சனல் 4 தொலைக்காட்சி சர்ச்சைக்குரிய புதிய காணொளி குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் காணொளி குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் புதிய பேச்சாளரான ஸ்ரிபன்...

திங்கள், 10 மார்ச், 2014

மக்கள் வெள்ளம் ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான **

 இலங்கையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு சுயாதீன விசாரணை வேண்டும் என உலகின் பல பாகங்களில் இருந்து ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்தனர்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் 25வது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு நியாயமான சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி உலகின் பல பாகங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து பெரிய...

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஐ.நா முன்றிலில் அலையெனத் திரள்வோம் :

நாடுகடநத தமிழீழ தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் அனைத்துலக விசாரணையினை வென்றெடுக்க ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. சிறிலங்கா விவகாரத்தில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர், அனைவரது கவனத்தினையும் பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய தமிழர்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஜெனீவாவில் வரும் திங்கட்கிழமை (10-03-2014) இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன...

வெள்ளி, 7 மார்ச், 2014

தமிழ் குழுக்கள் ஆஸியிடம் விண்ணப்பம்

இணை அனுசரணை வழங்குமாறு!!! இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் யுத்தக்குற்றங்களை ஆராய்வதற்கான ஒரு சர்வசே விசாரணையைக் கோரும் அமெரிக்க தீர்மானத்தை வரவேற்றுள்ள தமிழ் குழுக்கள் அப்பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளன என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட தீர்மான வரைவு இராணுவ மிகை நடவடிக்கைகள் தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை...

வியாழன், 6 மார்ச், 2014

லண்டனில் இருந்து புறப்பட்டது ஜெனீவாவினை நோக்கிய

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச்சபைத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஜெனீவாவினை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் லண்டனில் இருந்து புறப்பட்டது. பிரித்தானிய பிரதமருக்கு கோரிக்கை மனுவொன்றினைக் கையளித்தவாறு, பிரித்தானிய பிரதமர் அலுவலக வாயிலில் இருந்து இந்த நடைப்பயணம் புறப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிகளான திருக்குமரன் (பிரித்தானியா) ,யோகேந்திரன் (கனடா) ஆகியோருடன் அமிர்தம் ஜயா அவர்கள் பொதுமகனாக...

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரிக்க முடியாது!

வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட மாட்டாது என அரசாங்கம் ஜெனிவாவில் அறிவித்துள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் ஆதாரங்கள் கிடையாது.எனவே விசாரணை நடத்தப்பட மாட்டாது என ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தெரிவித்துள்ளார். எந்தவொரு சாட்சியமும் இல்லாத சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது எவ்வாறு? இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க விரும்பும் சாட்சியாளர்களை அரச சார்பற்ற நிறுவனங்களின்...

செவ்வாய், 4 மார்ச், 2014

தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி

அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச தீர்மானம் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு...

திங்கள், 3 மார்ச், 2014

இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு தென்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு தென் ஆபிரிக்காவிடம், புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் தென் ஆபிரிக்க அமைப்பு கோரியுள்ளது.தென் ஆபிரிக்க தமிழர் பேரவை, தமிழர் இணைப்புக் கமிட்டி, உலக சைவப் பேரவை உள்ளிட்ட சில அமைப்புக்கள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரியுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்...

சனி, 1 மார்ச், 2014

பிரதிநிதிகள் குழுவொன்றை TNA ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்க

 நேர்மையான மற்றும் நம்பகமான பிரதிநிதிகள் குழுவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் மிகவும் முக்கியமான ஓர் சந்தர்ப்பமாகும்...

குழுவொன்றை அனுப்ப தீர்மானம்: த.தே.கூ

 ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப திட்டமிட்டு வருகின்றது எனவும் கட்சியின் முக்கியஸ்தர்கள் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தனர். யாழில் கடந்த வியாழக்கிழமை (27) நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாண சபை அங்கத்தவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இவ்விடயம்...

www.nilavarai.com