siruppiddy

வியாழன், 31 அக்டோபர், 2013

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கு இந்திய பிரதமர் வருகை தர வேண்டும என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இந்திய பிரதமருக்கு கடிதம்...

திங்கள், 28 அக்டோபர், 2013

பிரதமருக்கும் மற்றும் பலருக்கும் நன்றி தெரிவிக்க திரண்ட தமிழர்கள்..

கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள்,  தமது சக கனடிய உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்க ஒட்டாவா பாராளுமன்றம் முன் தமிழர்கள் ஒன்று திரண்டு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் அணிதிரண்ட கனடியத் தமிழர்களின் படத்தொகுப்பு &nbs...

சனி, 26 அக்டோபர், 2013

பொழிலன் பெரும் தமிழர் கூட்டத்தின் வாழ்த்து முழக்கத்துடன்

 இந்திய அரசு தொடக்கக் காலம் முதலே ஈழத் தமிழர்க்கு இரண்டகம் இழைத்து வருகிறது. இராசிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை என்கிற பெயரிலான கொலைப்படை ஈழத் தமிழர்க்கு இழைத்த கொடுமைகள் எண்ணற்றவை. இவற்றை நாடே கண்டித்தது. இந்தக் கொலைப்படை தன் 'பணிகள்' முடித்து இந்தியா திரும்பிய போது ஈழத் தமிழர்க்கு எதிரான பொய்யான பரப்புரைகளைக் கண்டித்து 1988இல் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்...

சிறுவர் துஸ்பிரயோகத்தை கண்டித்து விழிப்புணர்வு நடவடிக்கை

சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழித்து அனைத்து சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு உறுதிபூணுவோம் என்ற மக்கள் விழிப்புணர்வு போராட்டம் நேற்று மாலை 4 மணியளவில் யாழ்.பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களுக்கு துண்டப்பிரசுரங்களை வழங்கியதுடன் சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுகளையும் மேற்க்கொண்டனர்.மேலும், சிறுவர்களது ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியினை பாதிக்கும்...

திங்கள், 21 அக்டோபர், 2013

முன்னாள் போராளிகளையும், மக்களையும்

போராளிகள் வருவார்களா? மௌனிக்கிறார். முன்னாள் போராளிகளையும், மக்களையும் காக்க புலம் பெயர் மக்களை அழைக்கும்: செல்வம் பா.உ எமது போராளிகள் வருவார்களா போராட்டம் வெடிக்குமா மௌனத்துடன் தயகத்தில் முன்னால் போராளிகளையும் மக்களையும்  காக்க புலம் பெயர் உறவுகள் இணைவது காலத்தின் கட்டாயம் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் லங்காசிறி வானொலியின் வாராந்த அரசியல் களம்...

ஈழத்தமிழர் வாழ்வின் வலியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் 'ராவண தேசம்'

  அஜெய் என்பவர் இயக்கி நடிக்கும் படம் ''ராவண தேசம்'' இப் படத்தை நியூ எம்பயர் செல்லுலாயிட்ஸ் சார்பில் லட்சுமிகாந்த் தயாரிக்கிறார். இந்த படம் ஈழத்து மக்களது  அகதிப்பயணத்தை மையமாக கொண்ட படமாக தெரிவித்துள்ள இயக்குனர் மேலும் தெரிவிக்கையில், போர் காலத்தில் ஈழத்திலிருந்து அப்பாவி மக்கள் படகுகளிலும் சிறு கப்பல்களிலும் வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடினார்கள். அதில் நடுக்கடலில் ஜலசமாதி ஆனவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொடிய பயணத்தை மையமாக...

சனி, 19 அக்டோபர், 2013

நிமலராஜன் மறைந்து 13 வருடங்கள் நிறைவு

  நிமலராஜன் கொலை செய்யப்பட்டு, 13 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி,...

வெள்ளி, 18 அக்டோபர், 2013

தலிபான்கள் சதி ஜேர்மன் தூதரகத்தை தாக்க!!

தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் அடிப்படையில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஜேர்மன்  தூதரகத்தை தாக்கப் போவதாக தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தூதரகமானது சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர் மார்ட்டின் சாபிர் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை செய்தி வந்துள்ளது. மேலும் அந்த தகவல்களின் அடிப்படையில் தூதரகமானது...

இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற அகதி கைது

மட்டக்களப்பு,கல்லடி ஆராயம்பதியைச் சேர்ந்த சின்னத்துரை சுதாகரன் (வயது33) 2012ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து விசா மூலம் இந்தியாவுக்கு வந்து சென்னையில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு செல்ல விசாக்காலம் 2012 ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்ததால் திரும்பிச் செல்ல முடியாமல் சென்னை காவந்திர அகதி முகாமில் தலைமறைவாக தங்கி இருந்துள்ளார். இலங்கைக்கு படகு மூலம் செல்ல வியாழக்கிழமை காலையில் இராமேஸ்வரம்...

புதன், 16 அக்டோபர், 2013

தலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம்

  ஆண்டுகளாகத் தமிழினத்தில் பிறக்கவில்லை! - நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் Top News  இயக்கத் தலைவர் திரு பழ நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு வைப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். திரு பழ நெடுமாறன் அவர்கள் அரும்  பாடுபட்டு தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். இந்த நூல் தவைவர் பிரபாகரனின் முழு வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியாது. அவரைப்...

வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அரசு நிறைவேற்றியேயாக வேண்டும் -

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. இணைந்து செயற்படப் போவதுமில்லை. நாம் சட்டத்தின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதில் யாருடைய தலையீடும் அல்லது அடக்குமுறையும் இருக்கக்கூடாதென்பதே...

செவ்வாய், 15 அக்டோபர், 2013

இறுதிக் போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ஒத்துழைப்பு

  இறுதிக் கட்ட போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட போரின் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இலங்கை அரச இராணுவத்திற்கு உதவியுள்ளனர். பிரிட்டனின் PSNI என்னும் வடஅயர்லாந்து பொலிஸ் பிரிவினர் இவ்வாறு உதவியுள்ளனர். இறுதிக் கட்ட போரின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவி வழங்கியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரித்தானிய இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2007ம்...

தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

  தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: வைகோ வேண்டுகோள்- இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் தியாகு, போராட்டத்தை கைவிட வேண்டுமென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு 14வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது...

திங்கள், 14 அக்டோபர், 2013

முதலமைச்சருக்கு அரசாங்கம் அழைப்பு

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளது. வடமாகாண சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­  தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழமை. இதில் மாத இறுதி அமர்வில்...

பீங்கான் கோப்பை: ரூ.110 கோடிக்கு விற்பனை

சீன பீங்கான் கிண்ணம், ஹாங்காங்கில் உள்ள ஒரு ஏல விற்பனை நிலையத்தில், 110 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டின், சாங்க்வா காலத்தில், சீனாவில், கலை மற்றும் கைத்தொழில் புகழ் பெற்று இருந்தன. பீங்கானால் செய்யப்பட்ட, சிறிய, அழகான, இந்த 'மிங்' கிண்ணத்தை, அப்போதைய பேரரசர் குவாங் பயன்படுத்தினார். ஆசிய கலைப் பொருட்களின் விற்பனைக்குப் பெயர் பெற்ற, ஹாங்காங்கின், சூதேபி ஏல நிறுவனத்தில், நடந்த விற்பனையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய...

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

அபாயம் அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் ??

கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்படும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.  நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையில், "இந்த நிலைமையைக் கண்டு நீங்கள் அனைவரும் வருத்தம் அடைந்திருப்பீர்கள். சாதாரண நிலையில் நாடு இல்லை. 17...

மக்களை ஏமாற்றிவிட்டு அடிபணிவுக்குத் தயாராகும் கூட்டமைப்பு -

வடக்கு மாகாணசபை தமிழர்களுக்கு வரமா? சாபமா? என்ற எண்ணத்தைத் தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கின்றது. வேட்பாளர் தெரிவில், அமைச்சர் தெரிவில், சத்தியப் பிரமாணம் எடுத்தல் தொடர்பில் என நீண்ட உட் சண்டைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வாக்களித்த மக்களின் கனவுகளில் வாய்க்கரிசி இடவே கூட்டமைப்பு இப்போதும் சித்தமாய் இருக்கிறது. ஆம், தமிழ் மக்கள் அனைவருடைய மனங்களையும் இப்போது உறுத்திக் கொண்டிருக்கும்...

நீதி தவறிய நீதியரசர் விக்னேஸ்வரன் : அதிரவைக்கும்

வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரது செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்திருக்கின்ற நிலையில் தற்போது வட மகான சபைக்கான செயலாளர்கள் நியமனம் தொடர்பில் சிவி விக்னேஸ்வரன் தனது கொழும்பு வாழ் உறவினர்களையும் அரச விசுவாசிகளாக அறியப்பட்டவர்களையும் சிபார்சு செய்திருப்பது மேலும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக...

ஸ்ரீமாணிக்கபிள்ளையார்பாடல்

இந்த கிராமத்து இணையம் மிக விரைவில் மலரும் மிழிரும் ...

www.nilavarai.com