siruppiddy

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

நீதி தவறிய நீதியரசர் விக்னேஸ்வரன் : அதிரவைக்கும்


வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரது செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்திருக்கின்ற நிலையில் தற்போது வட மகான சபைக்கான

செயலாளர்கள் நியமனம் தொடர்பில் சிவி விக்னேஸ்வரன் தனது கொழும்பு வாழ் உறவினர்களையும் அரச விசுவாசிகளாக அறியப்பட்டவர்களையும் சிபார்சு செய்திருப்பது மேலும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் அமைச்சர்களான ஜி எல் பீரிஸ், ஜோன் செனவிரத்ன மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரது நெருங்கிய நண்பருமான ரத்மலான இந்து கல்லூரியின் சர்ச்சைக்குரிய முன்னால் அதிபரான மன்மதராஜன் சிவி விக்னேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் சிவி விக்னேஸ்வரனுக்கு மச்சான் முறையானவர். யாழ் மாவட்டத்த்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 2011 ஆம் அண்டு நடைபெற்ற போது அமைச்சர் ஜிஎல் பீரிசுடன் இவர் யாழ்ப்பாணம் சென்று யாழ் கச்சேரி முன்பாகவுள்ள அரச கட்டடத்தில் பல வாரங்கள் தங்கி நின்ற

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக பிரசாரம் செய்திருந்தார். அத்துடன் ரத்மலான இந்து கல்லூரியில் இவர் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற போது தகைமைகள் எதுவும் அற்ற தனது மனைவியை அதிபராக ஆக்குவதற்கு இவர் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் கடந்த வருடம் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.

இதேவேளை, மற்றொரு நெருங்கிய உறவினரான நிமலன் கார்த்திகேயனையும் சிவி விக்னேஸ்வரன் செயலாளர்களில் ஒருவராக நியமித்திருக்கிறார். இவர் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஊழல் பதவிகளுக்கு ஆசைப்படாமல் மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்பட வேண்டும் எனக் கூறியுள்ள விக்னேஸ்வரன், சுமார் பத்து துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com